search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவல்துறை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போலீசார் மடக்கி பிடித்து விசாரிக்கவே அது கடத்தப்பட்ட குழந்தை என்பது உறுதியானது.
    • குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை மேற் கொண்டனர்.

    புதுச்சேரி லாஸ் பேட்டை நரிகுறவர் காலனியை சேர்ந்த முத்துப்பாண்டி விஜயலட்சுமி கடற்கரையில் பலூன் விற்கும் தொழில் செய்து வருகிறனர். இந்நிலையில் புதுச்சேரி கடற்கரை பகுதியில் விளையாடி கொண்டிருந்த அவர்களது மூன்றரை வயது குழந்தை திடீர் என்று மாயமானது. இது குறித்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார் சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்த போது, இரண்டு பேர் குழந்தையை கடத்தி ஒரு பெண்ணிடம் கொடுத்து ஆட்டோவில் அனுப்பி வைத்தது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் விசாரணையை தீவிர படுத்திய நிலையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் குழந்தையுடன் ஒரு பெண்ணை கரைக்கால் சாணகரை பகுதியில் இறக்கி விட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காரைக்கால் போலீசார் அந்த பகுதியில் விசாரணை நடத்திய போது பெண் ஒருவர் குழந்தையுடன் தப்பி செல்ல முயற்சித்துள்ளார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரிக்கவே அது கடத்தப்பட்ட குழந்தை என்பது உறுதியானது.

    இதனையடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கடத்தல் தொடர்புடைய மேலும் இருவரை புதுச்சேரியில் கைது செய்தனர். பின்னர் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை மேற் கொண்டனர். கடத்தப்பட்ட குழந்தையை 24 மணி நேரத்திற்குள் மீட்ட போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    • அந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை.
    • போலீசார் சிறுவனை தேடும் பணியை துவங்கினர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் போவை பகுதியில் உள்ள அசோக் நகரில் ஆறு வயது சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாட சென்றான். விளையாட சென்ற சிறுவன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்வில்லை. இதையடுத்து, பெற்றோர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும், சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

    உடனே காவல் நிலையம் விரைந்த பெற்றோர், தங்களின் மகன் காணாமல் போனது பற்றி புகார் அளித்தனர். காணாமல் போன சிறுவன் விளையாடி கொண்டிருந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை. இதன் காரணமாக போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சிறுவனை தேடும் பணியை துவங்கினர்.

    அதன்படி மோப்ப நாய் "லியோ" சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டது. முதலில் சிறுவன் அணிந்திருந்த டி-சர்ட் ஒன்றை மோப்பம் பிடித்த லியோ, பிறகு சிறுவன் விளையாடி கொண்டிருந்த மைதானத்திற்கு அழைத்து செல்லப்பட்டது. அங்கிருந்து தேடலை துவங்கிய லியோ மைதானத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவிலேயே சிறுவனை கண்டுபிடித்து அசத்தியது.

    மோப்ப நாய் தேடுதல் வேட்டையில் இறங்கிய மூன்றரை மணி நேரத்தில் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டான். அதிநவீன தொழில்நுட்ப உதவிகள் இல்லாத பட்சத்தில் போலீசார் தங்களுக்கே உரிய பாணியில் தேடுதல் வேட்டையை நடத்தியதோடு, சில மணி நேரங்களில் சிறுவனை காப்பாற்றிய சம்பவம் பொது மக்களிடையே வரவேற்பை பெற்றது. 

    • கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பட்டாசுகள் வெடித்ததாக 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுக்க பட்டாசுகள் வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தீபாவளி தினத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

    இதுதவிர தடை செய்யப்பட்ட, ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி சென்னையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    நேற்றிரவு முதல் தற்போது வரை அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்ததாக 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்க சென்னை காவல் துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது.

    • கனரக வாகன போக்குவரத்தை பஜார் வீதியில் கட்டுப்படுத்த வேண்டும்.
    • வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வியாபாரிகளிடையே கலந்தாலோசனை காவல்துறை சார்பில் காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையில்காவல் நிலையத்தில் நடைபெற்றது.

    இதில் சமீப காலங்களாக சைபர் கிரைம் குற்றங்கள் பெருமளவில் நடைபெற்று வருவதால் குறிப்பாக அலைபேசியில் 91140என்ற எண்ணில் துவங்கி நமக்கு அழைப்பு வந்தால் அதனை நாம் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் இதனால் நமது வங்கிக் கணக்குகளில் உள்ள பணங்கள் திருடப்படுவதாகவும் பல குற்றச்சாட்டுகள் காவல் நிலையத்திற்கு வருவதால் வியாபாரிகளும் பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் பட்டாசு லைசென்ஸ் இல்லாத கடைகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் , கஞ்சா விற்பனை செய்தல் குறித்த தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டினால் காவல் நிலையம் மற்றும் செல்போனிற்கு தகவல் கொடுத்தால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனை நடைபெற்றது.

    பின்னர் வியாபாரிகள் தெரிவித்ததாவது பண்டிகை காலங்களில் மீஞ்சூர் பஜார் வீதியில் பொதுமக்கள்கூட்டம் அதிகம் காணப்படுவதால் காலை மாலை இரவு நேரங்களில் பஜார் வீதியில் போலீசின் கண்காணிப்பு ரோந்து பணிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கனரக வாகன போக்குவரத்தை பஜார் வீதியில் கட்டுப்படுத்த வேண்டும்.

    மீஞ்சூர்ரயில் நிலையத்திற்கு அருகில் அரியன் வாயல் பகுதியில் உள்ள பேருந்து மற்றும் ஆட்டோ நிறுத்துமிடங்களை அரியன் வாயில் அரசு பள்ளிக்கூடத்திற்கு எதிரில் மாற்றி அமைக்க வேண்டும் எனவும் இதனால் ரெயில் பயணிகள் மாணவ மாணவியர்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பயணிக்க இயலும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    மேலும் வியாபாரிகள் அனைவரும் தங்கள் கடைகளில் வெளிப்புறத்தையும் இணைக்கும் விதமாக கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மீஞ்சூர் பஜார் வீதியில் உள்ள புறக்காவல் நிலையத்தில் காவலர்கள் அமர்ந்து ஒலிபெருக்கியில் விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டத்தில்முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆய்வாளர் காளிராஜ் தெரிவித்தார் இந்த கூட்டத்தில் மீஞ்சூர் அத்திப்பட்டு கவுண்டர்பாளையம் பட்ட மந்திரி நந்தியம்பாக்கம் ரமணா நகர் நாலூர் கேசவபுரம் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கிரைம் ஆய்வாளர் சுதாகர், மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்கம் ஷேக் அகமது துணைத் தலைவர் அலெக்சாண்டர் மற்றும் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 3 நாட்கள் முத்துராம லிங்கத் தேவர் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா நடைபெறுகிறது.
    • ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை மூன்று நாட்கள் முத்துராம லிங்கத் தேவர் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா நடை பெறுகிறது. குருபூஜை விழாவை முன்னிட்டு ராம நாதபுரம் மாவட்டத்தில் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணி யில் இருக்கும் வகை யில் பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்பட்டு சுமார் 12,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப டுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும், இராமநாதபுரம் மாவட்டத்தில் பிரிவு 144 தடை உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில், தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள வரும் அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் மற்றும் பொது மக்கள் காவல்துறையில் உரிய அனுமதி பெற்று தங்க ளது சொந்த வாகனங்க ளில் மட்டும் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டும், வாடகை வாகனங்கள் மற் றும் இருசக்கர வாகனங்க ளில் வருவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

    குருபூஜைக்கு வருபவர்க ளின் வசதிக்கென தேவைப் படும் கிராமங்களிலி ருந்து தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. அவ்வாறு வந்து செல்பவர்கள் விபத்து களை தவிர்க்கும் பொருட்டு, வாகனத்தின் வெளிப்பு றத்தில் தொங்குவது, மேற்கூ ரையில் அமர்வது, வெடி வெடிப்பது போன்ற விதி மீறல்களிலும் ஈடுபடக் கூடாது. குருபூஜைக்கு வந்து செல்பவர்கள் தேவையில் லாத பிரச்சினைகளை தவிர்க்கும் பொருட்டு, சமு தாய ரீதியிலான கோஷங் களை எழுப்பக்கூடாது.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் நடைபெற உள்ள தேவர் குருபூஜையை முன் னிட்டு கலந்து கொள்ள வரும் நபர்கள் 144 தடை உத்தரவில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை தவறாது பின்பற்ற கேட்டுக்கொள் ளப்படுகிறது. மேலும் விதி மீறல்களில் ஈடுபடும் நபர் களை கண்காணித்து நடவ டிக்கை எடுக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 37 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    கூடுதல் பேருந்துகளில் வருபவர்களின் நடவடிக்கை களை கண்காணிக்க ஒவ் வொரு கூடுதல் பேருந்திலும் 2 காவலர்கள் நியமிக்கப்பட்டு பயணம் செய்பவர்களின் நடவடிக்கைகளை கண்கா ணிக்கும் வகையில் 300 உடையில் அணிந்து கொள் ளும் பிரத்யேக கேமராக்கள், பேருந்துகளில் பாது காப்பு பணியில் இருக்கும் அனைத்து காவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

    பசும்பொன் மற்றும் கமுதி பகுதிகளில் முக்கிய இடங்களில் குருபூஜைக்கு வந்து செல்லும் நபர்களின் விதிமீறல் செயல்களை கண் காணித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, டிரோன் கேமராக்கள் 3, மொபைல் கேமரா வாக னங்கள் 5, மொபைல் கேமராக்கள் 9 இடங்களிலும் மற்றும் கமுதி மற்றும் பசும் பொன் பகுதிகளில் முக்கிய இடங்களில் 100 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது.

    அத்துடன் மாவட்டம் முழுவதிலும் 57 இருசக்கரம் மற்றும் 53 நான்கு சக்கர வாகன ரோந்து தனிப்படை கள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், விதிமீ றல்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கடந்த வருடங்களில் நடை பெற்ற தேவர் குருபூஜையில் விதிமீறலில் ஈடுபட்டோர்மீது 294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 280 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

    • சேலம் மாவட்டம் சங்ககிரி உட்கோட்ட காவல்துறை சார்பில் பெண் குழந்தைகளின் தற்காப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி
    • பெண் குழந்தைகள் பள்ளி இடை நிற்றலை தவிர்த்தல், குழந்தை திருமணம், பாலியல் துன்புறுத்தல், தகவல் தொழில்நுட்பம், தற்காப்பு கலை

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி உட்கோட்ட காவல்துறை சார்பில் பெண் குழந்தைகளின் தற்காப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சியானது சங்ககிரி ஆர்.எஸ். அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமை வகித்தார்.

    இதில் சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சைமன்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெண் குழந்தைகள் பள்ளி இடை நிற்றலை தவிர்த்தல், குழந்தை திருமணம், பாலியல் துன்புறுத்தல், தகவல் தொழில்நுட்பம், தற்காப்பு கலை ஆகியவற்றை குறித்து எடுத்துக்கூறி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு சிலம்பு போட்டி நடந்தது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் பரிசுகள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் விஜய் ஆனந்தன் மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • கொள்ளை சம்பவம் முழுக்க சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கிறது.
    • ஏ.டி.எம். இயந்திரத்தில் கயிறு கொண்டு கட்டி இழுக்க முயற்சித்தனர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் நடைபெற்ற ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் பேசுபொருளாகி இருக்கிறது. ஹாலிவுட் திரைப்பட சீரிஸ் fast and furious-இல் வரும் காட்சியை போன்று, ஏ.டி.எம். இயந்திரத்தில் கயிறு கட்டி, அதனை கார் கொண்டு இழுத்துச் செல்ல முகமூடி அணிந்த கும்பல் முயற்சித்து இருக்கிறது.

    இந்த கொள்ளை சம்பவம் முழுக்க முழுக்க அங்கு வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோவை வைத்துக் கொண்டு போலீசார் கயவர்களை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் செப்டம்பர் 6-ம் தேதி அகிகாலை 3.00 மணி அளவில் நடைபெற்றது.

    அப்போது முகமூடி அணிந்த நிலையில், இருவர் ஏ.டி.எம். மையத்தை அடைந்தனர். வழக்கமாக ஏ.டி.எம். இயந்திரத்தை உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல், இவர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தில் கயிறு கொண்டு கட்டி இழுக்க முயற்சித்தனர். இவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

    ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த பாதுகாப்பு உபகரணங்கள் காவல் துறைக்கு எச்சரிக்கை விடுக்க, காவலர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு விரைந்தனர். எனினும், காவலர்கள் வருவதற்குள் கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

    • 26 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
    • கல் வீச்சு வழக்குகளில் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    நெய்வேலி போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை மற்றும் கல்வீச்சு சம்பவங்கள் தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    வடக்கு மண்டலத்தில் பல்வேறு காவல் நிலைய எல்லைகளில் சுமார் 90 இடங்களில் மறியல் போராட்டங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நெய்வேலி நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ஆகாஷ் உள்ளிட்ட 26 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

    2 இளம்சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். பா.ம.க. தலைவர் கைதை தொடர்ந்து 4 இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது. கடந்த 26, 28-ந்தேதிகளில் பதிவு செய்யப்பட்ட கல் வீச்சு வழக்குகளில் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    • என்.எல்.சி. நிர்வாகம் விளை நிலத்தில் பயிர்களை அழித்தது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
    • பயிர் உயிருக்கு சமம். அறுவடை காலம் வரை காத்திருந்திருக்கலாம்.

    சிதம்பரம்:

    புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தீட்சிதர்கள் சார்பில் ஜெராம தீட்சிதர் வரவேற்பு அளித்து பிரசாதம் வழங்கினார். பின்னர் அவர் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதியிலும் தரிசனம் செய்தார்.

    அதனை தொடர்ந்து தில்லை காளியம்மன் கோவிலுக்கு சென்று அங்கும் அம்மனை வழிபட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காரைக்காலில் நிர்வாக ரீதியான ஆலோசனை கூட்டத்திற்கு செல்லும் வழியில் சிதம்பரம் நட ராஜர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தேன். ஆன்மிகம் இல்லை என்றால் தமிழ் இல்லை. தமிழை வளர்த்தது ஆன்மிகம்தான்.

    என்.எல்.சி. நிர்வாகம் விளை நிலத்தில் பயிர்களை அழித்தது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. பயிர் உயிருக்கு சமம். அறுவடை காலம் வரை காத்திருந்திருக்கலாம். ஆனால், என்.எல்.சி. நிர்வாகம் ஏற்கனவே நிலத்தை கையகப்படுத்தி விட்டோம் என்று கூறுகிறது. இங்கு இடைவெளி எப்படி வந்தது? என்பது தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
    • சட்டத்தை மீறிய 2 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் என்எல்சி நிர்வாகம் விரிவாக்கப் பணிகளை தொடங்கி உள்ளது. வளையமாதேவியில் பரவனாறு வாய்க்கால் அமைக்கும் பணியை என்.எல்.சி. நிறுவனம் தொடங்கியது. இதற்காக அங்கு பயிரிடப்பட்ட நெற் பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அழித்து பணிகளை தொடங்கினார்கள். இதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

    பயிர்கள் அழிக்கப்படுவதை கண்டித்தும், நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்தும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று என்எல்சி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

    அன்புமணி உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்ட நிலையில், போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் தாக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில், பாமக போராட்டம் மற்றும் நடவடிக்கை குறித்து கடலூர் மாவட்ட காவல்துறை விரிவான விளக்கம் அளித்துள்ளது. என்.எல்.சி. முற்றுகை தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 26 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 26 மற்றும் 28ம் தேதிகளில் பதிவு செய்யப்பட்ட கல்வீச்சு வழக்குகளில் 11 பேர் கைது செய்யப்பட்டதாகவும், சட்டத்தை மீறிய 2 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

    சுமார் 900 சாலை மறியல் போராட்டங்கள் நடத்த முயன்ற 2000 பாமகவினர் தடுப்பு நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் கடலூர் காவல்துறை கூறியுள்ளது.

    • கடந்த காலங்களில் ஆற்றிய பணிகளையும் எடுத்துரைத்து அவருக்கு புகழாரம் செலுத்தப்பட்டது.
    • டி.ஜி.பி.அருண் தலைமையில் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவ லகத்தில் கோவை சரக டி.ஐ.ஜி. மறைந்தவிஜயகுமார். திரு உருவப்படத்திற்கு தமிழ்நாடு சட்ட ஒழுங்கு காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.அருண் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி , அவர் கடந்த காலங்களில் ஆற்றிய பணிகளையும் எடுத்துரைத்து அவருக்கு புகழாரம் செலுத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் ,விழுப்புரம் டி.ஜி.பி. ஜியாஉல்ஹக், காஞ்சிபுரம் டி.ஐ.ஜி. பகலவன். விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்க் சாய், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன் ராஜ், காஞ்சிபுரம் மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு சுதாகர், செங்கல்பட்டு மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் ,திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செபாஸ் கல்யாண்உள்ளிட்டோர் கலந்து கொண்டு மறைந்த டி.ஐ. ஜி விஜயகுமாருக்குஅஞ்சலி செலுத்தினார்கள். விழுப்புரம் சரகம் மற்றும் காஞ்சிபுரம் சரக போலீஸ் அதிகாரிகளுடன் கூடுதல் டி.ஜி.பி.அருண் தலைமையில் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .

    • ஆர்.எஸ்.மங்கலத்தில் நீர், மோர் பந்தல் நடத்தி வரும் காவல்துறையினருக்கு குவியும் பாராட்டு குவிந்தன.
    • ஆர்.எஸ். மங்கலத் தில் சனிக்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுகிறது வழக்கம்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆர்.எஸ். மங்கலத் தில் சனிக்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுகிறது வழக்கம். இங்கு நடைபெறும் வார சந்தைக்கு ஆர்.எஸ்.மங் கலத்தை சுற்றியுள்ள கிராமத்திலிருந்து சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் சந்தையில் தங்களது வீட்டில் உள்ள நெல், மிளகாய், நவதானிய பொருட்களை விற்று விட்டு அதில் வரும் பணத்தைக் கொண்டு வீட்டுக்கு தேவை யான சாமான்களை வாங்கிச் செல்வது வழக்கம்.

    இந்த ஆண்டு தற்போது கோடை காலத்தில் வழக்கத்துக்கு மாறாக கடுமை யான வெயில் சுட்டெரிப்ப தால் சந்தைக்கு வரும் பொதுமக்களின் தாகத்தை போக்கும் வகை யில் நீண்ட விடுமுறையில் சென்று வந்த ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலையம் இன்ஸ் பெக்டர் பாஸ்கரன் முயற்சியால் அவர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுவர்தன் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் இணைந்து சந்தை அருகே சனிக்கிழமை தோறும் நீர், மோர்பந்தல் நடத்தி வருவது குறிப் பிடத்தக்கது.

    காவல் துறையினரின் இச்செயலை கண்டு சமூக ஆர்வலர்களும், தன்னார்வ தொண்டர்களும், பொதுமக்களும் சமூக வலைதளங்களில் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    ×