40 நாட்களில் 7 முறை பாம்புக் கடி.. சனி ஞாயிறில் மட்டுமே கடிக்கும்.. இளைஞரின் கனவில் சொன்னது என்ன?

கடந்த 40 நாட்களில் மட்டுமே இவர் 7 முறை விஷப் பாம்புகளிடம் இருந்து கடி வாங்கியுள்ளார். 9 வது முறை தன்னை கடிக்கும்போது தான் இறந்துவிடுவேன் என்றும் கனவில் பாம்பு வந்து கூறியது என்றும் தெரிவித்தார்.
40 நாட்களில் 7 முறை பாம்புக் கடி.. சனி ஞாயிறில் மட்டுமே கடிக்கும்.. இளைஞரின் கனவில் சொன்னது என்ன?
Published on

பாம்புகள் வஞ்சம் வைத்து கடிக்கும் என்பது வாய்மொழிக் கதையாக மக்கள் மத்தியில் பேசப்படும் ஒன்று. ஆனால் கதைகளேயே மிஞ்சும் வகையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நடந்து வரும் சம்பவம் அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள சௌரா கிராமத்தைச் சேர்நதவர் ௨௪ வ்யாவிகாஸ் தூபே. கடந்த 40 நாட்களில் மட்டுமே இவர் 7 முறை விஷப் பாம்புகளிடம் இருந்து கடி வாங்கியுள்ளார்.

கடந்த ஜூன் 2 ஆம் தேதி தூபேவை அவர் வீட்டில் கட்டிலில் படுத்திருந்தபோது முதல் தடவை பாம்பு கடிதித்துள்ளது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பின் உயிர்பிழைத்தார். இவ்வறாக ஜூன் 2 முதல் ஜூலை 7 வரையிலான காலகட்டத்தில் 6 முறை தூபேவை பாம்புகள் கடித்துள்ளன. வீட்டில் இருந்தால் பாம்பு கடிக்கிறது என்று அவரை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர் பெற்றோர். ஆனால் உறவினர் வீட்டில் வைத்தும் அவரை 5 வது முறையாக பாம்பு கடித்துள்ளது.

அதன்பின் சிகிச்சை பெற்று அவர் தனது வீட்டுக்கே திரும்பிய நிலையில் நேற்று அவரை மீண்டும் பாம்பு கடித்துள்ளது. தற்போது 6 வது பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று உயிர்பிழைத்துள்ள தூபே பேசுகையில், தன்னை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன என்றும் அவை தன்னை கடிக்கப்போகிறது என்று தன்னால் முன்கூட்டியே உணர முடிகிறது, 9 வது முறை தன்னை கடிக்கும்போது தான் இறந்துவிடுவேன் என்றும் கனவில் பாம்பு வந்து கூறியது என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் குணமாகி வீடு திரும்பிய அவரை மீண்டும் இன்று [ஜூலை 13] சனிக்கிழமை வந்து பாம்பு கண்டித்துள்ளது. இதனால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிராமத்தின் அருகில் உள்ள ஒரே மருத்துவமனையில் அவர் மீண்டும் மீண்டும் சிகிச்சை பெற்று வருவதால் அவரது நிலைமை மோசமாகியுள்ளது. சனி ஞாயிறில் மட்டுமே அவரை எப்படி பாம்பு கடிக்கிறது என்று மருத்துவர்களும் குழப்பத்தில் உள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com