search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காற்றின் தரம்"

    • அரசு அனுமதித்த நேரத்தைக் கடந்து நள்ளிரவு வரை பொது மக்கள் பட்டாசு வெடித்தனர்.
    • காற்றில் பிஎம் 2.5, பிஎம் 10, என்ஒ2, எஸ்02 உள்ளிட்ட வகை மாசு அளவு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் நேற்று தீபாவளி பண்டிகை பட்டாசுகள் வெடித்து கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    தீபாவளிக்கு வெடிக்கப்பட்ட பட்டாசுகள் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

    குறிப்பாக சென்னையில் காற்று மாசு அளவு வழக்கத்தைவிட மோசமாக உள்ளது. சென்னையில் நேற்று காற்று மாசு 170ஆக இருந்த நிலையில், விடிய வடிய வாணவேடிக்கை நடந்ததால் காற்றின் தரம் மேலும் மோசமடைந்து தரக்குறியீடு 200ஐ கடந்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    மேலும், அதிகபட்சமாக மணலியில் காற்று தரக்குறியீடு 316 ஆகவும், வேளச்சேரியில் 301ஆகவும், அரும்பாக்கத்தில் 260ஆகவும், ஆலந்தூரில் 256ஆகவும், ராயபுரத்தில் 227ஆகவும் பதிவாகியுள்ளது.

    பட்டாசு வெடிக்க அரசு தரப்பில் நேரம் ஒதுக்கப்பட்டபோதும், அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து நள்ளிரவு வரை பொது மக்கள் பட்டாசு வெடித்தனர்.

    காற்றில் பிஎம் 2.5, பிஎம் 10, என்ஒ2, எஸ்02 உள்ளிட்ட வகை மாசு அளவு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    காற்று மாசு அதிகரிப்பு எதிரொலியால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • டெல்லி துணை நிலை ஆளுனர் மக்களை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தினார்
    • காற்று மாசு ஒரு தேசிய அவசர நிலை என்கிறார் டாக்டர். அர்விந்த் குமார்

    புது டெல்லியில் கடந்த சில நாட்களாக அதிகப்படியான மாசு ஏற்பட்டதன் விளைவாக காற்றின் தரம் மிகவும் குறைந்துள்ளது.

    காற்றின் தர குறியீடு 500 எனும் அளவை தாண்டியதால், இது அபாயகரமானதாக கருதப்படுகிறது.

    இதனால் பல உடலாரோக்கிய சிக்கல்கள் ஏற்படும் என்பதால் டெல்லி துணை நிலை ஆளுனர் வி.கே. சக்சேனா, பொதுமக்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறித்தி உள்ளார்.

    இந்நிலையில், அதிகரிக்கும் காற்று மாசு குறித்து டெல்லியின் குருகிராம் பகுதியில் உள்ள மெதாந்தா மருத்துவமனையின் நுரையீரல் துறை சிறப்பு மருத்துவர் டாக்டர். அர்விந்த் குமார் கருத்து தெரிவித்தார்.

    அவர் இது குறித்து கூறியதாவது:

    ஏர் ப்யூரிஃபையர் (air purifier) எனப்படும் காற்றை சுத்திகரிக்கும் சாதனங்கள் தற்போதைய சூழலுக்கு ஒரு தீர்வு அல்ல. காற்று மாசு ஒரு பொது சுகாதார பிரச்சனை. வீட்டிற்கு வெளியே உள்ள காற்றின் தரத்திற்கான குறியீடு 500 எனும் அளவில் இருந்தால், சுத்திகரிக்கும் சாதனங்கள் அதை 15 அல்லது 20க்கு கொண்டு வராது. காற்றின் தரம் குறைந்துள்ள நாடுகளில் பெண்களுக்கு மார்பக புற்று நோய் அதிகம் வருவதாக சில தினங்களுக்கு முன் ஐரோப்பாவிலிருந்து வந்த ஆய்வு தெரிவிக்கிறது. பல குழந்தைகள் அகாலமாக உயிரிழக்கவும் இது காரணமாகிறது. சிகாகோ பல்கலைக்கழக ஆய்வு வட இந்தியாவில் மக்கள் தங்கள் வாழ்நாளில் 10 வருடங்களை இழக்கிறார்கள் என தெரிவிக்கிறது. இது ஒரு தேசிய அவசர நிலை. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை அனைத்து உடல் உறுப்புகளையும் தரங்குறைந்த காற்று பாதிக்கும். எளிதாக இது ஆஸ்துமா நோய் வர வழிவகுக்கும். டெல்லியில் 1100 குழந்தைகளை ஆய்வு செய்ததில் 3 பேரில் 1 குழந்தை எனும் விகிதத்தில் ஆஸ்துமா நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அனைத்து வயதினரையும் இது பாதிக்கிறது. தாயின் வயிற்றில் உள்ள சிசுக்களையும் இது பாதிக்கிறது. சுமார் 25 சிகரெட் புகைத்தால் வரும் நுரையீரல் நோய்கள், காற்று மாசு காரணமாக புகை பிடிக்காதவர்களுக்கும் வர கூடும்.

    இவ்வாறு டாக்டர். அர்விந்த் கூறினார்.

    • சுற்றுச்சூழலை பாதுகாக்க டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கும், விற்பனைக்கும், பதுக்கி வைக்கவும் டெல்லி அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
    • டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் 300 புள்ளிகளை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    தீபாவளிக்கு மறுநாளான இன்று காலை நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் 'மிகவும் மோசமான' பிரிவில் பதிவாகியுள்ளது.ஆனால், இது முந்தைய ஆண்டுகளைவிட குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.

    அதன்படி, இன்று காலை 7 மணியளவில் தலைநகரின் காற்றின் தரக் குறியீடு 326 ஆக இருந்தது. தொடர்ந்து, அண்டை நகரங்களான காசியாபாத் (285), நொய்டா (320), கிரேட்டர் நொய்டா (294), குருகிராம் (315) மற்றும் ஃபரிதாபாத் (310) ஆகியவை 'மோசமான' முதல் 'மிகவும் மோசமான' காற்றின் தரத்தைப் பதிவு செய்துள்ளன.

    பூஜ்ஜியத்தில் இருந்து -50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் பாதுகாப்பானது. 51லிருந்து-100 புள்ளிகள் வரை இருந்தால் மிதமானது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதேப்போல் 101லிருந்து - 150 புள்ளிகள் இருந்தால் உடல்நலத்துக்கு தீங்கானது என்றும் 300க்கு மேல் தாண்டினால் அது மிகவும் அபாயகரமானது எனக் கருதப்படுகிறது.

    காற்று மாசு காரணமாக சுற்றுச்சூழலை பாதுகாக்க டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கும், விற்பனைக்கும், பதுக்கி வைக்கவும் டெல்லி அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி தடையை மீறி பட்டாசு வெடிக்கபட்டதால் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் 300 புள்ளிகளை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    முன்பாக, டெல்லியில் கடந்த ஆண்டு தீபாவளியன்று 382 ஆகவும், 2020ல் 414 ஆகவும், 2019ல் 337 ஆகவும், 2017ல் 319 ஆகவும், 2016ல் 431 ஆகவும் பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    ×