மயங்கி விழுந்த கூலி தொழிலாளி சாவு; ஒருவர் கைது

செந்தில்குமார் ராமலிங்கத்தை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. வயலுக்கு சென்ற ராமலிங்கம் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
பலியான ராமலிங்கம்.
பலியான ராமலிங்கம்.
Published on

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் அடுத்த மனக்குன்னம் மேல தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 45). கூலி தொழிலாளி. இவரது மனைவி காந்திமதி.இவரது எதிர்வீட்டில் செந்தில்குமார் (41) என்பவர் வசித்து வருகிறார்.

இவர் வீட்டில் வளர்க்கும் ஆடுகள் அடிக்கடி ராமலிங்கம் வீட்டிற்கு சென்று பூச்செடிகளை மேய்ந்து விடுவது வழக்கம்.

இதனையடுத்து, நேற்றும் அதேபோல் ஆடுகள் பூச்செடிகளை மேய்ந்த போது ராமலிங்க மும், அவரது மனைவியும், செந்தில்குமாரை சத்தம் போட்டுள்ளனர். மேலும், ஆடுகளை கட்டிப்போட்டு வளர்க்கும்படி கூறியுள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார் ராமலிங்கத்தை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. மேலும், இருவருக்கும் தகராறும் ஏற்பட்டுள்ளது.

பின்னர், வயலுக்கு சென்ற ராமலிங்கம் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பனந்தாள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எதிர்பாராத விதமாக பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து, ராமலிங்கம் மனைவி கொடுத்த புகாரின் பேரில் பந்தநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com