search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "6 Injured"

    • 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் நெருஞ்சினக்குடி சாலைவழியாக தான் கோட்டூருக்கு செல்ல வேண்டும்.
    • பனை மரங்களில் கூடுக்கட்டியிருந்த கதண்டுகள் சாலையில் சென்ற 6 பேரையும் கடித்தது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே மாவட்டக்குடி, ஆலாத்தூர், விக்கிரபாண்டியம், பள்ளிவர்த்தி, சேந்தமங்கலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் அன்றாடம் வேலைக்கும், பள்ளி கல்லூரிகளுக்கும் நெருஞ்சினக்குடி சாலைவழியாக தான் கோட்டூருக்கு செல்ல வேண்டும்

    இந்த நிலையில் நேற்று பெரியகுடியைச் சேர்ந்த காவியா (வயது17) வர்ஷா (19), சேந்தமங்கலத்தை சேர்ந்த சிவகுமார் (40), நெருஞ்சினங்குடியை சேர்ந்த துரையப்பன் உள்பட 6 பேர், நெருஞ்சனக்குடி சாலை வழியாக கோட்டூருக்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது சாலையோரத்தில் இருந்த பனை மரங்களில் கூடுக்கட்டியிருந்த கதண்டுகள் சாலையில் நடந்து சென்ற 6 பேரையும் கடித்தது.

    இதில் படுகாயம் அடைந்த 6 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து இருள் நீக்கி ஊராட்சி மன்ற தலைவர் கொடுத்த தகவலின் பெயரில் கோட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பனை மரங்களில் கூடு கட்டியிருந்த கதண்டுகளை அழித்தனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வேறு வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

    இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒருவருக்கு ஒருவர் தடி, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர்.
    • மோதலில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே எலந்தம்பட்டு காலணியை சேர்ந்தவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கலியபெருமாள். இவரது மனைவி உமையாள் (வயது 56) இவர் நேற்று இறந்தார். அவரது இறுதி ஊர்வலம்நேற்று மாலை நடந்தது. இந்த ஊர்வலத்தின் போது மாலையை அதே ஊரை சேர்ந்த கார்த்தி (25) என்பவர், பரத் (25) என்பவர் கழுத்தில் போட்டுள்ளார். இதனால் இருவரு க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சவ ஊர்வலம் முடித்து விட்டு வந்து ஒருவருக்கு ஒருவர் தடி, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர்.

    இதில் பஞ்சாட்சரம் (55), பரத் (25), வடிவேல்(53), கார்த்தி (25) உள்பட 6 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்த அனை வரும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்க்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது குறித்து 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து, மோதலில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×