என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Start"

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒரு மாதத்திற்கு பின்னர் 5 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி தொடங்கியது.
    தூத்துக்குடி:

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 5 மின்உற்பத்தி யூனிட்டுகளை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. அதேபோல் காற்றாலை மின்உற்பத்தி அதிகரிப்பு காரணமாகவும் கடந்த ஒரு மாதமாக பிற்பகல் தொடங்கி இரவு வரை மட்டுமே அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் ஒரு மாதத்திற்கு பின்னர் இன்று அதிகாலை முதல் வழக்கம் போல தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள   5 யூனிட்டுகளும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் முழு மின்உற்பத்தியான 1050 மெகாவாட் தினமும் உற்பத்தி செய்யப்படுகிறது.
    திருச்செந்தூரில் இருந்து நாசரேத்துக்கு புறையூர் வழியாக மீண்டும் அரசு பஸ் சேவை தொடங்கப்பட்டது. இதனை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
    குரும்பூர்:

    திருச்செந்தூரில் இருந்து நாசரேத்துக்கு அங்கமங்கலம், புறையூர் வழியாக இயக்கப்பட்ட டவுன் பஸ் கொரோனாவால் நிறுத்தப்பட்டது. இந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று எழுந்த கோரிக்கையையடுத்து நேற்று இந்த வழித்தடத்தில் மீண்டும் அரசு டவுன் பஸ் சேவை தொடங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு ஆழ்வை கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளர் பாதாளமுத்து தலைமை தாங்கினார். ஆழ்வை யூனியன் சேர்மன் ஜனகர் வரவேற்றார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அரசு பஸ்சை கொடிசையத்து பஸ் சேவையை தொடங்கி வைத்தார்.

    இதில் ஏரல் தாசில்தார் கண்ணன், மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி ராமஜெயம், கே.டி.சி. பொதுமேலாளர் மேலாளர் சரவணன், உதவி மேலாளர் (இயக்கம்) பூல்ராஜ், நாலுமாவடி கிளை செயலாளர் செந்தில், புறையூர் வெல்பேர் டிரஸ்ட் நாசர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    குமாரபாளையத்தில் தாலுகா அலுவலக கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தப்பட்டது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தாலுகா அலுவலகம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்ட தொகை வாடகையாக கொடுக்கப்பட்டு மக்கள் வரி பணம் வீணாகி வருகிறது. 

    மழைக்காலங்களில் மழைநீர் ஒழுகி கோப்புகள் வீணாகி வருகிறது என்று புகார் கூறப்பட்டது. இதைதொடர்ந்து புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது.   இந்த பணி முழுமையாக முடிவடையவில்லை. இதனால் தாலுகா அலுவலக பணிகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தப்பட்டது. 

    இதுபற்றி  தாசில்தார் தமிழரசி கூறுகையில், குமாரபாளையம் தாலுகா அலுவலகம் கட்டுமான பணி பொதுப்பணித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.  நிதி பற்றாக்குறையால் கட்டுமான பணி நிறைவுபெறாமல் உள்ளதாக கூறப்படுகிறது. நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் பணிகள் தொடரும். பணிகள் முழுமையாக முடிந்த பின் தாலுகா அலுவலகத்தை எங்களிடம் ஒப்படைப்பார்கள் என்றார்.

    இந்நிலையில் புதிய தாலுகா அலுவலகம் விரைவில் செயல்பட உள்ளது பற்றி  தகவல் தெரிந்ததும், தாலுகா அலுவலக பகுதியில் ஜெராக்ஸ், டீ, பேக்கரி, கடைகள் மற்றும் இ-சேவை மையங்கள் தொடங்க பலர் மும்முரமாக உள்ளனர்.
    குமாரபாளையம் நீரேற்று நிலையத்தில் ரூ.23 லட்சம் மதிப்பில் மின் மோட்டார் பொருத்தும் பணி தொடக்கம்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் காவேரி நகர் நீரேற்று நிலையத்தில் 50 எச்.பி. மோட்டார் வைத்து தண்ணீர் எடுக்கபட்டு வந்தது. 

    இது போதுமானதாக இல்லை என்பதால் ரூ.23 லட்சம் மதிப்பில் 60 எச்.பி. மோட்டார் பொருத்தும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணிகளை சேர்மன் விஜய்கண்ணன், கமிஷனர் விஜயகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

    இதில்  பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் அழகேசன், வேல்முருகன், ஜேம்ஸ், விஜயா, சியாமளா, ரேவதி, கிருஷ்ணவேணி, புஷ்பா, செல்வி, நந்தினிதேவி, நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்  உள்பட பலர் பங்கேற்றனர்.
    • மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக சேலம் கிழக்கு கூட்டத்தில் தபால்காரரும், தாத்தா பாட்டியும் என்ற தலைப்பில் பிரசாரம் மட்டும் போட்டி நடைபெற உள்ளது.
    • குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை சேமிக்க முடியும்.

    சேலம்:

    சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக சேலம் கிழக்கு கூட்டத்தில் தபால்காரரும், தாத்தா பாட்டியும் என்ற தலைப்பில் பிரசாரம் மட்டும் போட்டி நடைபெற உள்ளது.

    அதன்படி அனைத்து தபால் பட்டுவாடா ஊழியர்களும், மூத்த குடி மக்களுக்கு உதவி செய்யும் விதமாக குறைந்த பட்சம் ஒரு மாதத்தில் ஒரு மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சிறப்பாக செயல்படும் கிழக்கு கோட்டத்தைச் சேர்ந்த தபால் பட்டுவாடா ஊழியர்களின் பணி திறனை பாராட்டும் வகையில் துணைக்கோட்டம் கோட்டம் மண்டல வாரியாக பரிசுகள் வழங்கப்படும்.

    இந்த சேமிப்பு கணக்கினை 60 வயது பூர்த்தி அடைந்த முதியவர்கள் மற்றும் 50 வயது பூர்த்தி அடைந்த பாதுகாப்பு பணியாளர்கள், மேலும் 55 வயது பூர்த்தி அடைந்த விருப்ப ஓய்வு பெற்றவர்கள் தொடங்கலாம். குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை சேமிக்க முடியும். இதற்கு ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒன்றிய மற்றும் மாநில அரசு தலா, 2.40 லட்சம் நிதி வழங்கி, 74 வீடுகள் கட்ட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.
    • ஆனால், குடியிருப்பு கட்டிட பணி துவங்கப்படாமல் இருந்து வந்தது.

    சங்ககிரி:

    சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 22 ஊராட்சி மன்றங்களில், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ், 2021–22 நிதியாண்டில், ஒன்றிய மற்றும் மாநில அரசு தலா, 2.40 லட்சம் நிதி வழங்கி, 74 வீடுகள் கட்ட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், குடியிருப்பு கட்டிட பணி துவங்கப்படாமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில், சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலரும், உட்கட்டமைப்பு மற்றும் ஊராட்சி ஒன்றியத்தின் மண்டல அலுவலருமான நக்கீரன் தலைமையில் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜகணேஷ், பி.டி.ஓ .முத்து, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா ,பணி மேற்பார்வையாளர் குமார் ஆகியோர் நேரில் சென்றனர். அங்கு பயனாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி முதல் கட்டமாக கத்தேரி, புள்ளாக்கவுண்டம்பட்டி ஊராட்சியில், 10 வீடுகள் கட்ட அளவீடுகள் செய்து பணிகளை தொடங்கினர்.

    • அகில இந்திய அளவிலான ஆண், பெண் மின்னொளி கபடி போட்டி இன்று தொடங்கி 14-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.
    • போட்டியை அமர்ந்து பார்க்க வசதியாக கேலரி அமைக்கப்பட்டுள்ளது.

    திசையன்விளை:

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு திசையன்விளையை அடுத்து உள்ள அப்புவிளை வி.எஸ்.ஆர்.விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய அளவிலான ஆண், பெண் மின்னொளி கபடி போட்டி இன்று தொடங்கி 14-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.ஆர். செய்துள்ளார்.

    போட்டியில் மராட்டியம், உத்தரபிரதேசம், அரியானா, குஜராத், டெல்லி, மும்பை, ஆந்திரா, கேரளா, கர்நாடகா தமிழ்நாடு உள்பட 80 அணிகள் கலந்துகொண்டு விளையாடுகிறது.

    போட்டியை அமர்ந்து பார்க்க வசதியாக கேலரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் பார்வையிட்டார்.

    ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, அப்புவிளை பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். சுரேஷ், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர்.ரமேஷ், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ராம் கிஷோர், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், தகவல் தொழில்நுட்ப அணி முருகேஷ், புளியடி குமார், எழில் ஜோசப், ஸ்டாலின், முத்தையா மற்றும் பலர் உடனிருந்தனர்.

    இன்று இரவு நடைபெறும் முதல்நாள் போட்டியை சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி தொடங்கிவைக்கிறார்.

    • யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன். முத்தையா பாண்டியன் தொடங்கி வைத்தார்.
    • மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை டி.என்.ஆர்.ஆர். ஐ.எஸ்.திட்டம் 2021 - 22 மூலமாக ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

    சிவகிரி:

    சிவகிரி குமாரபுரம், தேவிபட்டணம் பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, தேவிபட்டணத்தில் இருந்து குமாரபுரம் வழியாக சிவகிரி செல்லும் தார்சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை டி.என்.ஆர்.ஆர். ஐ.எஸ்.திட்டம் 2021 - 22 மூலமாக ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினை தேவிபட்டணம் பேருந்து நிறுத்தம் தென்புறம் உள்ள பிள்ளையார் கோவில் அருகே யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன். முத்தையா பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தேவிபட்ட ணம் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மனோகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், தென்மலை முனியராஜ், கிளை செயலாளர் முருகன், பஞ்சாயத்து துணைத் தலைவர் மாடக் கண்ணு, அனைத்து வார்டு கவுன்சிலர்கள், ஜெய பிரகாஷ், துரைராஜ், காளி ராஜ், மணிகண்டன், விக்கி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தொடங்கும் இறையடிக்கால்வாய் நீண்ட நாட்களாக தூர் வாரப்படவில்லை.
    • கால்வாயில் செடி-கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடந்தது. ஆங்காங்கே மண் திட்டுகளும் ஏற்பட்டிருந்தன. இதனால் கால்வாயில் நீரோட்டம் தடைபட்டது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தொடங்கும் இறையடிக்கால்வாய் நீண்ட நாட்களாக தூர் வாரப்படவில்லை.

    இதனைதொடர்ந்து கால்வாயில் செடி-கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடந்தது. ஆங்காங்கே மண் திட்டுகளும் ஏற்பட்டிருந்தன. இதனால் கால்வாயில் நீரோட்டம் தடை பட்டது.

    மேலும் மழைக்காலங்களில் கால்வாயில் அதிகளவில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் போது, அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கரைகளை உடைத்து கிராமங்களுக்குள் புகும் அபாயகரமான சூழல் நிலவியது.

    எனவே புதர் மண்டி கிடக்கும் இறையடிக்கால்வாயை சீரமைக்கவும், கரைகளை பலப்படுத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவக்குமார் உத்தரவின் பேரில், உதவி செயற்பொறியாளர் மணிகண்டன், உதவி பொறியாளர் பாஸ்கர், பாசன உதவியாளர் ஆனந்தன் மற்றும் பொதுப்பணித்துறையினர் புதர் மண்டி கிடந்த இறையடிக்கால்வாயை நேரில் பார்வையிட்டு அதனை சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர்.

    அதன்படி கால்வாயில் ஆக்கிரமிப்பு உள்ளதா? என்று அளவீடு செய்யப்பட்டது.

    அதனைதொடர்ந்து நேற்று இறையடிக்கால்வாய் தூர் வாரும் பணி தொடங்கியது. பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாய் தூர் வாரப்பட்டு வருகிறது.

    • நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிளிப்பு திட்டம் மற்றும் அம்ரித்சரோவர் திட்டம் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் பேசினர்.
    • நிகழ்ச்சிக்கு வல்லம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜமீன்பாத்திமா தலைமை தாங்கினார்.

    தென்காசி:

    தென்காசி ஊராட்சி ஒன்றியம் வல்லம் ஊராட்சியில் உள்ள இசக்கி திருத்துக்குளம் பகுதியில் ரூ.9.56 லட்சம் செலவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பழைய நீர்நிலைகள் சீரமைப்பு செய்யும் அம்ரித்சரோவர் - 2022 - 23 திட்டப் பணிகள் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு வல்லம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜமீன்பாத்திமா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஹாஜி வல்லம் சேக்அப்துல்லா கலந்துகொண்டு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலர் (வ‌.ஊ) மாணிக்கவாசகம், தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி ஒன்றிய பொறியாளர், பணி மேற்பார்வையாளர் ஆகியோர் கலந்து கொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிளிப்பு திட்டம் மற்றும் அம்ரித்சரோவர் திட்டம் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் பேசினர்.

    இந்த நிகழ்ச்சியில் தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் மல்லிகா சரவணன், வல்லம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்சுந்தரி, செல்வி, இசக்கியம்மாள், செய்யது அலி பாத்திமா, செ.சாகுல் ஹமீது, முபாரக் அலி, சங்கீதா, திவான் மைதீன் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்ட ஒருங்கிணைப்பாளர் சேகுமைதீன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணித்தள பொறுப்பாளர் தெய்வத்தாய், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் வல்லம் ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    • இளநிலை பட்டப்படிப்புகளுக்கு ெபாது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு அடுத்த மாதம் 15-ந்தேதி தொடங்குகிறது.
    • இதில் 9 லட்சத்து 50 ஆயிரத்து 804 பேர் எழுதுகிறார்கள்.

    சேலம்:

    இந்திய அரசு கல்வித்துறை சார்பாக தேசிய தேர்வு முகமை இளநிலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான பொதுபல்கலைக்கழக நுைழவுத் தேர்வு அறிவிப்பு வெளியிட்டது.

    மாணவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு இந்த தேர்வுக்கு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஏராளமான மாணவ- மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்தநிலையில் மாணவ- மாணவிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களின் நலன் கருதி விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய மேலும் ஒரு வாய்ப்பு வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது-

    இளநிலை பட்டப்படிப்புகளுக்கு பொது பல்கலைக்கழக நுழைவு தேர்வு (சி.யு.இ.டி. யு.ஜி) -2022 நாடு முழுவதும் 554 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 13 இடங்களிலும் நடைபெற உள்ளது.

    43 மத்திய பல்கலைக்கழகங்கள், 13 மாநில பல்கலைக்கழகங்கள், 12 நிகர் நிலை பல்கலைக்கழகங்கள், 18 தனியார் பல்கலைக்கழகங்கள் என 86 பல்கலைக்கழங்களில் அட்மிஷனுக்கு 9 லட்சத்து 50 ஆயிரத்து 804 பேர் பதிவு செய்துள்ளனர்.

    வருகிற ஜூலை மாதம் 15-ந்தேதி நுழைவுத் தேர்வு தொடங்குகிறது. தொடர்ந்து 16-ந்தேதி, 19-ந்தேதி மற்றும் 20-ந்தேதியும் மற்றும் ஆகஸ்ட் மாதம் 4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை கம்ப்யூட்டர் வழியாக நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் மாணவ- மாணவிகள் தங்களது ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏதாவது தவறாக பதிவு செய்து இருந்தால் அதனை இன்று முதல் நாளை நள்ளிரவு 11.50 மணி வரை திருத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

    இந்த இறுதி கட்ட வாய்ப்பை மாணவ- மாணவிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தி உள்ளது.

    • ஆழ்வார்திருநகரியில் இருந்து நாசரேத் செல்லும் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு.
    • இத்திட்டத்தின் தொடக்க விழா ஆழ்வார்திருநகரியில் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரியில் இருந்து நாசரேத் செல்லும் வழியில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள சாலையை சீரமைத்து புதுப்பிக்கும் பணிக்காக ரூ.186 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தொடக்க விழா ஆழ்வார்திருநகரியில் நடைபெற்றது.

    இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தார்சாலை புதுப்பிக்கும் பணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் கோபிநாத், ஆழ்வார்திருநகரி காங்கிரஸ் வட்டார தலைவர் கோதண்டராமன், ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவி சாரதா பொன் இசக்கி, துணைத்தலைவர் சுந்தர்ராஜ், முன்னாள் தி.மு.க. நகர செயலாளர் முத்துராமலிங்கம், தி.மு.க. பிரதிநிதி ஸ்ரீதர், ஆதி உடையார், மாரியப்பன், ரஞ்சித் மோகன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட செயற்பொறியாளர் விஜய் சுரேஷ், உதவி பொறியாளர் சிபின், காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சங்கர், மாவட்ட பொருளாளர்கள் எடிசன், மாவட்ட இளைஞரணி ஜெயசீலன், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் கருணாகரன், ஊடகப்பிரிவு மரியராஜ், நகர பொறுப்பாளர் அபுதாகிர், வட்டாரச் செயலாளர் சிவசக்தி வேல், வட்டாரச் செயலாளர் சேகர், வட்டார பொருளாளர் விஜயன், நகர துணைத் தலைவர் ஆஸ்கின், இளைஞர் காங்கிரஸ் செயலாளர் குமார், வட்டாரச் செயலாளர் மோகன்ராஜ், இளைஞர் காங்கிரஸ் வட்டார செயலாளர் ரெங்கராஜன், பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார், கேம்பலாபாத் கிராம கமிட்டி தலைவர் அஜிமுல்லா, ஒப்பந்ததாரர்கள் மாடசாமி, ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×