கதண்டு கடித்து ஆடு பலி

ஒரு தென்னைமரத்தில் கதண்டுகள் கூடு கட்டி இருந்த நிலையில் ஆடுகள் கீழே மேய்ந்தன. இதில் வண்டுகள் ஆடுகளை கடித்தது ஆடு கத்திய படி இறந்தது.
கதண்டு கடித்து ஆடு பலி
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை தெருவைச் சேர்ந்த சுந்தர் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள, வடகோவனூர் மேலத்தெருவில் உள்ளது.

இந்த தென்னந்தோப்பில் உள்ள ஒரு தென்னைமரத்தில் கதண்டுகள் கூடு கட்டி இருந்தது. இந்த நிலையில், அந்த தென்னை தோப்பையொட்டி உள்ள வயலில் 7 ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது கதண்டுகள் கூடு கட்டியிருந்த தென்னை மரத்தில் இருந்த ஒரு மட்டை காற்றில் பறந்து கீழே விழுந்தது. இதனால் கதண்டுகள் நாலாபக்கமும் சிதறி பறந்து அங்கு மேய்ந்து கொண்டிருந்த 7 ஆடுகளையும் கடித்தது.

இதில் ஆடுகள் வலியால் துடிதுடித்து கத்தியபடியே கீழே விழுந்தது. பின்னர், உடனடியாக, கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மயங்கி விழுந்த ஆடுகளை மீட்டனர். இதை தொடர்ந்து 7ஆடுகளுக்கும் கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ஒரு ஆடு இறந்தது.

இதையடுத்து இரவு நேரத்தில் தீயணைப்பு வீரர்கள்தென்னை மட்டையில் கூடு கட்டி இருந்த கதண்டுகளை தீயிட்டு அழித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com