இளம்பெண் மாயம்

திருமங்கலம் அருகே இளம்பெண் மாயமானார். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இளம்பெண் மாயம்
Published on

திருமங்கலம்

திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை பாண்டியன் நகரை சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மகள் காயத்ரி(21). விருதுநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

உறவிருக்கு நாகேந்திரன் ேபான் செய்தபோது காயத்ரி அங்கு வரவில்லை என்பது தெரியவந்தது. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை. இதைத்தொடர்ந்து கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் நாகேந்திரன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காயத்ரியை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com