search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirumangalam"

    • திருமங்கலம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திரு மங்கலத்தை அடுத்த கள்ளிக் குடி அருகேயுள்ள வேப்பங் குளம் பகுதியைச் சேர்ந்தவர் சேது (வயது 60). விவசாயி யான இவர் தனக்கு சொந்த மான வயலில் பூச்சி மருந்தை குடித்து வாயில் நுரை தள் ளிய நிலையில் மயங்கி கிடந்தார்.

    இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற அவரது உறவினர்கள் சேதுவை மீட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின் னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு செல்லப் பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து அவரது மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின்பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    பெண் தற்கொலை

    திருமங்கலம் அண்ணா நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா மனைவி சுப்புலட்சுமி. இந்த தம்பதிக்கு இரண்டு மகன் கள், ஒரு மகள் உள்ளார். இதற்கிடையே ரத்த அழுத் தம் மற்றும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த சுப்புலட்சுமி தொடர்ந்து சிகிச்சை பெற் றும் நோய் முழுவதுமாக குணமாகவில்லை.

    இந்தநிலையில் நேற்று இரவு யாரும் இல்லாத நேரத்தில் தனது வீட்டின் மாடி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர் பாக அவரது கணவர் கருப் பையா கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருமங்கலம் அருகே வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை-3 லட்சம் திருடிய மர்ம நபகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார்குண்டு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது48). அேத பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவரும், இவரது மனைவியும் கடைக்கு சென்று விட்டனர். இரவு மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 13 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சத்து 13 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.

    யாரோ மர்ம நபர்கள் நோட்டமிட்டு வீடுபுகுந்து கொள்ளையடித்து சென்று உள்ளனர். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். திருமங்கலம் துைண போலீஸ் சூப்பிரண்டு வசந்தகுமார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப் பட்டது.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பணம்-நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே இளம்பெண் மாயமானார்.
    • அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை பாண்டியன் நகரை சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மகள் காயத்ரி(21). விருதுநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

    உறவிருக்கு நாகேந்திரன் ேபான் செய்தபோது காயத்ரி அங்கு வரவில்லை என்பது தெரியவந்தது. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை. இதைத்தொடர்ந்து கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் நாகேந்திரன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காயத்ரியை தேடி வருகின்றனர்.

    • விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மாரியப்பன் தலைமை தாங்கினார்.

    திருமங்கலம்

    கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தில் சமீபத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவின் போது இருசமூகத்தின ரிடையே மோதல் ஏற்பட்டது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மேற்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் எல்லாளன், தெற்கு மாவட்ட செயலாளர் இன்குலாப், மாநில துணை பொதுசெயலாளர் ஆற்றலரசு ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினர். மாவட்ட துணை செயலாளர் செல்லப்பாண்டி, தொகுதி செயலாளர் தமிழ்செல்வன், துணை செயலாளர் சிந்தனைவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
    • கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்வர்தீன்(வயது52). திருமணமான இவரது மகள் சில மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். இதனால் வேதனையடைந்த அன்வர்தீன் சம்பவத்தன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமங்கலம் நகர தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
    • நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகர தி.மு.க. சார்பில் பஸ் நிலையம் அருகில் நீர்மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்ப்பூசணி உள்ளிட்ட 16 வகையான பழங்களை மண் குவளையில் வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.

    இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டி, நகர செயலாளர் ஸ்ரீதர், நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், மாவட்ட துணைச் செயலாளர் முத்துராமன், லதா அதியமான், ஒன்றிய செயலாளர் தனபாண்டியன், மதன்குமார், பாண்டியன், தனசேகரன், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், சின்னசாமி, காசிபாண்டி, வினோத், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • திருமங்கலம்-காவலர் பணிக்கு எழுத்துத்தேர்வு நடந்தது.
    • தேர்வு மையங்களுக்கு செல்போன் கொண்டுவரக் கூடாது.

    திருமங்கலம்

    தமிழக முழுவதும் இன்று காவலர் பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது. மதுரை மாவட்டம் திருமங்கலம் பஸ் நிலையம் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் எழுத்து தேர்வு நடந்தது.

    தேர்வு மையங்களுக்கு செல்போன் கொண்டுவரக் கூடாது. பேனா மற்றும் ஹால் டிக்கெட் மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். முழுக்கை சட்டை அணிந்தவர்கள் மடக்கி விடக்கூடாது, பொத்தான் போட்டு மூடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டனர்.

    பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பலத்த சோதனைக்கு பின் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனும திக்கப்பட்டனர். திருமங்கலம் வி.கே.என். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கள்ளிக்குடி தனியார் பொறியியல் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணிக்காக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேற்கண்ட 2 தேர்வு மையங்களில் 2000 பேர் தேர்வு எழுதினர்.

    திருமங்கலம் அருகே இன்று அதிகாலை கார் கவிழ்ந்த விபத்தில் பெண்பலியானார். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
    பேரையூர்:

    கன்னியாகுமரி மாவட் டம், தேவாளை காட்டுப் புதூரைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி இன்பம் (வயது 52). இவர் தனது உறவினர்களுடன் கொடைக்கானலுக்கு காரில் சுற்றுலா புறப்பட்டார்.

    காரை டிரைவர் ராஜ முகேஷ் (26) ஓட்டி வந்தார். கார் இன்று அதிகாலை மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கள்ளிக்குடி 4 வழிச்சாலையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தது.

    அந்த சமயத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதி நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இன்பம் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார். மற்ற 9 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜமுகேஷ், அரசு (29), வசந்தா (26), ரேவதி (24) ஆகியோர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    திருமங்கலம் பகுதியில் ஏ.டி.எம்.களில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.1¼ கோடியை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #Parliamentelection #LSPolls

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த மேலக்கோட்டை பகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக திருமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் நிரப்புவதற்காக தனியார் நிறுவன வாகனம் வந்தது.


    வாகனத்தில் இருந்தவர்களிடம் உள்ள ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆவணத்தில் உள்ள எண்ணும், வேனின் பதிவு எண்ணும் வித்தியாசமாக இருந்தது.

    இதைத்தொடர்ந்து வேனில் கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடியே 35 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வேனும், பணமும் திருமங்கலம் தாசில்தார் தனலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் அந்த பணத்தை திருமங்கலம் கருவூலத்தில் ஒப்படைத்தார்.  #Parliamentelection #LSPolls

    திருமங்கலம் அருகே சாலையில் கவிழ்ந்த கார் தீ பிடித்ததில் வியாபாரி பலியானார்.

    பேரையூர்:

    நாகர்கோவில் எறும்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெலஸ்டின் (வயது 59). கருவாடு வியாபாரி. இவர் நேற்று நாமக்கல் செல்வதற்காக காரில் புறப்பட்டார். கன்னியாகுமரி அருகே உள்ள ஆலங்கோட்டையைச் சேர்ந்த மோகன் மகன் சதீஷ் காரை ஓட்டி வந்தார்.

    இன்று அதிகாலை மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கே.வெள்ளாகுளம் 4 வழிச்சாலையில் கார் வந்தபோது திடீரென நிலைதடுமாறியது.

    அதே வேகத்தில் அங்குள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்து உருண்டது. இதில் கார் தீ பிடித்தது.

    இந்த விபத்தில் வியாபாரி ஜெலஸ்டின் காயம் அடைந்தும், தீயில் கருகியும் சம்பவ இடத்திலேயே இறந்தார். டிரைவர் சதீஷ் படுகாயத்துடன் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார்.

    விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
    பேரையூர்:

    சேலம் மாவட்டம், பண்ணைப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் கார்த்திக் ஆனந்த் (வயது 28). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கார்த்திக் ஆனந்துக்கு திருமணமாகி 5 மாத குழந்தை உள்ளது.

    நேற்று நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நடந்த நண்பர் திருமணத்தில் பங்கேற்றுவிட்டு இன்று அதிகாலை கார்த்திக் ஆனந்த் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்லுக்கு புறப்பட்டார்.

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம், கார்த்திக் ஆனந்த் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிச் சென்றது.

    இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக் ஆனந்த் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


    திருமங்கலத்தில் பெண் ணிடம் 7 பவுன் நகையை கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.

    மதுரை:

    திருங்கலம் அருகே உள்ள முகம்மதுஷாபுரம் போஸ் தெருவைச் சேர்ந்தவர் ராமராஜேஸ்வரன். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது64). இவர் நேற்று காலை வெளியே சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    மறவன்குளம் பகுதியில் விஜயலட்சுமி சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டனர்.

    இதுதொடர்பாக விஜய லட்சுமி திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தினகரன் வழக்குப்பதிவு செய்து விஜயலட்சுமியிடம் நகையை பறித்த கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகிறார்.

    திருமங்கலம் மறவன் குளத்தில் பட்டப்பகலில் தொடர்ச்சியாக வழிப்பறி சம்பவங்கள் நடப்பது அந்த பகுதியில் வசிப்பவர்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    ×