கடலூர் அருகே கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கடலூர் அருகே கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அருகே கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Published on

கடலூர்:

கடலூர் அடுத்த எஸ்.என்.நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 52) கூலி தொழிலாளி. கடந்த சில மாதங்களாக சேகர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இதனால் மனஉளைச்சளில் இருந்த சேகர் சம்பவத்தன்று அதே பகுதியில் விவசாய நிலத்திற்கு அடிக்கக்கூடிய பூச்சி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சேகரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சேகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com