

கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் ராமசாமி நகரை சேர்ந்தவர் சூசை நாதன் மகன் மரிய ஜோசப் (30) இவர் மஞ்சக் குப்பத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு மரிய ஜோசப் வீட்டில் அனைவரும் தூங்க சென்று விட்டனர். காலையில் எழுந்து பார்த்தபோது மரிய ஜோசப் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரிய ஜோசப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.