பண்ருட்டி அருகே பாம்பு கடித்து பெண் பலி

கடந்த 9-ந் தேதி காலை தனது வீட்டை சுத்தம் செய்தபோது பரணை யில் இருந்த பாம்பு இவரை கடித்தது.மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பண்ருட்டி அருகே பாம்பு கடித்து பெண் பலி
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கோட்ட லாம்பாக்கத்தை சேர்ந்தவர் நாகப்பன் மகள் கங்கா (வயது 31), திருமணம் ஆனவர். இவர் கடந்த 9-ந் தேதி காலை தனது வீட்டை சுத்தம் செய்தபோது பரணை யில் இருந்த பாம்பு இவரை கடித்தது.

இதனால் மயங்கி விழுந்த கங்காவை, பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com