search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fainting"

    • கடந்த 9-ந் தேதி காலை தனது வீட்டை சுத்தம் செய்தபோது பரணை யில் இருந்த பாம்பு இவரை கடித்தது.
    • மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கோட்ட லாம்பாக்கத்தை சேர்ந்தவர் நாகப்பன் மகள் கங்கா (வயது 31), திருமணம் ஆனவர். இவர் கடந்த 9-ந் தேதி காலை தனது வீட்டை சுத்தம் செய்தபோது பரணை யில் இருந்த பாம்பு இவரை கடித்தது.

    இதனால் மயங்கி விழுந்த கங்காவை, பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • அஜித் குமார் நண்பர்களுடன் சேர்ந்து வீண் செலவு செய்து வந்துள்ளா
    • இரவு மதுவில் முந்திரிக்கு அடிக்கும் மருந்தை கலந்து குடித்துள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி இவரது மகன் அஜித் குமார் (வயது 19), இவர், 10-ம்வகுப்பு வரை படித்து முடித்து விட்டு ஜே.சி.பி. ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார். இவர் நண்பர்களுடன் சேர்ந்து வீண் செலவு செய்து வந்துள்ளார்.இவரை இவரது பெற்றோர்கள் கண்டித்து உள்ளனர்.

    இதனால் கோபித்துக் கொண்ட அஜித் குமார் நேற்று இரவு மதுவில் முந்திரிக்கு அடிக்கும் மருந்தை கலந்து குடித்துள் ளார். இதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த அஜித்குமாரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சை பலனின்றி அஜித்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து முத்தாண்டி குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செந்தில்குமார் ராமலிங்கத்தை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
    • வயலுக்கு சென்ற ராமலிங்கம் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் அடுத்த மனக்குன்னம் மேல தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 45). கூலி தொழிலாளி. இவரது மனைவி காந்திமதி.இவரது எதிர்வீட்டில் செந்தில்குமார் (41) என்பவர் வசித்து வருகிறார்.

    இவர் வீட்டில் வளர்க்கும் ஆடுகள் அடிக்கடி ராமலிங்கம் வீட்டிற்கு சென்று பூச்செடிகளை மேய்ந்து விடுவது வழக்கம்.

    இதனையடுத்து, நேற்றும் அதேபோல் ஆடுகள் பூச்செடிகளை மேய்ந்த போது ராமலிங்க மும், அவரது மனைவியும், செந்தில்குமாரை சத்தம் போட்டுள்ளனர். மேலும், ஆடுகளை கட்டிப்போட்டு வளர்க்கும்படி கூறியுள்ளனர்.

    இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார் ராமலிங்கத்தை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. மேலும், இருவருக்கும் தகராறும் ஏற்பட்டுள்ளது.

    பின்னர், வயலுக்கு சென்ற ராமலிங்கம் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பனந்தாள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எதிர்பாராத விதமாக பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து, ராமலிங்கம் மனைவி கொடுத்த புகாரின் பேரில் பந்தநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      ராசிபுரம்:

      நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் குருசாமிபாளையத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி உள்ளனர்.

      நேற்று 24 மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்தனர். இவர்களுக்கு காலையில் முள்ளங்கி சாம்பார் சாதம் போடப்பட்டு உள்ளது. இதனை சாப்பிட்டு விட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.

      இந்த நிலையில், விடுதியில் சாப்பிட்டு சென்ற மாணவர்களில் சிலருக்கு வயிற்று வலி ஏற்பட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக பாதிக்கப்பட்ட 9 மாணவர்களை பிள்ளால்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

      மாணவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பிள்ளா நல்லூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் தவசீலன் தலைமையில் விடுதியில் தங்கி இருந்த மற்ற மாணவர்கள் மற்றும் பள்ளிக்குச் சென்றிருந்த மாணவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.

      கெட்டுப்போன உணவு காரணமாக மாணவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டி ருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதனிடையே தரமற்ற உணவு வழங்கியதால் மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக பொது மக்கள் குற்றம்சாட்டினர்.

      இதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட ஆதிதிரா விடர் நல அதிகாரி சுகந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை பார்த்து நலம் விசாரித்தார். மேலும் அவர் விடுதிக்குச் சென்று விசாரணை நடத்தினார். ராசிபுரம் ஒன்றிய குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், பிள்ளாநல்லூர் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் சிகிச்சை பெரும் மாணவர் களை சந்தித்து நலம் விசாரித்தனர்.

      அதேபோல் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் டாக்டர் சரோஜா, மாணவர்களை சந்தித்து பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தார். மேலும் பிஸ்கட், பழங்கள் கொடுத்து நலம் விசாரித்தார். அவர் மாணவர்கள் தங்கி இருந்த விடுதிக்குச் சென்று அவர்களுக்கு வழங்கப்படும் உணவு போன்றவற்றை பரிசோதித்தார். ராசிபுரம் ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் வேம்பு சேகரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முருகேசன் மற்றும் பிள்ளாநல்லூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் தனபால், ராமசாமி ஆகியோரும் சென்று நலம் விசாரித்தனர்.

      • கீரையை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மூதாட்டி வாந்தி எடுத்து, மயங்கி விழுந்தார்.
      • வால்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

      வால்பாறை,

      வால்பாறை அருகே மானாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 62). இவர் அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

      இந்நிலையில் வழக்கம்போல் விஜயலட்சுமி தோட்டத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் காட்டில் இருந்த ஒருவகை கீரையை பிடுங்கி விட்டு, வீட்டிற்கு கொண்டு வந்து சமைத்து சாப்பிட்டார்.

      கீரையை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்து, மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

      அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • இவரது மகன் கடந்த ஆண்டு சாலை விபத்தில் இறந்தார்.
      • அப்போது நீதிபதி முன்னிலையில் முத்து லட்சுமி திடீர் என மயங்கி விழுந்தார்.

      விழுப்புரம்:

      விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிம ன்றத்தில் மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணை குழு சார்பில் இன்று மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் 3,336 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டது. இவற்றில் இன்று காலை 9 மணி வரை 183 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ. 5 கோடியே 55 லட்சத்து 51 ஆயிரம் வழங்கப்பட்டது.இந்த மக்கள் நீதிம ன்றத்துக்கு விக்கிர வாண்டி அருகே உள்ள பாப்பன ம்பட்டு கிராமத்தை சேர்ந்த முத்துலட்சுமி வந்திருந்தார். இவரது மகன் கடந்த ஆண்டு சாலை விபத்தில் இறந்தார்.

      இதற்கு தீர்வு காண்பதற்கு முத்துலட்சுமி வந்தார். இந்த வழக்கினை மாவட்ட முதன்மை நீதிபதி செல்வி பூர்ணிமா விசாரித்து கொண்டிருந்தார்அப்போது நீதிபதி முன்னிலையில் முத்து லட்சுமி திடீர் என மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்ப ட்டது. உடனே முத்து லட்சுமிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார்.

      • ஒரு தென்னைமரத்தில் கதண்டுகள் கூடு கட்டி இருந்த நிலையில் ஆடுகள் கீழே மேய்ந்தன.
      • இதில் வண்டுகள் ஆடுகளை கடித்தது ஆடு கத்திய படி இறந்தது.

      தஞ்சாவூர்:

      தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை தெருவைச் சேர்ந்த சுந்தர் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள, வடகோவனூர் மேலத்தெருவில் உள்ளது.

      இந்த தென்னந்தோப்பில் உள்ள ஒரு தென்னைமரத்தில் கதண்டுகள் கூடு கட்டி இருந்தது. இந்த நிலையில், அந்த தென்னை தோப்பையொட்டி உள்ள வயலில் 7 ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது கதண்டுகள் கூடு கட்டியிருந்த தென்னை மரத்தில் இருந்த ஒரு மட்டை காற்றில் பறந்து கீழே விழுந்தது. இதனால் கதண்டுகள் நாலாபக்கமும் சிதறி பறந்து அங்கு மேய்ந்து கொண்டிருந்த 7 ஆடுகளையும் கடித்தது.

      இதில் ஆடுகள் வலியால் துடிதுடித்து கத்தியபடியே கீழே விழுந்தது. பின்னர், உடனடியாக, கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மயங்கி விழுந்த ஆடுகளை மீட்டனர். இதை தொடர்ந்து 7ஆடுகளுக்கும் கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ஒரு ஆடு இறந்தது.

      இதையடுத்து இரவு நேரத்தில் தீயணைப்பு வீரர்கள்தென்னை மட்டையில் கூடு கட்டி இருந்த கதண்டுகளை தீயிட்டு அழித்தனர்.

      • மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டார்.
      • மயங்கி கிடந்தவரை உடனடியாக சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

      கபிஸ்தலம்:

      கபிஸ்தலம் அருகே உள்ள வீராஞ்சேரி மெயின் ரோட்டில் வசிப்பவர் கோவிந்தராஜ் மகன் முருகானந்தம் (வயது 45) விவசாயி.

      இவருக்கு சரிதா என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளன.

      விவசாயி முருகானந்தத்திற்கு நீண்ட நாளாக தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிகிறது.

      இதனால் மணமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது வயலுக்கு அடிக்க வைத்திருந்த விஷப்பூச்சி மருந்து குடித்து விட்டார்.

      மயங்கி கிடந்தவரை வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

      அங்கு சிகிச்சை பெற்று வந்த முருகானந்தம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

      இது குறித்து அவரது மனைவி சரிதா கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜகமல், சிறப்பு

      சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
      • சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

      நாகப்பட்டினம்:

      நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவா ஞ்சேரி ஊராட்சி மத்தியக்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் முருகவேல் (வயது 55) விவசாயி.

      இவர் கடந்த சில நாட்களாக குடும்பப் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

      இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

      அக்கம் பக்கத்தினர் முருகவேலை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

      அங்கு சிகிச்சை பலனின்றி முருகவேல் உயிரிழந்தார்.

      இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

      • விழுப்புரம் அருகே இன்று 15 மாணவர்கள் தேனீக்கள் கொட்டியதில் மயக்கம் அடைந்தனர்.
      • சத்தம் கேட்டு சக ஆசிரியர்கள் விரைந்துவந்து மாணவர்களை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேர்த்தனர்.

      விழுப்புரம்:

      விழுப்புரம் அருகே வடவாம் பாளையத்தில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கூடத்தை சுற்றிலும் ஏராளமான மரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த மரங்களில் தற்போது தேனீக்கள் அதிக அளவில் கூடுகட்டி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இயற்கை உபாதைக்காக மரத்தடி யில் ஒதுங்குவது உண்டு. அதன்படி இன்று காலை 9.30 மணி அளவில் மாணவர்கள் மரத்த டிக்கு சென்றனர். அப்போது அங்கிருந்து படை யெடுத்து வந்த தேனீக்கள் மாண வர்களை கொட்டியது. இதனால் அவர்கள் அலறி துடித்தனர். சிறிது நேரத்தில் 15 மாணவர்கள் தேனீக்கள் கொட்டியதில் மயங்கினர். சத்தம் கேட்டு சக ஆசிரியர்கள் விரைந்துவந்து மாணவர்களை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங் களில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலு வலர் காளிதாஸ் விரைந்து சென்று மாணவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

      நிலக்கோட்டை தொகுதிக்குட்பட்ட அழகம்பட்டி பகுதியில் தேர்தல் பிரசாரத்தின்போது மயக்கமடைந்த நடிகர் மன்சூர்அலிகான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
      திண்டுக்கல்:

      திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சியின் வேட்பாளராக நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் கடந்த 1 மாதத்துக்கும் மேலாகவே மக்களை நேரடியாக சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார்.

      கட்சி சின்னம் ஒதுக்கப்பட்ட பிறகு கரும்பு விவசாயி சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். ஊர் மக்கள் அனைவரும் சாப்பிட வேண்டும் என்றால் விவசாயிகள் வாழ வேண்டும் என்று நூதன பிரசாரம் செய்து வருகிறார்.

      நேற்று நிலக்கோட்டை தொகுதிக்குட்பட்ட அழகம்பட்டி பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது மக்களை சந்தித்து நேரடியாக வாக்கு சேகரித்துக் கொண்டு இருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அவருடன் வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மன்சூர்அலிகான் நிலக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

      அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்ததில் ரத்த அழுத்தம், உடல் சோர்வு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இ.சி.ஜி. உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் அவருக்கு நடத்தப்பட்டது. தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.



      ஸ்ரீமுஷ்ணம் அருகே கோவில் பிரசாதம் சாப்பிட்டு 40 பேர் மயங்கி விழுந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

      ஸ்ரீமுஷ்ணம்:

      கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது குமாரகுடி குளத்து மேடு. இந்த கிராமத்தை சேர்ந்த சிலர் அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார்கள்.

      அவர்கள் குளத்துமேட்டு பகுதியில் ஓலை கொட்டகை அமைத்து அதில் அய்யப்பசாமி படத்தை வைத்து பூஜை நடத்தி வந்தனர். நேற்று மாலை அங்கு கன்னி பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

      பூஜை மற்றும் பஜனை முடிந்தவுடன் பக்தர்களுக்கு பிரசாதமாக சர்க்கரை பொங்கல், புளியோதரை, சுண்டல் போன்றவை வழங்கப்பட்டது. பிரசாதம் சாப்பிட்டுவிட்டு அனைவரும் வீடுகளுக்கு சென்றனர். சிறிது நேரத்தில் பிரசாதம் சாப்பிட்டவர்களுக்கு திடீரென்று வாந்தி- மயக்கம் ஏற்பட்டது.

      உடனே அக்கம் பக்கத்தினர் மயங்கி விழுந்த விஜயகாந்த் (33), துரை (44), விஷால் (21), தமயந்தி (22), ராம்கி (28) உள்பட 40 பேரை 4 ஆம்புலன்சுகளில் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

      கோவில் பிரசாதம் சாப்பிட்டு 40 பேர் மயங்கி விழுந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

      ×