search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "crowd"

    • 100 நாள் வேலையை 200 நாளாக அதிகரித்து தினம் ஊதியமாக ரூ.600 வழங்க வேண்டும்.
    • பல தொழிலாளர்கள் சரியாக வேலை பார்க்காமல் உள்ள தாக கூறுவது முற்றிலும் பொய்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் இன்று தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது சங்கத்தின் மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் இப்போது ஆண்டுக்கு 100 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்ப டுகிறது.

    இதனை 200 நாட்க ளாக மாற்றி தினந்தோறும் ஊதியமாக ரூ.600 வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதற்கு தமிழக அரசு போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தமிழகத்தில் பல இடங்களில் சராசரியாக 40 முதல் 42 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது.

    அதிலும் 1 கோடியே 31 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ள நிலையில் 80 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகிறது.

    இதனை முறைப்படுத்தி அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். ஊதிய த்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

    இந்த வேலை திட்டத்தில் பல தொழிலாளர்கள் சரியாக வேலை பார்க்காமல் உள்ள தாக கூறுவது முற்றிலும் பொய்.

    அவர்கள் தினமும் பார்க்கும் வேலையை சரியாக அளவீடு செய்து அதன் அடிப்படையில் தான் ஊதியம் வழங்கப்படுகிறது.

    இந்த திட்டத்தில் தினமும் மொபைல் மூலம் வருகை பதிவு செய்ய வேண்டும் என்பதை கைவிட வேண்டும்.

    மேலும் பல இடங்களில் குறிபிட்ட தேதியில் ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. இந்த குறைபாட்டை களைந்து சரியான தேதியில் ஊதியம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாநில பொருளாளர் சந்திரகுமார், சங்கத்தின் மாநில துணை தலைவர் மாரிமுத்து எம்.எல்.ஏ, தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்துஉத்ராபதி, சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பாஸ்கர், நிர்வாகிகள் மகேந்திரன், பழனிச்சாமி ,தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ராமமூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • பூரண மதுவிலக்கை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்.
    • ரத்தவங்கி கட்டிடத்தை திறந்து செயல்படுத்த கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் தெற்கு மாவட்ட அக்டோபர் மாத நிர்வாகக் குழு கூட்டம் மாவட்ட தலைவர்யாசர் அரபாத் தலைமையில் முத்துப்பேட்டையில் நடைப்பெற்றது.

    இதில் மாவட்ட செயலாளர் அப்துர் ரஹ்மான், மாவட்ட பொருளாளர் ஹாஜா முகைதீன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஹாஜா மைதீன், அப்துர் ரசீது, முகமது வாசிம்,முகமது தவ்பீக், மாவட்ட மாணவரணி ராஜா முகமது, மருத்துவரணி அப்துர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில், முஸ்லிம் சிறைவாசிகளை தமிழ்நாடு அரசு காலதாமதம் செய்யாமல் விடுதலை செய்ய வேண்டும்.

    பூரண மதுவிலக்கை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்.

    முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும், கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு பற்றிய வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மேலும் திருத்துறைப்பூண்டியில் கட்டப்பட்ட ரத்தவங்கி கட்டிடத்தை திறந்து செயல்படுத்த வலியுறுத்தி வரும் 18-ம் தேதி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    முடிவில் மாவட்ட செயலாளர் அப்துர் ரஹ்மான் நன்றி கூறினார்.

    • காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
    • பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் நாளை (திங்கள்கிழமை) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.

    எனவே கிராம சபை கூட்டத்திற்கு மாவட்டத்தின் கிராம ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்திட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    • உடுமலை ரெயில் நிலையம் வழியாக தென்மாவட்டங்கள் மற்றும் பல்வேறு பகுதிக்கு விரைவு, பயணிகள் ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • முருகப்பெருமானுக்கு உரிய அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு செல்லும் பாலக்காடு- திருச்செந்தூர் ரெயில் உடுமலை பகுதி பொது மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது.

    உடுமலை:

    உடுமலை ரெயில் நிலையம் வழியாக தென்மாவட்டங்கள் மற்றும் பல்வேறு பகுதிக்கு விரைவு, பயணிகள் ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏராளமான பொதுமக்கள் குறைவான செலவில் மனநிறைவான பயணத்தை பாதுகாப்புடன் பெற்று பயனடைந்து வருகின்றனர்.குறிப்பாக முருகப்பெருமானுக்கு உரிய அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு செல்லும் பாலக்காடு- திருச்செந்தூர் ரெயில் உடுமலை பகுதி பொது மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது.

    பெளர்ணமி,கோடை ,பொது, வார விடுமுறை நாட்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் திருச்செந்தூருக்கு சென்று கடலில் குளித்து முருகப்பெருமானை சாமி தரிசனம் செய்துவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர்.அந்த வகையில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை, மிலாடிநபி,காந்தி ஜெயந்தி என 5 நாட்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    இதனால் உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதி தொழிற்சாலை மற்றும் கோழிப்பண்ணை மற்றும் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், திருச்செந்தூருக்கு செல்லும் பொதுமக்கள் திருச்செந்தூர் ரெயிலில் பயணம் செய்ய நேற்று குவிந்தனர்.இதனால் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.ஆனால் முன்பதிவு,தட்கல் மற்றும் முன்பதிவு இல்லாத பயணிச்சிட்டு வழங்குதல் என அனைத்து பணிகளுக்கும் ஒரு மையம் மட்டுமே உள்ளது. இதனால் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.ஒரு வழியாக டிக்கெட் எடுத்துக்கொண்டு ரெயிலில் ஏறிச் செல்லலாம் என்று நினைத்திருந்த பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

    ஏராளமான மக்கள் திரண்டதால் ரெயில் நிரம்பி வழிந்தது.இதனால் ரெயிலில் ஏறிச் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.திருச்செந்தூர் பாலக்காடு ரெயில் 20 பெட்டிகள் கொண்டதாக உள்ளது.அதனுடன் கூடுதல் பெட்டிகள் சேர்த்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. அதேபோன்று கூடுதல் டிக்கெட் மையம் திறக்க வேண்டியதும் அவசியமாக உள்ளது. எனவே தென்னக ரயில்வே நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி ெரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைத்தும் மற்றும் உடுமலை ெரயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் மையத்தை திறந்து வைக்கவும் முன்வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நகரில் பெரும்பாலான தண்ணீர் தேவையை இந்த குளம் பூர்த்தி செய்கிறது.
    • குளத்தை சீரமைத்து நகரில் நீர் ஆதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு நகர செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நாகை நகரில் உள்ள நீர் நிலைகளில் முக்கியமானதாக அக்கரை குளம் உள்ளது.

    தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த குளத்தை குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

    இது தவிர நகரில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு வரக்கூடிய பக்தர்கள் இந்த குளத்தில் நீராடி செல்வது வழக்கம்.

    நகரில் பெரும்பாலான தண்ணீர் தேவையை இந்த குளம் பூர்த்தி செய்கிறது.

    தற்போது இந்த அக்கரை குளத்தை சுற்றி கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது.

    வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் மாசடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    நாகை நகரில் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த குளத்தை சீரமைத்து நகரில் நீர் ஆதாரத்தை பெருக்கி பொதுமக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நகர் பகுதியில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    • மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது சட்டப்படி குற்றமாகும்.
    • மனித கழிவுகளை அகற்ற வேண்டுமானால் தானியங்கி எந்திரம் மூலம் அகற்ற வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி சார்பில் சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றக்கூடாது என்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அறிவுடையநம்பி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகர மன்ற தலைவர் துர்காராஜசேகரன் கலந்து கொண்டு பேசுகையில், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றக் கூடாது. இது சட்டப்படி குற்றமாகும். மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளினால் அவர்களுக்கு பிணையில் வர முடியாமல் இரண்டு முதல் ஐந்தாண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

    சீர்காழி நகர் பகுதியில் மனித கழிவுகளை அகற்ற வேண்டுமானால் தானியங்கி இயந்திரம் மூலம் அகற்ற வேண்டும். சீர்காழி நகராட்சியில் பதிவு செய்த ஒப்பந்தக்தாரர்களைக் கொண்டு தான் இயந்திரம் மூலம் மனித கழிவுகளை அகற்ற வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் உடற்கல்வி இயக்குனர் முரளிதரன், டெங்கு ஒழிப்பு பணி மேற்பார்வையாளர் அலெக்ஸ், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசித்தனர்.
    • அடுத்த வாரம் ஆவணி அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாகும்.

    இந்த கோவிலில் மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது தனி சிறப்பாகும்.

    இதனால் மூலஸ்தான அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படாமல் தைலக்காப்பு சாற்றப்ப டுகிறது.

    தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புன்னைநல்லூர் மாரியம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும்.

    குறிப்பாக ஆவணி மாதங்களில் வரக்கூடிய அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாரியம்மனை தரிசனம் செய்வர்.

    அதன்படி இன்று ஆவணி மாதம் 4-வது ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலையில் இருந்தே கோவிலுக்கு பக்தர்கள் வர தொடங்கினர்.

    பல பக்தர்கள் நடந்தே கோவிலுக்கு வந்தனர்.

    நேரம் செல்ல செல்ல கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

    ஆவணி ஞாயிறு தோறும் மாரிய ம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. இன்று மாரியம்மனுக்கு தங்கப்பாவாடை அலங்காரம் செய்யப்பட்டது .

    பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை மனம் உருகி தரிசித்தனர்.

    பல பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    அடுத்த வாரம் ஆவணி கடைசி ஞாயிறு என்பதால் இதைவிட அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 24 களப்பணியாளர்களை டெங்கு நோய் தடுப்பு பணிக்கு அமர்த்த வேண்டும்.
    • நகராட்சிக்கு 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் வாகனம் வாங்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் வெங்கடலட்சுமணன், பொறியாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், வேதாரண்யம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் மகாராஜபுரம் பகுதியில் அறிவுசார் மையம் அமைக்கும் பணி மேற்கொள்வது, கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சீர் செய்வது, நகராட்சி பகுதியில் பயன்பாடுகள் இல்லாத கழிவறை கட்டிடங்களை அகற்றுவது, நகராட்சியில் சாலையோரம் வளரும் புற்களை வெட்டு வதற்கு புல் வெட்டும் எந்திரம் வாங்குவது, வேதாரண்யம் நகராட்சி பகுதியில் 24 டெங்கு களப்பணியாளர்களை டெங்கு நோய் தடுப்பு பணிக்கு அமர்த்துவது, நகராட்சிக்கு 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் வாகனம் வாங்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • ஆண்டுக்கு ரூ.740 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • நடப்பு சாகுபடி பருவத்திற்கு 6,585 டன் உரங்கள் தற்போது இருப்பில் உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை பருவத்தில் இதுவரை 78 ஆயிரத்து 486 எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டை போலவே நடப்பு ஆண்டிலும் குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் வழங்கப்பட்டதால் வரலாற்று சாதனையாக கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறுவை சாகுபடி பரப்பை நமது மாவட்டம் எட்டியுள்ளது.

    குறுவை பருவத்தில் மாற்றுப்பயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் சிறுதானியங்களில் கேழ்வரகு, பயிறு வகை பயிர்க ளில் உளுந்து, எண்ணெய் வித்துப்பயிர்களில் நிலக்கடலை ஆகியவை 50 சதவீதம் மானியத்தில் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

    சம்பா பருவத்திற்கு ஏற்ற நீண்ட மற்றும் மத்தியகால நெல் விதைகள் இதுவரை 311 டன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் 389 டன் விதைகள் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா 7,827 டன்னும், டி.ஏ.பி. 2,823 டன்னும், பொட்டாஷ் 1,858 டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 3,694 டன்னும் தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் பண்ணை கருவிகள், தார்பாய்கள், ஜிங்சல்பேட் மற்றும் ஜிப்சம் ஆகியவை 50 சதவீத மானியத்தில் வினியோகிக்கப்பட்டு வருகிறது.2023-24-ம் ஆண்டுக்கு ரூ.740 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    தஞ்சை மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடந்த 22-ந் தேதி வரை ரூ.101 கோடியே 84 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சை மண்டலத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நடப்பு சாகுபடி பருவத்திற்கு 6,585 டன் உரங்கள் தற்போது இருப்பில் உள்ளது.

    மேற்கண்ட தகவலை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தீபக்ஜேக்கப் பேசினார்.

    • வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும்.
    • கூட்டத்தில் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அடுத்த மணல்மேடு அருகே ராதாநல்லூரில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் ஆலய மற்றும் அர்ச்சகர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராமநிரஞ்சன் தலைமையில் நடைபெற்றது.

    சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    கூட்டத்தில் தொடர்ந்து வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும், சுக்கிரன், சூரியன், சந்திரன் ஆகிய 3 கோவில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தொண்டாமுத்தூரில் 140 டோக்கன்களும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    • கூடுதலாக 50 பேருக்கு டோக்கன் வினியோகம்

    வடவள்ளி,

    தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலகம் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் சுபமுகூர்த்த நாட்களில் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடக்கும் என்பதால் அன்றைய தினங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்வது வழக்கம்.

    இதன்படி ஆடிப்பெருக்கை முன்னிட்டு கடந்த 3-ந்தேதி ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதலாக 50 முன்பதிவு வில்லைகள் வழங்கப்பட்டன. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

    அதேபோல சுபமுகூர்த்த நாளான இன்று அதிக அளவில் பத்திரப்பதிவு நடக்கும் என்பதால் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதலாக 50 பேருக்கு முன்பதிவு டோக்கன் வழங்கப்பட்டது.

    கோவையில் வடவள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் 120 டோக்கன்களும் , தொண்டாமுத்தூரில் 140 டோக்கன்களும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் மற்ற சார்பதிவாளர் அலுவ லகங்களிலும் கூடுதலாக 50 டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டன.

    இதனால் சுபமுகூர்த்த தினமான இன்று சார்பதிவாளர் அலுவலகங்களில் கூட்டம் அலைமோதியது. 

    • வருகிற 23-ந் தேதி மாலை 3 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
    • விவசாய சங்க பிரதிநிதிகள் நேரில் வந்து விவசாயம் தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 23-ந்தேதி (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.

    இதில் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் நேரில் வந்து விவசாயம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×