search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arakkonam"

    அரக்கோணம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த இச்சிப்புத்தூரில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை அந்த பகுதியில் ஆய்வு செய்தார்.

    அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சிறு கவர்களில் சாராயத்தை நிரப்பி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    போலீசாரை கண்டதும் அங்கு விற்பனை செய்தவர் மற்றும் வாங்க வந்தவர்கள் என அனைவரும் ஓட்டம் பிடித்தனர். அவர்களை விரட்டி சென்று சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த சிவாஜி (55) என்பவரை கைது செய்தனர்.அவரிடமிருந்து 105 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    செங்கல்பட்டு, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களுக்கு புறநகர் ரெயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. குறிப்பாக கடற்கரை-செங்கல்பட்டு இடையே ரெயில்களின் எண்ணிக்கை மிக அதிகளவு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சென்னை:

    சென்னையில் புறநகர் பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது.

    சென்னை-செங்கல்பட்டு, சென்னை-அரக்கோணம், சென்னை-கும்மிடிப்பூண்டி ஆகிய 3 வழித்தடங்களில் இருந்து புறநகர் பகுதி மக்கள் ரெயில்கள் மூலம் சென்னை வந்து செல்கின்றனர்.

    சென்னை-செங்கல்பட்டு இடையே தினமும் 224 புறநகர் ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இதில் சுமார் 5.5 லட்சம் பயணிகள் தினமும் பயணிக்கிறார்கள்.

    அதுபோல சென்னை- அரக்கோணம் இடையே தினமும் 151 புறநகர் ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் சுமார் 4.5 லட்சம் பேர் வந்து செல்கிறார்கள்.

    சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே தினமும் 74 புறநகர் ரெயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் சுமார் 1.2 லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். மொத்தத்தில் தினமும் செங்கல்பட்டு, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய புறநகர் பகுதிகளில் இருந்து சென்னைக்கு சுமார் 11 லட்சம் பேர் வந்து செல்கிறார்கள்.

    நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் புறநகர் ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. புறநகருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்றும் பயணிகள் கூறி வருகிறார்கள்.

    இதையடுத்து கூடுதல் புறநகர் ரெயில் சேவைகளை அறிமுகம் செய்ய தென்னக ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான ரெயில்வே கால அட்டவணை வருகிற 15-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.

    புதிய கால அட்டவணைப்படி செங்கல்பட்டு, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களுக்கு புறநகர் ரெயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. குறிப்பாக கடற்கரை-செங்கல்பட்டு இடையே ரெயில்களின் எண்ணிக்கை மிக அதிகளவு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது சென்னை சென்ட்ரலில் ஆவடி, திருவள்ளூர் வரை பல்வேறு சேவைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த புறநகர் ரெயில்சேவையை அரக்கோணம் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் பஸ் ஸ்டிரைக் நடந்தபோது புறநகர் ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டது. அப்போது தென்னக ரெயில்வேக்கு கணிசமான அளவுக்கு வருவாய் கிடைத்தது. எனவே புறநகர் ரெயில் சேவை எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.

    வருகிற 15-ந்தேதி புதிய கால அட்டவணை வெளியிடப்படும் போது எந்த அளவுக்கு ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற முழு விவரம் தெரிய வரும்.
    அரக்கோணம் அருகே வாலிபர் அடித்துகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த குருவராஜபேட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் ரவி (வயது 40). இவரது மகன் சரவணன் (12). இச்சிறுவன், அதே பகுதியில் உள்ள இருளர் காலனியில் வசிக்கும் மேளம் அடிக்கும் தொழிலாளியான குட்டி (45) என்பவருடைய வீட்டின் அருகே நேற்று விளையாடி கொண்டிருந்தான்.

    அப்போது, மேளம் அடிக்க கூடிய குச்சியை சிறுவன் எடுத்து விளையாடியபோது உடைந்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த குட்டி, சிறுவனை சரமாரியாக அடித்து உதைத்தார். சிறுவனின் தந்தை ரவி, தாய் வன்னியம்மாள் (40) மற்றும் மருமகள் சோனியா (23), உறவினரான பாலன் என்கிற பால்ராஜ் (30) ஆகியோர் குட்டியிடம் தட்டிக்கேட்டனர்.

    இவர்களையும், குட்டியின் தரப்பினர் உருட்டுக்கட்டை, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர். இதில் சிறுவனின் பெற்றோர், உறவினர் பால்ராஜ் உள்பட 4 பேரும்பலத்த காயமடைந்தனர். அப்பகுதி மக்கள், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி பால்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவனின் பெற்றோர் உள்பட 3 பேர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    இதுதொடர்பாக, அரக்கோணம் தாலுகா போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து மேளம் அடிக்கும் தொழிலாளி குட்டி மற்றும் அவருடைய உறவினர்கள் கோவிந்தராஜ் (25), அய்யப்பன் (23) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    கொலை செய்யப்பட்ட பால்ராஜ், கட்டிட வேலை செய்து வந்தார். அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 1½ வயதில் பெண் குழந்தை உள்ளனர். சிறு வி‌ஷயத்திற்காக ஒருவரின் உயிரை பறித்த சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரக்கோணம் அருகே போதையில் தகராறு செய்த கணவனை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த மோசூரை சேர்ந்தவர் பிரபு (வயது 30). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி லட்சுமி (27). தம்பதிக்கு ஜோதி (8) என்ற மகள், சூர்யா (7) என்ற மகன் உள்ளனர்.

    பிரபுவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அடிக்கடி குடித்துவிட்டு வந்து லட்சுமியிடம் தகராறு செய்து வந்தார். நேற்று இரவு போதையில் வீட்டுக்கு வந்த அவர் தகராறு செய்து அவரது மனைவியை அடித்து உதைத்தார். அக்கம் பக்கத்தினர் வந்து அவரை சமாதானம் செய்து வைத்தனர்.

    நள்ளிரவு வரை தொடர்ந்து தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமி துப்பட்டாவால் பிரபுவின் கழுத்தை இறுக்கினார். மூச்சு திணறல் ஏற்பட்டு பிரபு துடிதுடித்து இறந்தார்.

    பின்னர் வீட்டுக்குள் இருந்தபடி லட்சுமி கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்றனர். அங்கு பிரபு பிணமாக கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பிரபுவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து லட்சுமியை கைது செய்தனர். கணவர் குடிபோதையில் அடித்து உதைத்ததால் ஆத்திரத்தில் துப்பட்டாவை எடுத்து கழுத்தை இறுக்கிவிட்டதாக லட்சுமி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    இதனால் அவர்களது மகன், மகள் தவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அரக்கோணத்திலிருந்து மதுரை, ஊட்டி, கோவை, குமரி போன்ற 5 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். #TnRain #NDRF

    அரக்கோணம்:

    தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் நாளை மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலை மையம் ரெட் அலார்ட் விடுத்துள்ளது.

    இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 200-க்கும் மேற்பட்டவர்களை மதுரை, ஊட்டி, கோவை, குமரி போன்ற 5 மாவட்டங்களுக்கு துனை கமான்டர் ராஜன்பாலு அனுப்பி வைத்தார்.

    இதுகுறித்து உதவி கமான்டர் கூறுகையில்:-

    இந்த குழுவினர் தங்களுடன் மரம் அகற்றும் கருவிகள் பைபர் படகுகள் நீச்சல் வீரர்களுக்கான உடைகள் என பல்வேறு கருவிகளுடன் எதற்கும் தயாராக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இது தவிர கேரளாவிற்கும் 5 குழுக்கள் சென்றுள்ளனர். ஏற்கனவே திருச்சூரில் 3 குழுக்கள் உள்ளனர் எதற்கும் தயார் நிலையில் உள்ளோம் என்றார்.

    இதேபோல் அரக்கோணம் தாலுகாவில் பேரிடர் தாக்கும் பகுதிகள் என 8 கிராமங்களை ஆய்வு செய்து நேற்று மாலை தாசில்தார் பாபு கிராமத்துக்கு 10 பேர் வீதம் தன்னார்வ தொண்டர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மீட்பு பணிகளுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டது.

    பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தயங்காமல் ஒன்றினைந்து செயல்பட்டால் பெரும் சேதம் தவிர்க்க உதவியாக இருக்கும். ஆகவே யார் வேண்டுமானாலும் எதிர்பாராமல் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. #TnRain #NDRF

    அரக்கோணம் அருகே ஆட்டோ மீது எதிரே வந்த பைக் மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த நாகவேடு பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 38). அதே பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன் (21). இருவரும் சென்னை தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர்.

    தினமும் அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு ரெயிலில் சென்று வந்தனர். நேற்று வழக்கம் போல் வேலையை முடித்து விட்டு அரக்கோணம் ரெயில் நிலையம் வந்த இருவரும் அங்கிருந்து நாகவேடுவிற்கு ஆட்டோவில் சென்றனர்.

    நாகவேடு அருகே ஆட்டோ சென்ற போது எதிரே வந்த பைக் மீது மோதியது.

    இதில் பைக் ஓட்டி வந்த சின்னராஜி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். ஆட்டோவில் பயணம் செய்த குமரேசன் மற்றும் சுந்தரேசன் படுகாயமடைந்தனர். 2 பேரும் அரக்கோணம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி குமரேசன் பரிதாபமாக இறந்தார். சுந்தரேசன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து குறித்து அரக்கோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே வாலிபரை அடித்துக் கொன்ற தாய் மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
    அரக்கோணம்:

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள உளியம்பாக்கம் காலனியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் தன்ராஜ் என்கிற ராஜ்குமார் (வயது 20). கூலித் தொழிலாளி. நேற்றிரவு இவர் போதையில் இருந்தார். மேலும் குடிப்பதற்காக உளியம்பாக்கம் அருகேயுள்ள கீழாந்தூர் காலனி பகுதிக்கு சென்று மதுபானம் வாங்கி உள்ளார்.

    மது குடிப்பதற்காக அங்கு வசிக்கும் லலிதா என்கிற ஜெயலலிதா (60) என்ற மூதாட்டி வீட்டிற்கு சென்று டம்ளர் மற்றும் தண்ணீர் கேட்டுள்ளார். அவர் டம்ளர், குடிநீர் தர மறுத்ததால், ராஜ் குமார் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஜெயலலிதா மற்றும் அவரது மகன் சுதாகர் என்கிற சேட்டு ஆகிய 2 பேரும் உருட்டுக்கட்டையால் ராஜ்குமாரை தாக்கி அடித்து உதைத்தனர். இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமார் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் ராஜ்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து, அரக்கோணம் தாலுகா போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து ஜெயலலிதா மற்றும் அவரது மகனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதட்டமான சூழல் காணப்படுகிறது. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #Tamilnews
    அரக்கோணத்தில் ரெயிலில் பயணிகளிடம் பணம் பறித்த திருநங்கைககள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் இருந்து சென்னை, காட்பாடி, ரேணிகுண்டா ஆகிய மார்க்கங்களில் தினமும் ஏராளமான மின்சார ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்று வருகிறது.

    ரெயில்களில் பயணிகளிடம் திருநங்கைகள் பணம் கேட்டு தொல்லை கொடுத்து பணம் பறித்து வருகின்றனர். இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு புகார்கள் வந்தது.

    அதன்பேரில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார்ரஜாக் உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் அசீஸ்குமார், ஏட்டு மகேந்திரன் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் அரக்கோணம் அருகே ரெயில்களில் சோதனை செய்தனர்.

    அப்போது பயணிகளிடம் பணம் கேட்டு இடையூறு செய்த காட்பாடி, வாலாஜா, சென்னை பகுதியை சேர்ந்த 8 திருநங்கைகளை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பின்னர் திருநங்கைகளுக்கு அறிவுரைகள் கூறி ஜாமீனில் விடுவித்தனர்.

    வேலூர் ஆற்காடு ரோட்டில் ஆஸ்பத்திரிக்கு வரும் வெளிமாநில பயணிகளிடமும் திருநங்கைகள் சிலர் பணம் பறித்து வருகின்றனர். தினமும் இதுதொடர்ந்து நடக்கிறது. திருநங்கைகள் என்பதால் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் புகார் கொடுப்பதில்லை.

    போலீசார் திருநங்கைகள் பணம் பறிப்பதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


    ×