விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாரியப்பன் தலைமை தாங்கினார்.
விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம்
Published on

திருமங்கலம்

கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தில் சமீபத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவின் போது இருசமூகத்தின ரிடையே மோதல் ஏற்பட்டது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேற்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் எல்லாளன், தெற்கு மாவட்ட செயலாளர் இன்குலாப், மாநில துணை பொதுசெயலாளர் ஆற்றலரசு ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினர். மாவட்ட துணை செயலாளர் செல்லப்பாண்டி, தொகுதி செயலாளர் தமிழ்செல்வன், துணை செயலாளர் சிந்தனைவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com