விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் திடீர் மயக்கம்

15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்து இருந்தனர்.அதிக வெப்பம் காரணமாக குழந்தைகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர்.
விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் திடீர் மயக்கம்
Published on

சென்னை:

மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகசத்தை பார்க்க 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்து இருந்தனர். இதனால் கடற்கரையில் கூட்டம் அலைமோதியது. விமானங்கள் சீறிப்பாய்ந்த போது பொதுமக்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

கூட்ட நெரிசல் மற்றும் அதிக வெப்பம் காரணமாக குழந்தைகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சில் உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com