என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தன்பாத்-  ஆலப்புழா எக்ஸ்பிரஸ்ரெயிலில் 4½ கிலோ கஞ்சா பறிமுதல்
    X

    போலீசார் பறிமுதல் செய்த 4½ கிலோ கஞ்சா

    தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ்ரெயிலில் 4½ கிலோ கஞ்சா பறிமுதல்

    • ரெயில்களில் கஞ்சா கடத்துவதை தடுக்கும் வகையில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • குறிப்பாக இந்த ரெயிலில் கஞ்சா கடத்தல் அதிகரித்து வருவதை அடுத்து சமீபகாலமாக போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    சேலம்:

    வட மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்துவதை தடுக்கும் வகையில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இருப்பினும் தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் (வண்டி எண்-13351) ரெயிலில் தொடர்ந்து கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் கஞ்சா கடத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த ரெயிலில் கஞ்சா கடத்தல் அதிகரித்து வருவதை அடுத்து சமீபகாலமாக போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    ரகசிய தகவல்

    இந்த நிலையில் இன்று அதிகாலை தன்பாத்தில் இருந்து சேலம் வழியாக ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைய டுத்து சப் -இன்ஸ் பெக்டர் பாலமுருகன், ஏட்டுக்கள் இசையரசு, முனுசாமி ஆகியோர் பொம்மிடி ெரயில் நிலையத்திற்கும், சேலம் ெரயில் நிலையத்திற்கும் இடையே அந்த ரெயில் வந்தபோது, அதில் ஏறி சோதனை நடத்தினர். அப்போது பொதுபெட்டியில் கருப்பு நிற பை கேட்பாரற்று கிடந்தது.

    4½ கிலோ கஞ்சா

    இந்த பையை சோதனை செய்ததில் 4½ கிலோ கஞ்சா இருந்தது. அதனை கைப்பற்றி விசாரணை செய்ததில் அதனை கொண்டு வந்தவர் யார்? என்று தெரியாததால் 4½ கிலோ கஞ்சாவையும் சேலம் ரெயில்வே போலீஸ் நிலை யத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும் ேசலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயிலில் கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த ரெயிலில் வடமாநிலங்களில் இருந்து கேரள மாநிலத்துக்கு தமிழகம் வழியாக கஞ்சா கடத்தல் தொடர்கதை ஆகி வருகிறது. இதுபோன்று பிடிக்கப்படும் பை எந்த ரெயில் நிலையத்தில் இருந்து ஏற்றப்படுகிறது என்பதை கண்காணிப்பு கேமரா பதிவுகளின் மூலம் கண்டறிந்து கஞ்சா கடத்தும் பிரதான கும்பலை போலீசார் கைது செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×