search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alwarthirunagari"

    • ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • கிராமப் பகுதியில் இருந்து வரும் மாணவிகளுக்கு பஸ் கிடைக்கவில்லை பள்ளிக்கு மாணவர்கள் வராமல் இருந்து விடக்கூடாது என நல்ல எண்ணத்தில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமசாமி வரவேற்றார். இந்து மேல்நிலைப்பள்ளி தலைவர் சந்தான கோபாலன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிச் செயலர் ஆதிநாதன் சிறப்புரை ஆற்றினார்.

    சிறப்பு விருந்தினராக ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் 82 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக அரசினால் வழங்கப்படும் இலவச சைக்கிள்களை கிராம பகுதியில் இருந்து வந்து செல்லும் மாணவ- மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறேன். நீங்கள் படிப்பில் கவனம் செலுத்தி பள்ளியில் முதல் இடம் பெற்று முதல் பட்டதாரியாகவும் இருக்க வேண்டும். கிராமப் பகுதியில் இருந்து வரும் மாணவிகளுக்கு பஸ் கிடைக்கவில்லை பள்ளிக்கு மாணவர்கள் வராமல் இருந்து விடக்கூடாது என நல்ல எண்ணத்தில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதை சிறந்த முறையில் பயன்படுத்தி பள்ளிக்கு தவறாமல் வர வேண்டும். சாதாரண குடும்பத்தில் இருக்கிறோம் என நினைக்காமல் நன்றாக படித்து முன்னேற வேண்டும். உங்கள் குடும்பம் முன்னேற படிப்பில் கவனம் செலுத்தி நன்றாக படித்து நல்ல பதவிக்கு வர வேண்டுமென ஆசைப்படுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் சங்கர், ஆழ்வார் திருநகரி வட்டார தலைவர் கோதண்டராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தாசன், ஆழ்வார் திருநகரி பேரூராட்சி தலைவி சாரதா பொன்னி இசக்கி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் காங்கிரஸ் எடிசன், சுரேஷ், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆதிநாதன், தி.மு.க. நகர செயலாளர் கோபிநாத், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி பாலசந்திரன்,

    இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயசீலன், ஊடகப்பிரிவு முத்து மணி, ஸ்ரீவைகுண்டம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெபஸ் பிளஸ்வின், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் இசை சங்கர், ஆழ்வை வட்டார பொருளாளர் விஜய் கரன், ஊடகப்பிரிவு மரியராஜ், நாசரேத் நகர காங்கிரஸ் நிர்வாகி கெர்சோம் கிறிஸ்டியான், ஆல்வின், வட்டார செயலாளர் ஆறுமுகநயினார், வட்டார செயலாளர் சேகர், வட்டார இளைஞர் அணி செயலாளர் சண்முகம், உள்பட பலர் கலந்து கொண்டனர். முதுகலை ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.

    • ஆழ்வார்திருநகரி யூனியன் கூட்டம் ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது. யூனியன் சேர்மன் ஜனகர் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் 37 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி யூனியன் கூட்டம் ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது. யூனியன் சேர்மன் ஜனகர் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பாலசுப்பிர மணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் ராஜாத்தி, அதிமுக உறுப்பினர் தானி. ஜெ. ராஜ்குமார், மல்லிகா, மாரிமுத்து, தாமஸ், நசரேன், பூல், சஜீதா, காந்திமதி உட்பட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 37 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிறிஸ்டோபர் தாசன், ராஜா, ஶ்ரீதேவி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலதி மாலாதேவி, பாலசுப்பிரமணியன், சித்ரா ஒன்றிய பொறியாளர்கள் வெள்ளப்பாண்டியன், சிவசங்கரன் சமுகநலம் வட்டார மேலாளர் செந்தில் வேல், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் சிதம்பர ராஜ், ஜெயச்சந்திர ராணி, முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட கேம்ப்லாபாத் ஊராட்சியில் நேற்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
    • மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட அரசு துறைகள் மூலம் ரூ. 54,81,473 மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட கேம்ப்லாபாத் ஊராட்சியில் நேற்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் பல்வேறு துறையினர் சிறப்பு ஸ்டால்கள் மூலம் தங்களது துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர்.

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட அரசு துறைகள் மூலம் ரூ. 54,81,473 மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கி பேசியதாவது:-

    மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் சோதனை செய்துள்ளார்கள். நடமாடும் மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    அது மட்டுமல்லாமல் மக்களை தேடி மருத்துவம் மூலம் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் அதிகமாக வாழை, பாரம்பரிய நெல் வைத்துள்ளார்கள். ஆடு, மாடு போன்றவைகளுக்கு தடுப்புப்பூசி கொடுத்து ள்ளார்கள்.

    கன்று பராமரிப்பு பெட்டகம் வாங்கி பயன்பெறலாம். மேலும் கோழிப்பண்ணை மற்றும் கோழி வளர்ப்பவர்கள் மானிய விலையில் குஞ்சு பொறிப்பான் எந்திரம் வாங்கி பயனடையலாம்.

    பொதுமக்கள் வாகனங் களில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் பயணம் செய்யும்போது படிக்கட்டு களில் தொங்கிக்கொண்டு செல்லக்கூடாது.

    வட்டார போக்குவரத்து அலுவலகம் வாயிலாக சாலை பொதுமொழிகள் என்ற கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இக்கையேடினை ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று வழங்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் முகைதீன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், கேம்லாபாத் பஞ்சாயத்து தலைவர் சபிதா சர்மிளா, துணை தலைவர் ஹாஜா உதுமான், திருச்செந்தூர் கோட்டாட்சியர் புகாரி, ஏரல் தாசில்தார் கண்ணன், வட்ட வழங்கல் அலுவலர் முரளிதரன், ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், கருப்பசாமி, கால்நடை இணை இயக்குநர் ராஜன், துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குநர் செல்வகுமார், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் நாஞ்சியார், டாக்டர் சந்திரா, தென்திருப்பேரை ஆரம்ப சுகாதார நிலையம் டாக்டர் பார்த்தீபன், மருத்துவ அலுவலர் முல்லை பாண்டியன், வட்டார சுகாதார ஆய்வாளர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் இளங்கோவன், ஆழ்வார் திருநகரி வட்டார வேளாண் உதவி இயக்குநர் அல்லிராணி, மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர் பாலசுந்தரம், ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலர் சரஸ்வதி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுருதி, வட்டார மேலாளர் சமூகநலம் வேல்கனி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயா, ராமு, மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



    • தொழிற்நுட்ப பயிற்சியினை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லிராணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
    • பூச்சியியல் துறை தொழில்நுட்ப வல்லுநர் முத்துக்குமார், பாதுகாப்பான முறையில் பூச்சி மற்றும் நோய்களுக்கான மருந்துகள் தெளிப்தற்கான தொழிற்நுட்பங்களை எடுத்துரைத்தார்.

    சாத்தான்குளம்:

    ஆழ்வார்திருநகரி வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கும், பயிர் மருந்து தெளிப்பவர்களுக்கும் பாதுகாப்பான முறையில் பூச்சி மற்றும் நோய்களுக்கான மருந்துகளை தெளிப்பதற்கான தொழிற்நுட்ப மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி உடையார்குளம் கிராமத்தில் வைத்து திங்கட்கிழமை நடைபெற்றது.

    பயிற்சியினை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லிராணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.உடையார்குளம் கிராமத் தலைவர் தேவராஜ் முன்னிலை வகித்தார்.

    வாகைகுளம் வேளாண் அறிவியல் மையம் பூச்சியியல் துறை தொழில்நுட்ப வல்லுநர் முத்துக்குமார், பாதுகாப்பான முறையில் பூச்சி மற்றும் நோய்களுக்கான மருந்துகள் தெளிப்தற்கான தொழிற்நுட்பங்களை எடுத்துரைத்தார். உழவியல்துறை வல்லுநர் முருகன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார். இப்பயிற்சியில் தென்னங்கன்றுகள் நடவு முறை குறித்து செயல்விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது. இதில் 40 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜேசுதாசன், உதவி தொழில் நுட்ப மேலாளர் நளினி, சூசைமாணிக்கம் ஆகியோர் செய்திருந்தனர்.

    • கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜனகர் தலைமை தாங்கினார்.
    • ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜனகர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் ராஜாத்தி, பரமேஸ்வரி, ரகுராமன், மாரிமுத்து, தாமஸ், பூல், ஜெயா, பியூலா ரத்தினம், நசரேன் மற்றும் அதிமுக உறுப்பினர் தானி ராஜ்குமார் உட்பட 11 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 45 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜவஹர், ராஜா, கிறிஸ்டோபர் தாசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், மாலதி, மாலாதேவி, ஒன்றிய பொறியாளர் வெள்ளைப் பாண்டியன், சிவசங்கரன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சிதம்பரராஜ், ஜெயச்சந்திரா ராணி, முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஆழ்வார்திருநகரியில் இருந்து நாசரேத் செல்லும் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு.
    • இத்திட்டத்தின் தொடக்க விழா ஆழ்வார்திருநகரியில் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரியில் இருந்து நாசரேத் செல்லும் வழியில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள சாலையை சீரமைத்து புதுப்பிக்கும் பணிக்காக ரூ.186 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தொடக்க விழா ஆழ்வார்திருநகரியில் நடைபெற்றது.

    இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தார்சாலை புதுப்பிக்கும் பணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் கோபிநாத், ஆழ்வார்திருநகரி காங்கிரஸ் வட்டார தலைவர் கோதண்டராமன், ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவி சாரதா பொன் இசக்கி, துணைத்தலைவர் சுந்தர்ராஜ், முன்னாள் தி.மு.க. நகர செயலாளர் முத்துராமலிங்கம், தி.மு.க. பிரதிநிதி ஸ்ரீதர், ஆதி உடையார், மாரியப்பன், ரஞ்சித் மோகன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட செயற்பொறியாளர் விஜய் சுரேஷ், உதவி பொறியாளர் சிபின், காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சங்கர், மாவட்ட பொருளாளர்கள் எடிசன், மாவட்ட இளைஞரணி ஜெயசீலன், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் கருணாகரன், ஊடகப்பிரிவு மரியராஜ், நகர பொறுப்பாளர் அபுதாகிர், வட்டாரச் செயலாளர் சிவசக்தி வேல், வட்டாரச் செயலாளர் சேகர், வட்டார பொருளாளர் விஜயன், நகர துணைத் தலைவர் ஆஸ்கின், இளைஞர் காங்கிரஸ் செயலாளர் குமார், வட்டாரச் செயலாளர் மோகன்ராஜ், இளைஞர் காங்கிரஸ் வட்டார செயலாளர் ரெங்கராஜன், பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார், கேம்பலாபாத் கிராம கமிட்டி தலைவர் அஜிமுல்லா, ஒப்பந்ததாரர்கள் மாடசாமி, ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தரிசு நில தொகுப்பினை பார்வையிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
    • விவசாயிகளுக்கு மானிய விலையில் விசைத் தெளிப்பான் வழங்கப்பட்டது.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி வேளாண் வட்டாரம் ஸ்ரீ வெங்கடேஸ்வராபுரம் கிராமத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நில தொகுப்புகளை விளை நிலங்களாக மாற்றுதல் மற்றும் தென்னங்கன்றுகள், கைத்தெளிப்பான், விசைத்தெளிப்பான் மற்றும் வரப்பு பயிருக்காக உளுந்து விதைகள் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டம் தொடர்பாக ஸ்ரீவெங்கடேஸ்வரா புரம் கிராமத்தில் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் மற்றும் துணை வேளாண்மை இயக்குனர் (மாநில திட்டம்) பழனி வேலாயுதம் ஆகியோர் திட்டம் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வின் போது தரிசு நில தொகுப்பினை பார்வையிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்கினார். மேலும் விவசாயிகளுக்கு மானிய விலையில் விசைத் தெளிப்பான் வழங்கப்பட்டது.

    இத்திட்டத்தில் வழங்கிய தென்னங் கன்றுகள் நடவு பகுதியினை நிகழ்ச்சியின்போது ஆய்வு செய்தனர். மேலும் பராமரிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்தும் ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது ஆழ்வார்திருநகரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் அல்லிராணி, வேளாண் அலுவலர் திருச்செல்வன், உதவி வேளாண் அலுவலர் நீலகண்ட பிள்ளை மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி திருவிழா வைகாசி நடைபெற்றது.
    • நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தினமும் சுவாமி நம்மாழ்வார் மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வருகிறது. 5-ம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி பொலிந்து நின்ற பிரான் கருட வாகனத்திலும், சுவாமி நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் மதுரகவி ஆழ்வார் தங்க பல்லக்கிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தனர்.

    9-ம் திருவிழாவான இன்று காலை 8 மணிக்கு நம்மாழ்வார் திருத்தேரில் எழுத்தருளினார். 8.30 மணியளவில் பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என்ற கர கோஷத்துடன் நான்கு ரத வீதிகளில் தேரைவடம் பிடித்து இழுத்து வந்தனர். காலை 11 மணி அளவில் தேர் நிலை வந்தடைந்தது. நாளை (12-ந்தேதி) தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், அலுவலக இளநிலை பணியாளர் பெருமாள் ஆகியோர் செய்து இருந்தனர்.

    நிகழ்ச்சியில் எம்பெருமானார் பேரருளாளர் ராமானுஜ ஜீயர் உள்பட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆழ்வார் திருநகரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

    • ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நம்மாழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி பூப்பந்தல் மண்டபத்தில் நடைபெற்றது.
    • வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுகிறது. நம்மாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் காலை 8 மணிக்கு தேரில் எழுந்தருளுகிறார்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நம்மாழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி நேற்று பூப்பந்தல் மண்டபத்தில் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு நம்மாழ்வார் முன் மண்டபத்தில் எழுந்தருளினார்.

    நம்மாழ்வார் இங்குள்ள புளிய மரத்தின் பொந்தில் சிறு குழந்தையாக தவழ்ந்து வந்து அமர்ந்து 16 ஆண்டுகள் கழித்து வாய்திறந்து திருவாய்மொழி பாடினார்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்தலத்தில் சுவாமி நம்மாழ்வார் திருஅவதாரம் செய்த வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் 15 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை பெருமாள் கோவிலில் உள்ள கருட வாகனங்கள் ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலுக்கு வந்து சேர்ந்தன. ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர் கடிவான், திருப்புளியங்குடி காய்சினவேந்தன், இரட்டை திருப்பதிஅரவிந்தர லோசனர், தேவர்பிரான், பெருங்குளம் மாயக்கூத்தர், தென்திருப்பேரை நிகரில் முகில் வண்ணன்,

    திருக்கோளூர் வைத்த மாநிதி, ஆழ்வார்திருநகரி பொலிந்து நின்ற பிரான், ஸ்ரீமதுரகவி ஆழ்வார் ஆகியோர் பூப்பந்தல் மண்டபத்திற்கு வந்த பின்னர் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதன் பின்னர் இரவு 10 மணிக்கு 9 பெருமாள்களும் புஷ்ப அலங்காரத்துடன் கருடவாகனத்திலும் நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் தங்கபல்லக்கிலும் ஒன்றன்பின் ஒன்றாக வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தனர்.

    வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுகிறது. நம்மாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் காலை 8 மணிக்கு தேரில் எழுந்தருளுகிறார்.

    அதைத் தொடர்ந்து 8.30 மணி அளவில் தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று மாலை தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலமும், 12-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 10-ம் நாள் திருவிழாவான தீர்த்தவாரி தாமிரபரணி நதியில் காலை நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அஜீத், தக்கார் கோவல மணிகண்டன், அலுவலக இளநிலை உதவியாளர் பெருமாள் செய்திருந்தனர்.

    ×