என் மலர்
உள்ளூர் செய்திகள்

திட்டக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
- நடேசன் சென்னையில் விருகம்பாக்கத்தில் தனது மைத்துனர் வீட்டு புதுமனை புகுவிழாவிற்கு தனது குடும்பத்துடன் சென்றார்.
- 8 பவுன் நகை மற்றும் 27,000 ரொக்க பணம், 15000 மதிப்புள்ள செல்போன் ஆகியவை திருடு போய் இருந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெரங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் (வயது 41). இவர் ராமநத்தம் ஊராட்சியில் சர்ச் ரோடு, கம்பன் தெருவில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று சென்னையில் விருகம்பாக்கத்தில் தனது மைத்துனர் வீட்டு புதுமனை புகுவிழாவிற்கு தனது குடும்பத்துடன் சென்றார்.
பின்னர் சென்னையில் இருந்து நேற்று ராமநத்தம் அருகே உள்ள எழுத்தூர் கிராமத்தில் தனது மாமனார் வீட்டிற்கு சென்றுவிட்டு கம்பன் தெருவில் உள்ள தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது அங்கு வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் இருந்த பீரோவில் பொருட்கள் சிதறி கிடந்தது. அதிலிருந்த 8 பவுன் நகை மற்றும் 27,000 ரொக்க பணம், 15000 மதிப்புள்ள செல்போன் ஆகியவை திருடு போய் இருந்தது.
இதுகுறித்து நடேசன் ராமநத்தம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ராமநத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் திருட்டு நடந்த இடத்திற்கு வந்து பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






