search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், விவசாய தொழிலாளர் சங்க கூட்டம்
    X

    கூட்டத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் பெரியசாமி பேசினார்.

    தஞ்சையில், விவசாய தொழிலாளர் சங்க கூட்டம்

    • 100 நாள் வேலையை 200 நாளாக அதிகரித்து தினம் ஊதியமாக ரூ.600 வழங்க வேண்டும்.
    • பல தொழிலாளர்கள் சரியாக வேலை பார்க்காமல் உள்ள தாக கூறுவது முற்றிலும் பொய்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் இன்று தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது சங்கத்தின் மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் இப்போது ஆண்டுக்கு 100 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்ப டுகிறது.

    இதனை 200 நாட்க ளாக மாற்றி தினந்தோறும் ஊதியமாக ரூ.600 வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதற்கு தமிழக அரசு போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தமிழகத்தில் பல இடங்களில் சராசரியாக 40 முதல் 42 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது.

    அதிலும் 1 கோடியே 31 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ள நிலையில் 80 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகிறது.

    இதனை முறைப்படுத்தி அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். ஊதிய த்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

    இந்த வேலை திட்டத்தில் பல தொழிலாளர்கள் சரியாக வேலை பார்க்காமல் உள்ள தாக கூறுவது முற்றிலும் பொய்.

    அவர்கள் தினமும் பார்க்கும் வேலையை சரியாக அளவீடு செய்து அதன் அடிப்படையில் தான் ஊதியம் வழங்கப்படுகிறது.

    இந்த திட்டத்தில் தினமும் மொபைல் மூலம் வருகை பதிவு செய்ய வேண்டும் என்பதை கைவிட வேண்டும்.

    மேலும் பல இடங்களில் குறிபிட்ட தேதியில் ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. இந்த குறைபாட்டை களைந்து சரியான தேதியில் ஊதியம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாநில பொருளாளர் சந்திரகுமார், சங்கத்தின் மாநில துணை தலைவர் மாரிமுத்து எம்.எல்.ஏ, தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்துஉத்ராபதி, சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பாஸ்கர், நிர்வாகிகள் மகேந்திரன், பழனிச்சாமி ,தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ராமமூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×