மங்கலம்பேட்டை அருகே விஷ வண்டுகள் அகற்றம்

வீட்டின் பின் புறத்தில் உள்ள சுமார் 8 அடி உயரம் உள்ள மா மரத்தில், கதண்டு விஷ வண்டுகள் கூடு கட்டி உள்ளது.அந்த வழியாக செல்லும் பொதுமக்களை தினந் தோறும் அச்சுறுத்தி வந்தது.
மங்கலம்பேட்டை அருகே மா மரத்தில் இருந்த விஷ வண்டுகளை அகற்றிய காட்சி.
மங்கலம்பேட்டை அருகே மா மரத்தில் இருந்த விஷ வண்டுகளை அகற்றிய காட்சி.
Published on

கடலூர்:

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே, கோவி லானூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் வியாபாரி மைக்கேல் ராயன் (வயது.60). இவரது வீட்டின் பின் புறத்தில் உள்ள சுமார் 8 அடி உயரம் உள்ள மா மரத்தில், கதண்டு விஷ வண்டுகள் கூடு கட்டிக்கொண்டு, அவரது வீட்டில் உள்ள வர்கள், அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் மற்றும் அந்த வழியாக செல்லும் பொதுமக்களை தினந் தோறும் அச்சுறுத்தி வந்தது. இது குறித்து, மங்கலம் பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் பாண்டியன், முஹமது புன்யாமீன், சிவசங்கரன், அன்புமணி, அருள்செல்வன், பார்த்திபன், ராஜதுரை ஆகியோர் அங்கு விரைந்து சென்று, விஷ வண்டு கூட்டினை முற்றிலும் அப்புறப் படுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com