search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Case registration"

    • விஸ்வநாதன் என்பவருக்கும் நிலப்பிரச்சனை சம்பந்த மாக முன்விரோதம் இருந்து வந்தது.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைப்பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் காடாம் புலியூர் அடுத்த வேகாக் கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (42)தி.மு.க. வைச் சேர்ந்தவர். இவர் வேகாக்கொல்லை ஊராட்சி மன்ற துணைத் தலைவ ராகஇருந்து வருகிறார். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கும்பக்கத்து வீட்டைச் சேர்ந்த விஸ்வ நாதன் (51)என்பவருக்கும் நிலப்பிரச்சனை சம்பந்த மாக முன்விரோதம்இருந்து வந்தது. கொண்டான் குளம் அருகே உள்ள 141 செண்ட் நிலத்தை 30 வருடங்களாக விஸ்வநாதன் ஆக்கிரமிப்பு செய்ததை துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி ஆக்கிர மிப்புகளை அகற்றச் சொல்லி அகற்றியதாக தவறாக தினமும் திட்டிக் கொண்டிருந்தார்.

    இன்று தட்சிணா மூர்த்தி மற்றும் அவரது மனைவி மற்றும் தம்பி மகன் அறிவு ஆகியோரை வீட்டில் இருந்த போது விஸ்வநாதன் அவரது மனைவி சின்னபொன்னு மற்றும் மகன்கள் பாஸ்கர், பிரசாந்த் அனைவரும் சேர்ந்து இரும்பு பைப்பாலும், கையாலும், கட்டையாலும் அடித்துள்ளனர். இதில் காயம் அடைந்தவர்கள் பண்ருட்டி அரசுமருத்துவமனைக்கு சென்று விட்டு பின்னர் மேல்சிகிச்சைக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைப் பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    • பழனி கடந்த 29-ந்தேதி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்
    • சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த எறும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 60). இவர் கடந்த 29-ந்தேதி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த பழனி சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சில தினங்களுக்கு முன்பு இவர்களுக்குள் மீண்டும் சண்டை நடந்தது.
    • அவரது மனைவி விஜய ராணிஆகிய இருவரையும் அடித்து உதைத்து மிரட்டியுள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுநாதன். இவரது மனைவிவிஜயராணி (வயது45),இவர்களது மகள்வித்யா (24), வித்யாவை புதுவை மாநிலம் கொம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜூக்கு கடந்த 5ஆண்டு க்கு முன்திருமணம் செய்து கொடுத்தனர்.இவர்களுக்குள் அடிக்கடி சண்டை நடப்பது வழக்கம்.இதே போலகடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களுக்குள் மீண்டும் சண்டை நடந்தது. வித்யா சண்டை போட்டுக் கொண்டே தாய் வீடான பூண்டி கிராமத்திற்கு வந்துவிட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் கடந்த 28-ந் தேதி 10.30மணி அளவில் பூண்டி கிராமத்திற்கு சென்று மாமியார் வீட்டின் கதவு,வாசலை உடைத்து உள்ளே புகுந்து மாமனார் ரகுநாதன், அவரது மனைவி விஜய ராணிஆகிய இருவரையும் அடித்து உதைத்து மிரட்டியுள்ளார். இதனால் காயம் அடைந்த கணவன் மனைவி இருவரும் பண்ருட்டி ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர் இது பற்றி புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து செல்வ ராஜை கைது செய்தனர்.

    • கடலூர் அருகே கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த எஸ்.என்.நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 52) கூலி தொழிலாளி. கடந்த சில மாதங்களாக சேகர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இதனால் மனஉளைச்சளில் இருந்த சேகர் சம்பவத்தன்று அதே பகுதியில் விவசாய நிலத்திற்கு அடிக்கக்கூடிய பூச்சி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சேகரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சேகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அஜித் குமார் நண்பர்களுடன் சேர்ந்து வீண் செலவு செய்து வந்துள்ளா
    • இரவு மதுவில் முந்திரிக்கு அடிக்கும் மருந்தை கலந்து குடித்துள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி இவரது மகன் அஜித் குமார் (வயது 19), இவர், 10-ம்வகுப்பு வரை படித்து முடித்து விட்டு ஜே.சி.பி. ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார். இவர் நண்பர்களுடன் சேர்ந்து வீண் செலவு செய்து வந்துள்ளார்.இவரை இவரது பெற்றோர்கள் கண்டித்து உள்ளனர்.

    இதனால் கோபித்துக் கொண்ட அஜித் குமார் நேற்று இரவு மதுவில் முந்திரிக்கு அடிக்கும் மருந்தை கலந்து குடித்துள் ளார். இதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த அஜித்குமாரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சை பலனின்றி அஜித்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து முத்தாண்டி குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தசரதன் தனது மனைவியுடன் கோபித்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதில் தங்கிக் கொண்டு இருந்தா
    • அங்கு வைக்கப்பட்டு இருந்த 6¼ பவுன் தங்க காசினை திடீரென்று காணவில்லை.

    கடலூர்:

    காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் தசரதன் (வயது 43). சம்பவத்தன்று தசரதன் தனது மனைவியுடன் கோபித்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதில் தங்கிக் கொண்டு இருந்தார். இந்த நிலையில் தசரதன் வெளியில் சென்று விட்டு மீண்டும் தங்கிய அறையில் வந்து பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டு இருந்த 6¼ பவுன் தங்க காசினை திடீரென்று காணவில்லை. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இது குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்கராபுரம் அருகே டிராக்டர் மோதி கூலி தொழிலாளி பலியானார்.
    • ராஜேஸ்வரியை பார்த்துவிட்டு பூட்டை கிராமத்திற்கு குமார் மற்றும் சிவசங்கர் புறப்பட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது55) கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று உறவினர் ஏழுமலை மகன் சிவசங்கர்(21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மாதவச்சேரியில் உள்ள தனது மகள் ராஜேஸ்வரியை பார்க்கச் சென்றார். பின் ராஜேஸ்வரியை பார்த்துவிட்டு பூட்டை கிராமத்திற்கு குமார் மற்றும் சிவசங்கர் புறப்பட்டனர். சிவசங்கர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். அப்போது கொசப்பாடி ஏரிக்கரை அருகே வந்து கொண்டிருந்தபோது செல்லம்பட்டில் இருந்து பாலப்பட்டு நோக்கி சென்ற டிராக்டர் இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய சிவசங்கரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • பயங்கர ஆயுதங்களுடன் நாகை மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
    • வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்தவர் சபாபதி. இவருக்கு சொந்தமான விசைப்படகில் அவருடைய மகன்கள் பிரதீப், பிரகாஷ், பிரவின், திருமுருகன் உள்ளிட்ட 4 பேர் கடந்த 21-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு கோடியக்கரை தென்கிழக்கே 10 நாட்டில்கள் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு அத்துமீறி 2 அதிவேக படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் நாகை மீனவர்களிடம் கத்தி முனையில் மீன்கள் மற்றும் தளவாட பொருட்களை கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நாகை மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

    பின்னர் கத்தி முனையில் நாகை மீனவர்களின் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ வலை, 50 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள், ஜிபிஎஸ் கருவி , 4 செல்போன்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் படுகாயங்களுடன் செருதூர் மீன் இறங்குதளத்திற்கு வந்த மீனவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சக மீனவர்கள் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தொழில் செய்யமுடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், ஒன்றிய அரசும் தமிழக அரசும் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழுமம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர், போலீஸ் சூப்பிரண்டு ஜோதிராமலிங்கம் நாகை மீனவர்களை தாக்கி மீன் மற்றும் வலைகளை கொள்ளையடித்து சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட அசோக்குமார் தற்போது கடலூர் மத்திய சிறையில் உள்ளார்.
    • இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு, கடலூர் கலெக்டரிடம் அனுமதி கோரினார்.

    கடலூர்:

    முத்தாண்டிகுப்பம் அடுத்த பெரியான் குப்பம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் அசோக்குமார் (வயது 24). இவர் கொள்ளை, திருட்டு, கொலை மிரட்டல் போன்ற குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட அசோக்குமார் தற்போது கடலூர் மத்திய சிறையில் உள்ளார். இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பண்ருட்டி போலீசார் கடலூர் மாவட்ட போலீசாருக்கு பரிந்துரைத்தனர்.

    இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு, கடலூர் கலெக்டரிடம் அனுமதி கோரினார். இதற்கு கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் அனுமதியளித்ததை தொடர்ந்து, அசோக்குமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அவரை கைது செய்த பண்ருட்டி போலீசார், குண்டர் தடுப்பு சட்டத்தில் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அசோக்குமார் மீது திருட்டு, தீண்டாமை வன்கொடுமை வழக்கு,பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க கூடிய வழக்கு என 6 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • நடேசன் சென்னையில் விருகம்பாக்கத்தில் தனது மைத்துனர் வீட்டு புதுமனை புகுவிழாவிற்கு தனது குடும்பத்துடன் சென்றார்.
    • 8 பவுன் நகை மற்றும் 27,000 ரொக்க பணம், 15000 மதிப்புள்ள செல்போன் ஆகியவை திருடு போய் இருந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெரங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் (வயது 41). இவர் ராமநத்தம் ஊராட்சியில் சர்ச் ரோடு, கம்பன் தெருவில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று சென்னையில் விருகம்பாக்கத்தில் தனது மைத்துனர் வீட்டு புதுமனை புகுவிழாவிற்கு தனது குடும்பத்துடன் சென்றார்.

    பின்னர் சென்னையில் இருந்து நேற்று ராமநத்தம் அருகே உள்ள எழுத்தூர் கிராமத்தில் தனது மாமனார் வீட்டிற்கு சென்றுவிட்டு கம்பன் தெருவில் உள்ள தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது அங்கு வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் இருந்த பீரோவில் பொருட்கள் சிதறி கிடந்தது. அதிலிருந்த 8 பவுன் நகை மற்றும் 27,000 ரொக்க பணம், 15000 மதிப்புள்ள செல்போன் ஆகியவை திருடு போய் இருந்தது.

    இதுகுறித்து நடேசன் ராமநத்தம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ராமநத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் திருட்டு நடந்த இடத்திற்கு வந்து பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்நிலையில் நேற்று இரவு மரிய ஜோசப் வீட்டில் அனைவரும் தூங்க சென்று விட்டனர்.
    • இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் ராமசாமி நகரை சேர்ந்தவர் சூசை நாதன் மகன் மரிய ஜோசப் (30) இவர் மஞ்சக் குப்பத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு மரிய ஜோசப் வீட்டில் அனைவரும் தூங்க சென்று விட்டனர். காலையில் எழுந்து பார்த்தபோது மரிய ஜோசப் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரிய ஜோசப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 14 வயது சிறுவனுக்கும், 16 வயது சிறுவனுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது.
    • 16 வயதுடைய சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த கீழப்பட்டில் நேற்று முன்தினம் இரவு தெருகூத்து நடைபெற்றது. இதைபார்த்து கொண்டிருந்த 14 வயது சிறுவனுக்கும், 16 வயது சிறுவனுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் 16 வயது சிறுவன் 14 வயது சிறுவனை தாக்கியதாக தெரிகிறது. இதனால் பலத்த காயமடைந்த 14 வயது சிறுவன் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் 16 வயதுடைய சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×