என் மலர்
நீங்கள் தேடியது "woman jewelry snatch"
ஆலந்தூர்:
மடிப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவி என்பவரின் மனைவி மஞ்சுளா (50). இன்று காலை அருகே உள்ள கோவிலுக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் மஞ்சுளா கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலி சங்கிலியை பறித்துச் சென்று விட்டார்.
இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.
திருக்கல்யாண விழாவை பக்தர்கள் சிரமமின்றி காண விழா பந்தல் மற்றும் ஆங்காங்கே எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதன் முன்பு அமர்ந்து பக்தர்கள் திருக்கல்யாண விழாவை கண்டுகளித்தனர்.
மதுரை பழங்காநத்தம் மேட்டுத்தெருவைச் சேர்ந்த ஞானசவுந்தரி (வயது 60) என்பவர் தெற்கு கோபுரம் அருகே அமைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. திரை முன்பு அமர்ந்து திருக்கல்யாண விழாவை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது யாரோ மர்ம மனிதன் அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்று விட்டனர்.
இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற மர்ம மனிதனை தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் சலீம். இவரது மனைவி மும்தாஜ்பேகம் (வயது 46). இவர் சம்பவத்தன்று 2-வது பால்பூத் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மும்தாஜ்பேகத்தை பின் தொடர்ந்து வந்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது மர்ம நபர்கள் மும்தாஜ்பேகத்தை வழிமறித்து அவரிடம் இருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.
இது குறித்து மும்தாஜ்பேகம் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
போரூர்:
மதுரவாயல் கார்த்திகேயன் நகரை சேர்ந்தவர் ரஜினிகாந்தன். இவரது மனைவி பிரத்திமா. நேற்று மாலை அவர் அதே பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் தெருவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வநத் 2 வாலிபர்கள் பிரத்திமா அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்து சென்று விட்டனர். இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போரூர்:
வியாசர்பாடியை சேர்ந்தவர் சரவணன் (28) வெள்ளிப்பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி தில்லி ராணி. இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.
புதுமண தம்பதிகளான இவர்கள் ஆரணியில் உள்ள தில்லி ராணியின் தாய் வீட்டிற்கு செல்ல இன்று கோயம்பேடு வந்தனர். காலை 7.30 மணியளவில் கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து ஆரணி செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்தனர்.
பஸ் புறப்பட்டு நெற்குன்றம் அருகே வந்தது. அப்போது தங்களது தலைக்கு மேல் வைத்திருந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அப்போது பெட்டிக்குள் வைத்திருந்த நகைப்பை காணவில்லை.
அதில் 22 பவுன் தங்க நகைகள் இருந்தன. அவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.
இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
ராயபுரம்:
புதுவண்ணாரப்பேட்டை திருவள்ளுவர் குடியிருப்பில் வசித்து வருபவர் நாமதுரை. இவர் டி.ஜி.பி. அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அன்னலட்சுமி.
நேற்று இரவு அன்னலட்சுமி தனது சகோதரியுடன் வீட்டு அருகே உள்ள கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், அன்னலட்சுமி கழுத்தில் இருந்த 12 பவுன் தங்க செயினை பறித்து விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி. டி.வி. கேமராவை ஆய்வு செய்து வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த கடம்பாடியை சேர்ந்த மோகனா. இவர் உறவினருடன் கோவளம் அருகே உள்ள மருத்துவமணைக்கு சென்று விட்டு ஷேர் ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டு இருந்தார். வரும் வழியில் கிருஷ்ணன்காரனை சாய்பாபா கோயிலுக்கு செல்ல பஸ் நிறுத்தத்தில் இருவரும் இறங்கினார்கள்.
அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம வாலிபர் ஒருவர் தன்னை சாதாரண உடையில் ரோந்து சுற்றும் ரகசிய போலீஸ் என அவர்களிடம் அறிமுகம் செய்து கொண்டு வழிப்பறி கொள்ளை அதிகமாக நடக்கும் பகுதி இது. அதனால் நகைகளை பத்திரமாக கைபையில் வைத்து பாதுகாப்பாக எடுத்து செல்லுங்கள் என எச்சரிப்பது போல் கூறிவிட்டு சென்றான்.
இதை நம்பிய மோகனா தனது 11பவுன் நகை மற்றும் செல்போனை கை பையில் வைத்து விட்டு நின்றார். அப்போது அதே வாலிபர் மின்னல் வேகத்தில் பைக்கில் வந்து மோகனாவின் கைப்பையை பறித்து தப்பி சென்று விட்டான்.
மதுரை:
திருங்கலம் அருகே உள்ள முகம்மதுஷாபுரம் போஸ் தெருவைச் சேர்ந்தவர் ராமராஜேஸ்வரன். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது64). இவர் நேற்று காலை வெளியே சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
மறவன்குளம் பகுதியில் விஜயலட்சுமி சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டனர்.
இதுதொடர்பாக விஜய லட்சுமி திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தினகரன் வழக்குப்பதிவு செய்து விஜயலட்சுமியிடம் நகையை பறித்த கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகிறார்.
திருமங்கலம் மறவன் குளத்தில் பட்டப்பகலில் தொடர்ச்சியாக வழிப்பறி சம்பவங்கள் நடப்பது அந்த பகுதியில் வசிப்பவர்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர்:
திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரி சாலையில் வசிப்பவர் ரமேஷ். இவரது மனைவி பாண்டிச்செல்வி (வயது34).
ரமேஷ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். குழந்தைகளுடன் வசித்து வந்த பாண்டிச்செல்வி, ஆலமரத்துப்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார்.
அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்ட பாண்டிச் செல்வி, திருத்தங்கல் -விருதுநகர் சாலையில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின்னால் வந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பாண்டிச்செல்வியின் கழுத்தில் கிடந்த 13 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்றனர்.
இதுகுறித்து திருத்தங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அங்குள்ள சோதனை சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களை போலீசார் சோதனை செய்தனர். அவர்களிடம் 13 பவுன் நகை இருந்தது தெரியவந்தது. அது பாண்டிச்செல்வியிடம் இருந்து பறித்தது என அவர்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் சங்கரன்கோவில் பாரதி நகரைச் சேர்ந்த முத்துமாரி (25), மாரிராஜ் (26) என தெரியவந்தது.