search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "waterlines"

    • நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிளிப்பு திட்டம் மற்றும் அம்ரித்சரோவர் திட்டம் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் பேசினர்.
    • நிகழ்ச்சிக்கு வல்லம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜமீன்பாத்திமா தலைமை தாங்கினார்.

    தென்காசி:

    தென்காசி ஊராட்சி ஒன்றியம் வல்லம் ஊராட்சியில் உள்ள இசக்கி திருத்துக்குளம் பகுதியில் ரூ.9.56 லட்சம் செலவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பழைய நீர்நிலைகள் சீரமைப்பு செய்யும் அம்ரித்சரோவர் - 2022 - 23 திட்டப் பணிகள் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு வல்லம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜமீன்பாத்திமா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஹாஜி வல்லம் சேக்அப்துல்லா கலந்துகொண்டு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலர் (வ‌.ஊ) மாணிக்கவாசகம், தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி ஒன்றிய பொறியாளர், பணி மேற்பார்வையாளர் ஆகியோர் கலந்து கொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிளிப்பு திட்டம் மற்றும் அம்ரித்சரோவர் திட்டம் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் பேசினர்.

    இந்த நிகழ்ச்சியில் தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் மல்லிகா சரவணன், வல்லம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்சுந்தரி, செல்வி, இசக்கியம்மாள், செய்யது அலி பாத்திமா, செ.சாகுல் ஹமீது, முபாரக் அலி, சங்கீதா, திவான் மைதீன் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்ட ஒருங்கிணைப்பாளர் சேகுமைதீன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணித்தள பொறுப்பாளர் தெய்வத்தாய், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் வல்லம் ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    ×