என் மலர்
நீங்கள் தேடியது "Madurai police inquiry"
நாகமலை புதுக்கோட்டை:
மதுரை அருகே உள்ள துவரிமான் இந்திரா காலனியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகள் முருகேசுவரி (வயது25). அதே பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 12 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினான்.
இதுகுறித்த புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் மதுரை அவனியாபுரம் எம்.எம்.சி. காலனியை சேர்ந்த முனியசாமி மனைவி சத்யா (30) நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
மதுரை:
ஒத்தக்கடை அருகில் உள்ள கீழ கள்ளந்திரி அம்மன் கோவில் திடலில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் டி.எஸ்.பி. புகழேந்தி சம்பவ இடத்தில் சோதனை நடத்தினார். இதில் ரூ. 32 ஆயிரத்து 433 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அரிட்டாபட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 50), கீழ கள்ளந்திரியைச் சேர்ந்த மலையாண்டி (37), சுதாகர் (32), ஜெயராஜ் (28), நாகூர் கனி (39), மணிகண்டன் (33), அசோக்குமார் (42), ஆசைபாண்டி (35), கார்த்திக் (30), சின்னகருப்பன் (40), சரத்குமார் (26), கணேசன் (32), பிரபு (32), மகேந்திரன் (41), அழகன் (24), கண்ணன் (35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதே போன்று உத்தப்பநாயக்கனூர் அருகில் உள்ள சின்னகுறவக்குடியில் பணம் வைத்து சூதாடிய போடுவார்பட்டி ராஜேந்திரன் (42), ஜெயம் (43), பாப்பாபட்டி ராஜயோக்கியம் (66), தங்கப்பாண்டி (55), ராஜேஷ்குமார் (30), தவமணி (35), ராஜீவ்காந்தி (32) ஆகியோரை சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜிகணேசன் கைது செய்தார். அவர்களிடம் இருந்து ரூ.700 பறிமுதல் செய்யப்பட்டது.
சமயநல்லூர் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகர் கால்வாய் அருகே பணம் வைத்து சூதாடிய சத்தியமூர்த்தி நகர் சுரேஷ் (33), நீலகண்டன் (25), கண்ணன் (27), குமார் (27), மாரியப்பன் (28), மாரிமுத்து (26), ராமச்சந்திரன் (22) ஆகியோரை சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் கைது செய்தார். இவர்களிடம் இருந்து ரூ.350 பறிமுதல் செய்யப்பட்டது.
பேரையூர்:
மதுரை பெத்தானியாபுரம், சாமிக்கண்ணு தெருவைச் சேர்ந்தவர் முத்து (வயது 40). இவர் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு முத்து, மனைவி முருகேஸ்வரியுடன் வெளியூர் செல்வதற்காக ஆலம்பட்டி பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது 3 வாலிபர்கள், இருவரையும் சுற்றி வளைத்தனர். முருகேஸ்வரி கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர். இதில் கழுத்தில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கதறிய பெண்ணை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இது தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் திருமங்கலம் அருகே உள்ள எஸ்.புளியம்பட்டி டாஸ்மாக் கடையில் மதுரை தெப்பக்குளத்தைச் சேர்ந்த சதீஷ்ராஜா (23), ஐராவதநல்லூர் ஸ்டீபன் ராஜ் (18), சக்கிமங்கலம் அருண்பாண்டியன் (25) ஆகிய 3 பேரும் மது குடித்துக் கொண்டிருந்தனர்.
சந்தேகத்தின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார், அந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முருகேஸ்வரியிடம் நகை திருடியது தெரியவந்தது. மேலும் நடந்த விசாரணையில் 3 பேர் மீதும் மதுரை அண்ணாநகர், புதூர், கீரைத்துறை, தெப்பக்குளம், விளக்குத்தூண் ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன என்பது தெரிந்தது.
இதைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த 3 வாலிபர்களையும் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews






