search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cannabis"

    • டாஸ்மாக்கில் கொள்ளை அடித்தவர்கள் கஞ்சா விற்ற வழக்கில் சிக்கினர்.
    • திருச்சுழி அருகே போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதி–களவில் கஞ்சா விற்பனை செய்யபட்டு வருவதாக திருச்சுழி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து திருச்சுழி காவல் நிலைய இன்ஸ்பெக் டர் மணிகண்டன் தலைமை–யிலான போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சத்திர புளி–யங்குளம் பகுதியில் ரோந்து வந்தபோது அங்கு சந்தேகிக் கும் வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசா–ரணை மேற்கொண்ட–னர். இதில் அவர்கள் முன் னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் இருவரையும் திருச்சுழி காவல் நிலையம் அழைத்துச்சென்று விசா–ரித்தனர்.

    இதில் ஒருவர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா நாகமுகுந்தங்குடி பகுதியை சேர்ந்த கிருஷ் ணன் மகன் ரஞ்சித் (23) மற்றும் சிவகங்கை மாவட் டம் மானாமதுரை தாலுகா மூங்கில் ஊரணி பகுதியை சேர்ந்த பாண்டிச்சாமி மகன் சிலம்பரசன் (17) என்பதும், இருவரும் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை சட்டவிரோதமாக அப்பகு–தியிலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

    இதனையடுத்து மேலும் அவர்களை சோதனை மேற்கொண்டதில் சுமார் இரண்டரை கிலோ கஞ்சா இருந்ததையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா விற்பனை செய்த இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இருவரும் திருச்சுழி பள்ளி–மடம் அரசு டாஸ்மாக் கடை–யில் ரூ.6 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்ற வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • பாண்டமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையால் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அதிக அளவு கள்ளத்தன மாக மது விற்பனையும், லாட்டரி விற்பனையும் நடக்கிறது.
    • பாண்டமங்கலத்தில் கஞ்சா, லாட்டரி, சந்து கடையில் மது விற்பனை நடக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டித்து வாட்ஸ் அப்பில் மெசேஜ் போட்டுள்ளேன்.

    பரமத்திவேலூர்;

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவராக தி.மு.க.,வைச் சேர்ந்த சோமசேகர் உள்ளார்.

    போலீசில் புகார்

    இவர் பாண்டமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையால் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர். இப்பகுதியில் கள்ளத்தன மாக மது விற்பனையும், லாட்டரி விற்பனையும் நடக்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரமத்தி வேலூர் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து பாண்ட மங்கலம் பேரூராட்சி தலைவர் சோமசேகர் கூறியதாவது:-

    பாண்டமங்கலத்தில் கஞ்சா, லாட்டரி, சந்து கடையில் மது விற்பனை நடக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டித்து வாட்ஸ் அப்பில் மெசேஜ் போட்டுள்ளேன்.

    தொடர்ந்து இப்பகுதியில் கஞ்சா, லாட்டரி, சட்டவிரோத மது விற்பனையை அனுமதிக்க முடியாது. கஞ்சா விற்பனையால் இளைஞர்களை வாழ்வு சீரழிகின்றது. பொதுமக்கள் நலன் கருதி சட்ட விரோத செயல்களை தடுக்க பரமத்தி வேலூர் இன்ஸ்பெக்டர் இந்திராணியிடம் புகார் அளித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என கூறினார்.

    பாண்டமங்கலத்தில் நடக்கும் சட்டவிரோத செயல்களை போலீசார் கண்டு கொள்வதில்லை. மாவட்ட காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரெயில்களில் கஞ்சா கடத்துவதை தடுக்கும் வகையில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • குறிப்பாக இந்த ரெயிலில் கஞ்சா கடத்தல் அதிகரித்து வருவதை அடுத்து சமீபகாலமாக போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    சேலம்:

    வட மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்துவதை தடுக்கும் வகையில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இருப்பினும் தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் (வண்டி எண்-13351) ரெயிலில் தொடர்ந்து கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் கஞ்சா கடத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த ரெயிலில் கஞ்சா கடத்தல் அதிகரித்து வருவதை அடுத்து சமீபகாலமாக போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    ரகசிய தகவல்

    இந்த நிலையில் இன்று அதிகாலை தன்பாத்தில் இருந்து சேலம் வழியாக ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைய டுத்து சப் -இன்ஸ் பெக்டர் பாலமுருகன், ஏட்டுக்கள் இசையரசு, முனுசாமி ஆகியோர் பொம்மிடி ெரயில் நிலையத்திற்கும், சேலம் ெரயில் நிலையத்திற்கும் இடையே அந்த ரெயில் வந்தபோது, அதில் ஏறி சோதனை நடத்தினர். அப்போது பொதுபெட்டியில் கருப்பு நிற பை கேட்பாரற்று கிடந்தது.

    4½ கிலோ கஞ்சா

    இந்த பையை சோதனை செய்ததில் 4½ கிலோ கஞ்சா இருந்தது. அதனை கைப்பற்றி விசாரணை செய்ததில் அதனை கொண்டு வந்தவர் யார்? என்று தெரியாததால் 4½ கிலோ கஞ்சாவையும் சேலம் ரெயில்வே போலீஸ் நிலை யத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும் ேசலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயிலில் கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த ரெயிலில் வடமாநிலங்களில் இருந்து கேரள மாநிலத்துக்கு தமிழகம் வழியாக கஞ்சா கடத்தல் தொடர்கதை ஆகி வருகிறது. இதுபோன்று பிடிக்கப்படும் பை எந்த ரெயில் நிலையத்தில் இருந்து ஏற்றப்படுகிறது என்பதை கண்காணிப்பு கேமரா பதிவுகளின் மூலம் கண்டறிந்து கஞ்சா கடத்தும் பிரதான கும்பலை போலீசார் கைது செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • 3 கிலோ கஞ்சா, கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    • மதுரையை சேர்ந்த கருப்பசாமி (28), நாகேந்திரன் (25) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் போயம்பா ளையம், குருவாயூரப்பன் நகரில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக, அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்ததில், கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அங்கிருந்த, 3 கிலோ கஞ்சா, கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த மதுரையை சேர்ந்த கருப்பசாமி (28), நாகேந்திரன் (25) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் மதுரையிலிரு ந்து கார் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து குருவாயூரப்ப ன் நகரில் பதிக்க வைத்து திருப்பூரின் பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்ததும் தெரியவந்தது.

    • ரோந்தும் பணியில் சிக்கினார்
    • போலீசார் விசராணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் போலீசார் கம்பிக்கொல்லை பகுதியில் ரோந்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர் நாயக்கனேரி ஊராட்சி பகுதியை சேர்ந்த ஆனந்தன் மகன் அஜித் (வயது 23) என்பதும், பாக்கெட்டில் 50 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரிந்தது.

    இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 50 கிராம் கஞ் சாவை பறிமுதல் செய்தனர்.

    • 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    • அண்ணாநகர் எஸ்.எம்.பி. காலனியை சேர்ந்த வேல்முருகன் மகன் அர்ஜூன் என்பவரை ேபாலீசார் கைது செய்தனர்.

    மதுரை

    மதுைர மாநகர் பகுதியில் நாளுக்கு நாள் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்தும் பலனில்லை. சமூக விரோதி கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர்.

    கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க ேபாலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். அதன்படி சம்ப வத்தன்று தல்லாகுளம் போலீசார் புதுநத்தம் ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஓம்சக்தி கோவில் அருகே 2 பேர் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தனர்.

    அவர்கள் ேபாலீசாரை கண்டதும் தப்ப முயன்றனர். உடனே போலீசார் 2 பேரையும் விரட்டி பிடித்து ேசாதனையிட்டபோது அவர்களிடம் 9 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

    தொடர் விசாரணை யில் அவர்கள் ஆண்டிப்பட்டி கள்ளர் தெருவை சேர்ந்த விருமாண்டி(வயது52), மணியாரம்பட்டி கணேசன்(52) என தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை ஒபுளாபடித்துரை பகுதியில் மதிச்சியம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற அண்ணாநகர் எஸ்.எம்.பி. காலனியை சேர்ந்த வேல்முருகன் மகன் அர்ஜூன் என்பவரை ேபாலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

    • சின்னசேலம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வீ.கூட்ரோடு பகுதியில் சின்னசேலம் போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது வீ.கூட்டுரோடு அருகே வேப்பூர் ரோட்டில் உள்ள பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்குரிய 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர்.

    அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ள னர். பின்னர் அவர்களை சோதனை செய்ததில் 250 கிராம் கஞ்சா பிடிபட்டது. 2 வாலிபர்களையும் சின்ன சேலம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் சின்னசேலம் அருகே உள்ள பூசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் (வயது28) என்பதும், மற்றொரு நபர் சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் சாத்தப்பாடி கிராமம் மடத்தெருவைச் சேர்ந்த அரங்கநாதன் (வயது 28) என்பதும் தெரியவந்தது. பின்பு 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

    • 500 மதுக்கடைகளை தமிழக அரசு மூடியிருப்பதை வரவேற்கிறோம்.
    • பா.ஜ.க 2024-ம் ஆண்டில் நடைபெற உள்ள தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை தழுவ உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பால கிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:-

    வள்ளலார் குறித்து தமிழக கவர்னர் கூறிய கருத்து அவரை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. சனாதனம், மதவெறி, சாதி பேதம் போன்றவற்றை கடுமையாக எதிர்த்தவர் வள்ளலார்.

    இந்நிலையில், சனாதனத்தின் உச்சம் வள்ளலார் எனக் கூறி, அவர் மீது காவியை போர்த்தியுள்ளார். இதே போல இந்தியாவை பற்றி காரல் மார்க்ஸ் தவறாக பேசியிருப்பதாக கவர்னர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது.

    இந்த மாதிரியான போக்கை கவர்னர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கவர்னரை எதிர்த்து மிகப்பெரிய இயக்கம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.

    பா.ஜ.க 2024 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைத் தழுவ உள்ளது. இந்நிலையில் எவ்வளவு கூறினாலும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்துள்ளது.

    தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நலன் புறக்கணிப்பு, மாநில சுயாட்சிக்கு எதிர்ப்பு, இந்தி திணிப்பு போன்ற கொள்கைகளில் ஈடுபடும் பா.ஜ.க.வுடன் துணை போவது தமிழ்நாட்டுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் என அ.தி.மு.க.வினருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

    அ.தி.மு.க ஆட்சியில் கூட்டுறவு துறையில் ரூ. 122 கோடி முறைகேடு நடத்துள்ளதாக அறப்போர் இயக்கம் தகவல் சேகரித்து கூட்டுறவு துறை அமைச்சரிடம் வழங்கியுள்ளது.

    இந்த மிகப்பெரிய முறைகேடு குறித்து தமிழக அரசு குழு அமைத்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

    தற்போது, 500 மதுக்கடைகளைத் தமிழக அரசு மூடியிருப்பதை வரவேற்கிறோம். இதேபோல படிப்படியாக அனைத்து மதுக்கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதே போல கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற போதை பொருட்களையும் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.

    குறுவை சாகுபடிக்கு கூட்டுறவு சங்கங்களில் நகைக் கடன் மட்டுமல்லாமல், தேவையான அளவுக்கு பயிர்க்கடனும் வழங்க வேண்டும்.

    இதேபோல, நிகழாண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடும் அமல்படுத்த வேண்டும். இத்திட்டத்தைத் தனியார் நிறுவனங்கள் செயல்படுத்த முன் வராவிட்டால், தமிழக அரசே அதை ஏற்று நடத்த வேண்டும்.

    அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன், மாநகரச் செயலர் வடிவேலன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி. கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் குருசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

    • வாள்-கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைதானார்.
    • முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார்.

    பசும்பொன்

    கமுதி அருகே உள்ள அபிராமம் பஸ் நிலையத்தில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து போலீசார் அவரை சோதனையிட்டனர்.

    அப்போது வாள் மற்றும் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அைத பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அவர் அபிராமம் அருகே உள்ள தரைக்குடி கிராமத்தை சேர்ந்த பொன்முத்துராமலிங்கம் (வயது 22) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    • கேரளா மாநிலம் ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • பொதுபெட்டியில் சீட் எண்-70 -ன் மேலே லக்கேஜ் ஸ்டேண்டில் மாட்டி வைக்கப்பட்டிருந்த கருப்பு கலர் 2 சோல்டர் பேக்கை சோதனை செய்ததில் சுமார் 10 கிலோ கஞ்சா இருந்ததை கைப்பற்றினர்.

    சேலம்:

    தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சேலம் ரெயில்வே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் இசையரசு, அசோக்குமார் ஆகியோர் ஜோலார்பேட்டையில் இருந்து சேலம் வரை சோதனை செய்தனர். அப்போது, பொதுபெட்டியில் சீட் எண்-70 -ன் மேலே லக்கேஜ் ஸ்டேண்டில் மாட்டி வைக்கப்பட்டிருந்த கருப்பு கலர் 2 சோல்டர் பேக்கை சோதனை செய்ததில் சுமார் 10 கிலோ கஞ்சா இருந்ததை கைப்பற்றினர்.

    இந்த 2 பேக்கை வைத்திருந்த கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அவர், விஜயவாடாவில் இருந்து கஞ்சா வாங்கிக்கொண்டு கேரள மாநிலம் செங்கனூர் பகுதியில் விற்பனை செய்தற்காக கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரை கைது செய்தனர். சேலம் ரெயில்வே நிலையத்தில் ரெயில் வந்ததும் போலீசார், அந்த நபரையும் பறிமுதல் செய்த கஞ்சாவை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இறக்கி மேல் நடவடிக்கைக்காக சேலம் என்.ஐ.பி. சி.ஐ.டி யிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

    மதுரை

    வைகை வடகரை எம்.ஜி.ஆர்.பாலம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறு வதாக செல்லூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்கா ணித்தனர்.அப்போது 2 வாலிபர்கள் கஞ்சா விற்று கொண்டி ருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    அதில் அவர்கள் தத்தனேரி கண்மாய்கரை கணேசபுரம் பாண்டி மகன் சுபாஷ் என்ற படையப்பா (வயது23), மதுரை பாக்கியநாதபுரம் ஜோசப் மகன் தினேஷ்குமார் (20) என்பது தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    பால நாகம்மாள் கோவில் பின்புறம் உள்ள பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போதைப் பொருள் தடுப்புபிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு ஒரு வாலிபர் கஞ்சா விற்று கொண்டிருந்தார்.

    விசாரணையில் அவர் தேனி மாவட்டம் வருசநாடு சிங்கராஜாபுரத்தைச் சேர்ந்த கணேசன் மகன் ராஜசேகர் (28) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    மேலும் அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் வைத்து காசிமாயன் மகன் முருகன்(23) என்பவர் கஞ்சா விற்று கொண்டி ருந்தார். அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

    • ஜெயராமன் வாரசந்தையில் விற்று விட்டு மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டி ருந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே ஒட்டம் பட்டு என்ற ஊரை சேர்ந்த வர் ஜெயராமன் (வயது 60). விவசாயி. இவர் அதிகாலை யில் தனது ஆடுகளை செஞ்சியில் நடை பெற்ற வார சந்தையில் விற்று விட்டு மீண்டும் தனது மோட்டார் சைக்கி ளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவர் செஞ்சி-விழுப் புரம் சாலை பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம் எதிரே சென்றபோது அவரை வழி மறித்த ஒரு நபர் தான் போலீஸ் அதிகாரி என்றும், நீ கஞ்சா கடத்தி செல்கிறாய் உன்னை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி அவரை சோதனை செய்த நபர் அவர் வைத்திருந்த ஆடு விற்ற பணம் ரூ.43,300 எடுத்துக் கொண்டு தயாராக வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுவிட்டார். இது குறித்து அவர் செஞ்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ் என்று கூறிய மர்ம நபரை வலை வீசி தேடிவரு கிறார்கள். போலீஸ் என்று கூறி விவசாயிடம் பணம் பறித்த சம்பவம் இப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×