என் மலர்
நீங்கள் தேடியது "poisonous beetles"
- வீட்டின் பின் புறத்தில் உள்ள சுமார் 8 அடி உயரம் உள்ள மா மரத்தில், கதண்டு விஷ வண்டுகள் கூடு கட்டி உள்ளது.
- அந்த வழியாக செல்லும் பொதுமக்களை தினந் தோறும் அச்சுறுத்தி வந்தது.
கடலூர்:
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே, கோவி லானூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் வியாபாரி மைக்கேல் ராயன் (வயது.60). இவரது வீட்டின் பின் புறத்தில் உள்ள சுமார் 8 அடி உயரம் உள்ள மா மரத்தில், கதண்டு விஷ வண்டுகள் கூடு கட்டிக்கொண்டு, அவரது வீட்டில் உள்ள வர்கள், அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் மற்றும் அந்த வழியாக செல்லும் பொதுமக்களை தினந் தோறும் அச்சுறுத்தி வந்தது. இது குறித்து, மங்கலம் பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் பாண்டியன், முஹமது புன்யாமீன், சிவசங்கரன், அன்புமணி, அருள்செல்வன், பார்த்திபன், ராஜதுரை ஆகியோர் அங்கு விரைந்து சென்று, விஷ வண்டு கூட்டினை முற்றிலும் அப்புறப் படுத்தினர்.
- 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் நெருஞ்சினக்குடி சாலைவழியாக தான் கோட்டூருக்கு செல்ல வேண்டும்.
- பனை மரங்களில் கூடுக்கட்டியிருந்த கதண்டுகள் சாலையில் சென்ற 6 பேரையும் கடித்தது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே மாவட்டக்குடி, ஆலாத்தூர், விக்கிரபாண்டியம், பள்ளிவர்த்தி, சேந்தமங்கலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் அன்றாடம் வேலைக்கும், பள்ளி கல்லூரிகளுக்கும் நெருஞ்சினக்குடி சாலைவழியாக தான் கோட்டூருக்கு செல்ல வேண்டும்
இந்த நிலையில் நேற்று பெரியகுடியைச் சேர்ந்த காவியா (வயது17) வர்ஷா (19), சேந்தமங்கலத்தை சேர்ந்த சிவகுமார் (40), நெருஞ்சினங்குடியை சேர்ந்த துரையப்பன் உள்பட 6 பேர், நெருஞ்சனக்குடி சாலை வழியாக கோட்டூருக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சாலையோரத்தில் இருந்த பனை மரங்களில் கூடுக்கட்டியிருந்த கதண்டுகள் சாலையில் நடந்து சென்ற 6 பேரையும் கடித்தது.
இதில் படுகாயம் அடைந்த 6 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து இருள் நீக்கி ஊராட்சி மன்ற தலைவர் கொடுத்த தகவலின் பெயரில் கோட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பனை மரங்களில் கூடு கட்டியிருந்த கதண்டுகளை அழித்தனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வேறு வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீயணைப்பு வீரர்கள் அழித்தனர்
- தென்னை மரத்தில் விஷ பூச்சிகள் கூடு கட்டியிருந்தது
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூர் மேல்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சொந்தமான தென்னை மரத்தில் விஷ பூச்சிகள் கூடு கட்டி உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் பொது மக்களை விஷ வண்டுகள் அச்சு றுத்தி வந்தன. இதனையடுத்து முருகேசன் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சென்று தென்னை மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை தீ பந்தம் மூலம் அழித்த னர். மேலும் நாட்டறம்பள்ளி அடுத்த தகரகுப்பம் பகுதியை சேர்ந்த சத்யராஜ் என்பவரது வீட்டின் அருகே மலை பாம்பு ஒன்றையும் தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனத்துறையினரி டம் ஒப்படைத்தனர்.
- ஒரு தென்னைமரத்தில் கதண்டுகள் கூடு கட்டி இருந்த நிலையில் ஆடுகள் கீழே மேய்ந்தன.
- இதில் வண்டுகள் ஆடுகளை கடித்தது ஆடு கத்திய படி இறந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை தெருவைச் சேர்ந்த சுந்தர் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள, வடகோவனூர் மேலத்தெருவில் உள்ளது.
இந்த தென்னந்தோப்பில் உள்ள ஒரு தென்னைமரத்தில் கதண்டுகள் கூடு கட்டி இருந்தது. இந்த நிலையில், அந்த தென்னை தோப்பையொட்டி உள்ள வயலில் 7 ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது கதண்டுகள் கூடு கட்டியிருந்த தென்னை மரத்தில் இருந்த ஒரு மட்டை காற்றில் பறந்து கீழே விழுந்தது. இதனால் கதண்டுகள் நாலாபக்கமும் சிதறி பறந்து அங்கு மேய்ந்து கொண்டிருந்த 7 ஆடுகளையும் கடித்தது.
இதில் ஆடுகள் வலியால் துடிதுடித்து கத்தியபடியே கீழே விழுந்தது. பின்னர், உடனடியாக, கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மயங்கி விழுந்த ஆடுகளை மீட்டனர். இதை தொடர்ந்து 7ஆடுகளுக்கும் கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ஒரு ஆடு இறந்தது.
இதையடுத்து இரவு நேரத்தில் தீயணைப்பு வீரர்கள்தென்னை மட்டையில் கூடு கட்டி இருந்த கதண்டுகளை தீயிட்டு அழித்தனர்.
- விசித்திரமான வகையில் கூடு கட்டியிருந்த பெரிய அளவிலான விஷ வண்டுகள்.
- காவேரி சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றார்.
கடலூர்:
மங்கலம்பேட்டை அருகே உள்ள கர்நத்தம் கிராமம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கோபு (வயது.46). இப்பகுதியில் உள்ள இவரது கான்கிரீட் வீட்டின் அருகே உள்ள இவரது பழைய ஓட்டு வீட்டில், கோபுவின் பாட்டி மனைவி காவேரி (வயது.72) என்பவர் வசித்து வந்தார். இந்த நிலையில், பழைய ஓட்டு வீட்டில் உள்ள பனை மரச் சாரத்தில், 3 அடுக்குகள் அமைத்து விசித்திரமான வகையில் கூடு கட்டியிருந்த பெரிய அளவிலான விஷ வண்டுகள், அங்கு படுத்திருந்த காவேரியை கடித்தது. இதனையடுத்து, காவேரி சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றார். இது குறித்த தகவலின்பேரில், மங்கலம்பேட்டை தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு நிலைய சிறப்பு அலுவலர் ஜெயச்சந்திரன் (போக்குவரத்து) தலைமையில், தீயணைப்பு வீரர்கள் பாண்டியன், முஹமது புன்யாமீன், அசோக், செல்வம் ஆகியோர் அங்கு விரைந்துச் சென்று, 3 அடுக்குகளில் விஷ வண்டுகள் கட்டியிருந்த கூட்டினை முற்றிலும் அகற்றி அப்புறபடுத்தினர்.
விருத்தாசலம்:
காட்டுமன்னார்கோவில் அடுத்த ஆண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஒருவரது இல்ல காதணி விழா விருத்தாசலம் அருகே கம்மாபுரம் சி.கீரனூரில் உள்ள பச்சையம்மன் கோவிலில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டவர்களுக்கு விருந்து வழங்கும் வகையில் அந்த பகுதியில் உள்ள மரத்தடியில் வைத்து சமையல் செய்தனர். அப்போது அங்கிருந்து வந்த புகையால், மரத்தில் இருந்த விஷவண்டுகள் கலைந்து, அங்கிருந்தவர்களை கடித்தன.
இதில் பிச்சமுத்து, பாக்கியராஜ், ராஜேசேகர், ராமலிங்கம், பழனியம்மாள், சங்கீதா, சேகர், ரேகா, பச்சமுத்து, உள்ளிட்ட 12 பேர் காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.






