என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 580 வழக்குகள் பதிவு
- காற்று மாசு உள்ளிட்ட காரணங்களாக பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கி அரசு அறிவித்தது.
- அரசு விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டதாக 7 வழக்குகள் பதிவு.
தமிழகத்தில் நேற்று பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
காற்று மாசு உள்ளிட்ட காரணங்களுக்காக பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கி அரசு சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 581 வழக்குகள் பதிவாகியுள்ளது.
அதிகளவு சத்தத்தை எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடித்ததாக மொத்தம் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டதாக 7 வழக்குகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Next Story






