வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை-3 லட்சம் திருட்டு

திருமங்கலம் அருகே வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை-3 லட்சம் திருடிய மர்ம நபகளை போலீசார் தேடி வருகிறார்கள். தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை-3 லட்சம் திருட்டு
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார்குண்டு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது48). அேத பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இவரும், இவரது மனைவியும் கடைக்கு சென்று விட்டனர். இரவு மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 13 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சத்து 13 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.

யாரோ மர்ம நபர்கள் நோட்டமிட்டு வீடுபுகுந்து கொள்ளையடித்து சென்று உள்ளனர். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். திருமங்கலம் துைண போலீஸ் சூப்பிரண்டு வசந்தகுமார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப் பட்டது.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பணம்-நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com