search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bite"

    • நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக, அருகில் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
    • அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று, ஹேமலதாவை கடித்து விட்டது.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள சின்ன வீராணம் அடுத்த வயக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி ஹேமலதா (வயது 37). இவர் நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக, அருகில் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று, ஹேமலதாவை கடித்து விட்டது. இதனால் வலியால் அலறி துடித்த ஹேமலதாவை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு வலசையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஹேமலதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாய்களில் இனப்பெருக்க காலம் என்பதால்தெரு நாய்கள் கும்மபலாக ரோட்டில் திரிகின்றன. இதனால் பொதுமக்கள்தெருவில் நடக்வோ, இருசக்கர வாகனங்களில் செல்லவோ அச்சப்பட்டு வருகின்றனர்.
    • திருச்செங்கோடு பகுதியில் கடந்த 24மணி நேரத்தில் 20 பேரை தெரு நாய்கள் கடித்து குதறி யுள்ளன.

    திருச்செங்கோடு:

    தற்போது நாய்களில் இனப்பெருக்க காலம் என்பதால்தெரு நாய்கள் கும்மபலாக ரோட்டில் திரிகின்றன. இதனால் பொதுமக்கள்தெருவில் நடக்வோ, இருசக்கர வாகனங்களில் செல்லவோ அச்சப்பட்டு வருகின்றனர். தெருக்களின் குறுக்கே திடீரென நாய்கள் கூட்டமாகஒன்றுக்கு ஒன்று சண்டையிட்டுக் கொண்டு அதுவும் வேகமாக சாலையை கடப்பதால் இருசக்கர வாகனஓட்டிகள் நாய்கள் மீத மோதிவிழுந்து காயமடைவது தொடர்ந்து நடந்து வந்தது.

    திருச்செங்கோடு பகுதியில் கடந்த 24மணி நேரத்தில் 20 பேரை தெரு

    நாய்கள் கடித்து குதறி யுள்ளன. காயம் அடைந்த வர்களில் நாமக்கல் ரோடு சஞ்சய், ஆயிரத்தா குட்டை தரணி, எஸ்.என்.டி.ரோடு சின்னதம்பி, கொல்லப்பட்டி உஷா, ஏ.கே.இ. ரோடு காவியா, அம்பேத்கார் நகர் பகுதியைசேர்ந்த சுசிலா , ராஜம்மாள், முத்துலட்சுமி, நேசமணி உள்பட சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் அடங்குவர். இவர்கள் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மேலும் சிலர் ஈரோடு தனியார் மருத்துவமனை சென்றுள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி நிர்வாகத்தினர் நாய்களை பிடித்து அறுவை சிகிச்சை செய்யவும் நாய்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுத்த வருகின்றனர். நாய்க்கடி மருந்துகள் இருப்பில உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

    வி‌ஷ வண்டுகள் கடித்ததில் 12 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    விருத்தாசலம்:

    காட்டுமன்னார்கோவில் அடுத்த ஆண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஒருவரது இல்ல காதணி விழா விருத்தாசலம் அருகே கம்மாபுரம் சி.கீரனூரில் உள்ள பச்சையம்மன் கோவிலில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்டவர்களுக்கு விருந்து வழங்கும் வகையில் அந்த பகுதியில் உள்ள மரத்தடியில் வைத்து சமையல் செய்தனர். அப்போது அங்கிருந்து வந்த புகையால், மரத்தில் இருந்த வி‌ஷவண்டுகள் கலைந்து, அங்கிருந்தவர்களை கடித்தன.

    இதில் பிச்சமுத்து, பாக்கியராஜ், ராஜேசேகர், ராமலிங்கம், பழனியம்மாள், சங்கீதா, சேகர், ரேகா, பச்சமுத்து, உள்ளிட்ட 12 பேர் காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    வடமதுரை அருகே தெருநாய்கள் கடித்ததில் புள்ளிமான் பறிதாபமாக இறந்தது.
    வடமதுரை:

    வடமதுரையை அடுத்த பாறைப்பட்டிக்கு அருகேயுள்ள வனப்பகுதியில் இருந்து புள்ளிமான் ஒன்று நேற்று வந்தது. அந்த புள்ளி மானை அப்பகுதியில் உள்ள தெருநாய்கள் துரத்தி கடித்தன. இதில் காயம் அடைந்த அந்த புள்ளிமான் மிரண்டு ஓடி அந்த பகுதியில் உள்ள தண்ணீரில்லாத கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதைத்தொடர்ந்து அந்த புள்ளிமானை, அப்பகுதியை சேர்ந்தவர்கள் கிணற்றுக்குள் இறங்கி மீட்டனர். தெருநாய்கள் கடித்ததில் புள்ளிமான் படுகாயம் அடைந்ததால் உயிருக்கு போராடி கொண்டிருந்தது.

    இதுகுறித்து அய்யலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வருவதற்குள் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. பின்னர் இறந்த மானின் உடலை வனத்துறையினர் கைப்பற்றினர். அது, சுமார் 2 வயது உடைய பெண் புள்ளிமான் என்றும், கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் மானின் உடலை பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். 
    தலைவாசல் அருகே நாய்கள் கடித்ததில் 13 ஆடுகள் பலியான சம்பவத்தால் பொதுமக்களும், விவசாயிகளும் அச்சமடைந்து உள்ளனர்.
    தலைவாசல்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை புதூரைச் சேர்ந்தவர் முகமது சுல்தான். விவசாயி. இவர் தனது விவசாய தோட்டத்தில் கொட்டகை போட்டு அதில் 30 ஆடுகளை வளர்த்து வந்தார்.

    நேற்று அதிகாலை முகமது சுல்தானின் மனைவி நூர்ஜகான் ஆட்டு கொட்டகைக்கு சென்றார். அப்போது அங்கு ஆடுகள் செத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி கணவருக்கு தகவல் கொடுத்தார். முகமது சுல்தான் வந்து பார்த்தபோது 13 ஆடுகள் செத்து கிடந்தன.

    இதுகுறித்து முகமது சுல்தான் கிராம நிர்வாக அலுவலர் ரகுபதியிடம் தெரிவித்தார். இதையடுத்து காட்டுக்கோட்டை கால்நடை உதவி மருத்துவர் மணிவேல் அங்கு வந்து பரிசோதனை செய்தார். பின்னர் ஆட்டின் உடல்கள் புதைக்கப்பட்டன. நாய்கள் கடித்ததில் ஆடுகள் செத்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுபற்றி அந்த கிராம மக்கள் கூறும்போது, காட்டுக்கோட்டை சுடுகாட்டில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதேபோல் கறிக்கடை பகுதிகளிலும் நாய்கள் சுற்றுகின்றன. இவற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த சில நாட்களில் இதே ஊரைச் சேர்ந்த சிலருடைய 100 கோழிகள், 30 ஆடுகள், ஒரு கன்றுகுட்டி ஆகியவற்றை நாய்கள் கடித்துக் கொன்றன. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் அச்சமடைந்து உள்ளனர். எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும், என்றனர். 
    ×