பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

அஜித் குமார் நண்பர்களுடன் சேர்ந்து வீண் செலவு செய்து வந்துள்ளாஇரவு மதுவில் முந்திரிக்கு அடிக்கும் மருந்தை கலந்து குடித்துள்ளார்.
பெற்றோர் கண்டித்ததால்  விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
Published on

கடலூர்:

பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி இவரது மகன் அஜித் குமார் (வயது 19), இவர், 10-ம்வகுப்பு வரை படித்து முடித்து விட்டு ஜே.சி.பி. ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார். இவர் நண்பர்களுடன் சேர்ந்து வீண் செலவு செய்து வந்துள்ளார்.இவரை இவரது பெற்றோர்கள் கண்டித்து உள்ளனர்.

இதனால் கோபித்துக் கொண்ட அஜித் குமார் நேற்று இரவு மதுவில் முந்திரிக்கு அடிக்கும் மருந்தை கலந்து குடித்துள் ளார். இதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த அஜித்குமாரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சை பலனின்றி அஜித்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து முத்தாண்டி குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com