search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Repair work"

    • ஸ்டேட் பேங்க் காலனி அருகே பாதாள சாக்கடை மூடி உடைந்து இருந்தது.
    • துணை மேயர் உடனடியாக உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட செம்மண்டலம் ஸ்டேட் பேங்க் காலனி அருகே பாதாள சாக்கடை மூடி உடைந்து இருந்தது. இதனால் பொது மக்கள் பெரும் அவதியடைந்தனர். மேலும் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துள்ளாகும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வனிடம் பொதுமக்கள் சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதனை தொடர்ந்து துணை மேயர் தாமரை ச்செல்வன் உடனடியாக உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதன்படி பாதாள சாக்கடை மூடி சரி செய்யும் பணி நடைபெற்றது. இதனை மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அங்கிருந்து இடமாற்றம் செய்வதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
    • பயோமெட்ரிக் முறையில் கணக்கெடுப்பு பணியை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கினர்.

    சென்னை:

    சென்னையில் பக்கிங்காம் கால்வாயை சீரமைக்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக பக்கிங்காம் கால்வாயில் நீர்வழிப்பாதையில் கரையோரம் வசிப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான முதல்கட்ட திட்ட அறிக்கையை நீர்வளத் துறையினர் தயாரித்து உள்ளனர்.

    இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக சிவானந்தா சாலை-டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை இடையே 2.9 கி.மீட்டர் தூரத்திற்கு பக்கிங்காம் கால்வாயை சீரமைக்க முடிவு செய்து ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

    இதேபோல் நீர்வளத் துறையின் 2023-24 ம் ஆண்டின் கொள்கை குறிப்பின்படி பக்கிங்காம் கால்வாய் மற்றும் அதனுடன் தொடர்புடைய கால்வாய், அடையாறு கூவம் ஆறுகளில் பாயும் வடிகால் வாய்களில் சீரமைப்பு மற்றும் விரிவான மறுசீரமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இதற்கு ரூ.1,281 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதில் நீர்வழிப்பாதையை தூர் வாரி சீரமைத்தல், படகு போக்குவரத்து மையம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற இருக்கின்றன.

    இதற்கிடையே பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிக்கும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அங்கிருந்து இடமாற்றம் செய்வதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் கால்வாய் கரையோரத்தை சீரமைக்கும் பணி தொடங்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

    மேலும் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிப்பவர்கள் காலி செய்யும் போது அவர்களுக்கு அதே பகுதியில் மாற்று இடம் கொடுத்து குடியமர்த்த வேண்டும் அல்லது ஏற்கனவே வசித்த இடத்தில் இருந்து 5 கி.மீட்டர் தூரத்திற்குள் குடிய மர்த்த வேண்டும் என்பது பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

    ஆனால் கால்வாய் கரையோரம் வசிப்பவர்களை அப்புறப்படுத்தும் போது அவர்களுக்கு மாற்று இடம் அருகில் ஒதுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

    இதன் காரணமாக பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிப்பவர்கள் அப்புறப்படுத்துவது தொடர்பாக என்ன மாதிரியான முடிவு எடுப்பது என்று அதிகாரிகள் தவித்து வருகிறார்கள்.

    பக்கிங்காம் கால்வாய் கரையோரம் உள்ள முக்கிய இடங்களான விக்டோரியா ஹாஸ்டல், சிவராஜபுரம், சுங்குவார் தெரு, மட்டன் குப்பம், ரோட்டரி நகர், நீலம்பாஷா தர்கா உள்ளிட்ட இடங்களில் பல ஆண்டுகளாக ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இந்த இடமாற்றம் அவர்களை கவலை அடையச் செய்து உள்ளது. இதுவரை எத்தனை குடும்பங்கள் இதில் பாதிக்கப்பட உள்ளது என்று உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

    கடந்த 2020-ம் ஆண்டு அரசின் அறிவிப்பின்படி 15 ஆயிரம் குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. கடந்த 2020-21- ம் ஆண்டிற்கான தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கொள்கை குறிப்பில் இந்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 564 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிப்பவர்கள் பற்றி பயோமெட்ரிக் முறையில் கணக்கெடுப்பு பணியை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கினர். ஆனால் இதற்கு அங்கு வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பயோமெட்ரிக் கணக்கெடுப்புக்கு தகவல்கள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

    இதைத் தொடர்ந்து இந்த கணக்கெடுப்பும் இப்போது கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது "மறு குடியமர்த்தலுக்கு ஒதுக்கப்பட்ட இடம் எங்கே? என்று அதிகாரிகள் இதுவரை தெரிவிக்கவில்லை. நாங்கள் தற்போது வசிக்கும் இடம் அருகே அல்லது 5 கி. மீட்டர் தூரதிற்குள் குடியமர்த்த வேண்டும். அப்படியானால்தான் எங்களது வாழ்வாதாரம் பாதிக்காது" என்றனர்.

    லாக் நகரை சேர்ந்த தொழிலாளி ஒருவர் கூறும் போது, "எனது குடும்பம் பல தலைமுறைகளாக இங்கு வசிக்கிறது. எனக்கும் எனது மனைவிக்கும் வாழ் வாதாரம் இந்த பகுதியை சுற்றியே உள்ளது. குழந்தைகள் அருகில் உள்ள பள்ளியில் படிக்கிறார்கள். நாங்கள் எப்படி நீண்ட தூரத்திற்கு செல்ல முடியும். மேலும் மறு குடியமர்த்துதல் தொடர்பாக அதிகாரிகள் இதுவரை எந்த தெளிவான முடிவும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை" என்றனர். சிவராஜபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் கூறும் போது, "பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுக்க அருகிலேயே அரசுக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. ஆனால் அது வேறு துறைக்கு சொந்தமானது என்று கூறுகிறார்கள். மறுகுடியமர்த்தும் இடங்கள் எர்ணாவூர் மற்றும் கார்கில் நகர் என்று தெரிகிறது. அங்கு நாங்கள் செல்ல நிர்பந்திக்கப்படலாம் என்பதால் பயப்படுகிறோம்" என்றார்.

    அப்பகுதியை சேர்ந்த மற்றொருவர் கூறும்போது, "மறுகுடியமர்த்தலுக்கு தேவையான இடத்தை முடிவு செய்ய குடும்பங்களின் எண்ணிக்கை மட்டும் போதுமானது. ஆனால் பயோமெட்ரிக் பதிவு மற்றும் படிவங்களில் கையெழுத்திட ஏன் வற்புறுத்த வேண்டும் மறுகுடியமர்த்தலுக்கான இடங்கள் குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் தெரிவிக்காத நிலையில் இது சந்தேகத்தை எழுப்பி உள்ளது" என்றார்.

    இதற்கிடையே பக்கிங்காம் கால்வாய் கரை யோரத்தில் வசிப்பவர்கள் காலி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பாக சென்னை மத்திய மாவட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் செல்வம் கூறும்போது, "பரம்பரை, பரம்பரையாக பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிப்பவர்கள் இடமாற்றம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? இது அவர்களுக்கான இடம் கிடையாதா?"

    கால்வாய் அருகில் வசிக்கும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களிடம் பயோமெட்ரிக் தகவல்களை அதிகாரிகள் சேகரிக்க தொடங்கி உள்ளனர். பொது மக்களும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் லாக் நகர் பகுதியில் பயோமெட்ரிக் தகவல்கள் சேகரிக்கும் பணியை அதிகாரிகள் கைவிட்டனர். காலம், காலமாக வாழும் மக்களின் வாழ்விட உரிமையை பறிக்கக் கூடாது. அவர்களை மாற்று இடத்தில் நீண்ட தூரத்தில் குடியமர்த்தும் போது வாழ்வாதாரம் பாதிக்கும்" என்றார்.

    • விருதுநகரில் கண்மாய்கள் மராமத்து பணிக்கு ஜே.சி.பி. எந்திரங்களுக்கான உடமை ஆவணங்களை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கண்மாய்கள் மராமத்து, வரத்து கால்வாய்கள் தோண்டுதல், தனியார் நிலங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றுதல், பண்ணை குட்டைகள் அமைத்தல் போன்ற பணி களை செய்வதற்கு ரூ72 லட்சம் மதிப்பில் இண்டஸ் இன்ட் வங்கி-பிரதான் மாவட்ட திட்டத்தின் கீழ் 2 ஜே.சி.பி எந்திரங்களுக்கான உடமை ஆவணங்களை கலெக்டர் ஜெயசீலன் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கி விவசாயிகளின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டம் முன்னேற விழைகிற மாவட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. அதனடிப்படையில் இண்டஸ் இன்ட் வங்கி-பிரதான் மாவட்ட திட்டம் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 2022 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக கண்மாய்கள் மராமத்து, வரத்துக்கால்வாய்கள் தோண்டுதல், தனியார் நிலங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றுதல், பண்ணைக் குட்டைகள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இனிவரும் காலங்களில் மேற்குறிப்பிட்ட பணிகளை செய்வதற்கு ரூ.72லட்சம் மதிப்பில் இண்டஸ் இன்ட் வங்கி- பிரதான் மாவட்ட திட்டத்தின் கீழ் 2 ஜே.சி.பி. எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள், விவசாயிகள் சங்கங்கள் பிரதான் நிறுவனத்திற்கு, 115/5A-மாருதி நகர், கச்சேரி ரோடு, விருதுநகர் - 626,001 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 94451-23288 வாட்ஸ்-அப் எண்ணுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பிரதான் நிறுவன அணி தலைவர் சீனிவாசன், பொறியியல் ஒருங்கி ணைப்பாளர் கனகவள்ளி, வேளாண் ஒருங்கிணைப்பாளர் ஆதிநாராயணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    • வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைக்கும் பணி பூமிபூஜையுடன் இன்று தொடங்கியது
    • தற்போது அந்த சிற்ப கல் தூண்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ராஜகோபுர பகுதியில் வீர வசந்தராயர் மண்டபம் அமைந்து உள்ளது. இங்கு கடந்த 2018-ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீர வசந்தராயர் மண்டபம் முற்றிலும் கருகி சேதம் அடைந்தது.

    இதனைத் தொடர்ந்து தமிழக சிற்ப கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியுடன் மண்டபத்தை பாரம்பரிய முறைப்படி புனரமைப்பது என்று தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதற்காக அரசு 18.10 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து இருந்தது.

    இந்த நிலையில் வீர வசந்தராயர் மண்டபத்தை சீரமைப்பதற்காக நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கல்குவாரியில் இருந்து கற்கள் வெட்டி எடுக்கப் பட்டு, மதுரைக்கு கொண்டு வரப்பட்டது.

    அந்த பிரம்மாண்ட கற்கள், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான செங்குளம் கிராமத்தில் பத்திரமாக பாதுகாக்கப் பட்டன. அங்கு குவாரி கற்களை, சிற்பத் தூணாக மாற்றும் பணி மும்முரமாக நடந்து வந்தது. தற்போது அந்த சிற்ப கல் தூண்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. இதன் ஒரு பகுதியாக முதல் சிற்பத் தூண் நிர்மாணிக்கும் பணி, இன்று காலை நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜை நடத்தி மறுசீரமைப்பு பணிகளை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அங்கு மறுசீரமைப்பு பணிகள் மும்முரமாக தொடங்கி நடந்து வருகிறது. வீர வசந்தராயர் மண்டபத்தில் ஒட்டு மொத்தமாக 40 தூண்கள் நிர்மாணிக்கப்பட உள்ளன. இதற்கான வேலைகள் படிப்படியாக தொடங்கி நடந்து வருகிறது.

    வீர வசந்த ராயர் மண்டப பூமிபூஜையின் போது கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், மீனாட்சி அம்மன் கோயில் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • நான்கு சமத்துவபுரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் ஆனைமலை வட்டாரம் தென்சங்கம்பாளையம் ஊராட்சி, கிணத்துக்கடவு வட்டாரம் வடசித்தூரி ஊராட்சி, மதுக்கரை வட்டாரம் செட்டிபாளையம் பேரூராட்சி, வெள்ளை கிணறு (மாநகராட்சி பருதி) ஆகிய இடங்களில் சமத்துவப்புரங்கள் உள்ளன.

    சமத்துவபுரங்கள் மறுசீரமைப்பு செய்தல் பகுதி 1 திட்டத்தின் கீழ் நான்கு சமத்துவபுரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 321 வீடுகள் ரூ.160 கோடி மதிப்பீட்டில், பழுதுபார்ப்பு பணிகள் தலா ரூ.50,000 மதிப்பீட்டில் மேற்கொள்ளபட்டு வருகின்றன.

    இதில் ரூ.152 கோடி மதிப்பீட்டில் 305 வீடுகளின் பழுதுபார்ப்பு பணிகள் முடிவுற்ற நிலையில் மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.மேலும், மதுக்கரை செட்டிபாளையம் பேரூராட்சியில் ரூ.9லட்சம் மதிப்பீட்டில் 2 வீடுகள் மறுசீரமைப்புபணிகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

    கிணத்துக்கடவு வட்டாரம் வடசித்தூர் ஊராட்சியில் ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் 8 வீடுகள் மறுசீரமைப்புபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஆனைமலை, கிணத்துக்கடவு, மதுக்கரை எஸ்.எஸ் குளம் ஆகிய வட்டாரங்களில் உள்ள சமத்துவபுரங்களில் குடிநீர் வழங்கல் பணிகள், சாலைபணிகள், தெருவிளக்கு பணிகள், விளையாட்டு மைதானம், சமுதாய நலக்கூடங்கள், நூலக கட்டிடங்கள், அங்கன்வாடி கட்டிடம், நியாயவிலைகடைகள், தந்தை பெரியார் சிலைகள், சமத்துவபுர நுழைவு வாயில்கள் என மொத்தம் ரூ.92.93 லட்சம் மதிப்பீட்டில் 43 உட்கட்டமைப்பு சீரமைக்கும் பணிகளில் 37 பணிகள் ரூ.27.18 லட்சம் மதிப்பீட்டில் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றது

    மதுக்கரை வட்டாரம், செட்டி பாளையம் பெரியார் நினைவு சமத்து வபுரத்தில் உள்ள வீடுகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற் றுவருவதை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மே

    ற்கொண்டு. புனரமைப்பு பணிகளின் விவரம், முடிக்கப்பட்ட பணிகள் தரம் மற்றும் அதன் மதிப்பீடு குறித்து பயனா ளிகளிடம் கேட்டறிந்தார்.

    அதனை த்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பள்ளி, அங்கன்வாடி மையம், நூலகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.இந்த ஆய்வி ன்போது மதுக்களை வட்டாட்சியர் முருகேசன் மற் றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மூவர் மணி மண்டபத்தில் சிறப்பு பழுது பார்க்கும் பணியை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • சீரமைப்புப் பணிகள் பொதுப்பணித்துறையின் மூலம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம், நகராட்சிக்குட்பட்ட வரதாச்சாரியார் பூங்காவில் பெண் சமூகச் சீர்திருத்தவாதி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் வெண்கலச் சிலை அமைய உள்ள இடத்தில் சிலைவைக்க பீடம் அமைக்கும் பணி மற்றும் தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகத்துக்கு சிலை மற்றும் அரங்கம் அமைய உள்ள இடம், சீர்காழி தமிழிசை மூவர் மணி மண்டபத்தில் சிறப்பு பழுது பார்க்கும் பணி ஆகியவற்றை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்களும், கர்நாடக இசைக்கு தமிழ் கீர்த்தனைகளை இயற்றிய தமிழிசை மும்மூர்த்திகளான பதினான்காம் நூற்றாண்டில் சீர்காழியில் பிறந்த முத்துத் தாண்டவர், பதினெட்டாம் நூற்றாண்டில் தில்லையாடியில் பிறந்த அருணாசலக் கவிராயர் மற்றும் தில்லைவிடங்கள் கிராமத்தில் பிறந்த மாரிமுத்தாப் பிள்ளை ஆகிய மூவரின் நினைவாக 2010ஆம் ஆண்டு கருணாநிதியால் தமிழிசை மூவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டது.

    இந்த மணிமண்டபம் கடந்த காலங்களில் சரிவர பராமரிக்கப்படாததால், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனு வரப்பெற்றது. இதணை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, தமிழிசை மூவர் மணி மண்டபத்தில் சிறப்பு பழுது பார்ப்பதற்கும், புதிய கழிப்பறை மற்றும் அலங்கார கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கும், பொதுப்பணித்துறையின் மூலம் திட்ட மதிப்பீடு பெறப்பட்டு ரூ47,02,500க்கு நிதியொப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிகள் பொதுப்பணித்துறையின் மூலம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இவ்வாய்வின்போது மாவட்ட கலெக்டர் லலிதா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா எம். முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் (செய்தி) சரவணன், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, மயிலாடுதுறை நகர் மன்றத் தலைவர் செல்வராஜ், சீர்காழி நகர் மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) பாலரவிக்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (கட்டிடம்) ராமர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • மழையில் சாய்ந்த மின்கம்பங்களை மின்வாரிய ஊழியர்கள் சரிசெய்தனர்.
    • துரிதமாக செயல்பட்டதால் அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர் மற்றும் மின்வாரிய ஊழியர்களை பாராட்டினர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் வயல்களில் வளர்ந்துள்ள பயிர்களில் மழைநீர் தேங்கி உள்ளது.இதனால் தொண்டி அருகே செங்கான்வயல் கிராமத்தில் வயல் ஓரங்களில் ஊன்றப்பட்ட மின் கம்பங்கள் வயல்களில் சாய்ந்தது.

    இதனால் மின்சாரம் தாக்கும் முன் இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கிங் பீட்டர் சம்பந்தப்பட்ட மின் வாரியத்திற்கு தகவல் கொடுத்தார். அதனைத்தொடர்ந்து உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்து போர்மேன் முனியசாமி, மின்பாதை ஆய்வாளர்கள் கணேசன், ராஜேந்திரன் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் டிராக்டர் உதவியுடன் வயலில் சாய்ந்த மின்கம்பங்களை நிமிர்த்தி ஊன்றினர்.

    துரிதமாக செயல்பட்டதால் அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர் மற்றும் மின்வாரிய ஊழியர்களை பாராட்டினர்.

    • காவிரி பாலத்தில் இரவு, பகலாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது
    • தேவைக்கு ஏற்ப கூடுதல் பணியாட்களை ஈடுபடுத்த முடிவு

    திருச்சி:

    திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் 45 ஆண்டு கால பழமையான சிந்தாமணி காவிரி பாலம் வலுவிழந்ததைத் தொடர்ந்து அப்பாலத்தை ரூ.7 கோடியில் பராமரிப்பு செய்து புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த 10-ந்தேதி நள்ளிரவு பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு 11-ந்தேதி காலை முதல் பணிகள் நடந்து வருகிறது. பாலததில் ஓரமாக இருசக்கர வாகனங்கள் போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

    பணிகள் தொடங்கி 12 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை வட்டாரங்களில் கூறியதாவது :-

    இப்போது ஆரம்ப கட்டப்பணிகள் நடந்து வருகிறது. பாலத்தில் உள்ள ஒவ்வொரு இணைப்புகளுக்கும் இடையே புதிய ராடுகள் பொருத்த துளையிட்டு பழைய ராடுகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.

    இதுபோன்று 32 இணைப்புகளில் பழைய ராடுகளை அகற்ற வேண்டும். தொடர்ந்து பாலத்திற்கு அடியில் உள்ள பேரிங்குகள் சீரமைத்து பொருத்தும் பணி உள்ளிட்ட அடுத்தடுத்த பணிகள் நடைபெறும்.

    இப்பணிகள் இரவு, பகல் என 24 மணி நேரமும் நடந்து வருகிறது. இப்போதைக்கு 50 நபர்கள் 2 ஷிப்டுகளாக பணியாற்றி வருகின்றனர். பணிகள் மற்றும் ேதவைகளுக்கேற்ப கூடுதல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இப்பராமரிப்பு பணி நிறைவடைய 5 மாதங்கள் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனினும் முடிந்த வரை முன்னதாகவே பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணியின் போது இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் சிரமமாக இருந்தாலும், அவற்றை சமாளித்து தான் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றனர். 

    • ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் குண்டும் குழியுமான சாலைகள் சீரமைப்பு பணி நடைபெற்றன
    • கண்ணன் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாக பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக தூரிய நடவடிக்கை எடுக்கும் விதமாக

    8-வது வார்டு ராஜகொல்லை தெருவில், சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவங்கி வைத்தார்.

    உடன் நகராட்சி தலைவர் சுமதி சிவகுமார், நகராட்சி துணைத் தலைவரும், திமுக நகர கழக செயலாளருமான வெ.கொ.கருணாநி, நகர் மன்ற உறுப்பினர்கள் எஸ்.ராஜமாணிக்கம் பிள்ளை, வார்டு கழக செயலாளர் மருதை.விஜயன், வீர.புகழேந்தி வாசு மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • ராட்சத குழாய்களை சீரமைக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
    • குடிநீர் வினியோகத்தில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

    ஊட்டி:

    கூடலூர் நகராட்சி பகுதியில் சுமார் 1 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஓவேலி பேரூராட்சியில் ஹெலன், ஆத்தூர், பல்மாடி உள்ளிட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டி குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இப்பகுதியில் உள்ள அணைகளில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் கூடலூருக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் கூடலூர் பகுதியில் கடந்த 2 வாரங்களாக தொடர் கன மழை பெய்தது. இதன் காரணமாக பாண்டியாறு, மாயாறு உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் குடிநீர் திட்ட தடுப்பணைகளிலும் சேறும், சகதியுமான தண்ணீர் அடித்து வரப்பட்டது. குழாய்களில் உடைப்பு இதன் காரணமாக ராட்சத குழாய்களில் பல இடங்களில் அடைப்புகள் ஏற்பட்டது.

    தொடர்ந்து ராட்சத குழாய்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு வந்தது.

    இதையடுத்து கூடலூர் பகுதியில் மழையின் தாக்கம் பரவலாக குறைந்து விட்டது. இதன் காரணமாக உடைப்பு ஏற்பட்ட ராட்சத குழாய்களை சீரமைக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் கெவிப்பாரா பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் நகராட்சி பொறியாளர் பார்த்தசாரதி தலைமையில் குடிநீர் ஆய்வாளர் ரமேஷ், கவுன்சிலர் வெண்ணிலா உள்ளிட்ட நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் நிலத்தை தோண்டினர்.

    சீரமைப்பு பணி தொடர்ந்து ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணி மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டது. இதேபோல் நகராட்சி பகுதியில் உடைப்பு ஏற்பட்ட இடங்களில் ஊழியர்கள் சீரமைப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். எனவே குடிநீர் வினியோகத்தில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிளிப்பு திட்டம் மற்றும் அம்ரித்சரோவர் திட்டம் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் பேசினர்.
    • நிகழ்ச்சிக்கு வல்லம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜமீன்பாத்திமா தலைமை தாங்கினார்.

    தென்காசி:

    தென்காசி ஊராட்சி ஒன்றியம் வல்லம் ஊராட்சியில் உள்ள இசக்கி திருத்துக்குளம் பகுதியில் ரூ.9.56 லட்சம் செலவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பழைய நீர்நிலைகள் சீரமைப்பு செய்யும் அம்ரித்சரோவர் - 2022 - 23 திட்டப் பணிகள் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு வல்லம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜமீன்பாத்திமா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஹாஜி வல்லம் சேக்அப்துல்லா கலந்துகொண்டு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலர் (வ‌.ஊ) மாணிக்கவாசகம், தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி ஒன்றிய பொறியாளர், பணி மேற்பார்வையாளர் ஆகியோர் கலந்து கொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிளிப்பு திட்டம் மற்றும் அம்ரித்சரோவர் திட்டம் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் பேசினர்.

    இந்த நிகழ்ச்சியில் தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் மல்லிகா சரவணன், வல்லம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்சுந்தரி, செல்வி, இசக்கியம்மாள், செய்யது அலி பாத்திமா, செ.சாகுல் ஹமீது, முபாரக் அலி, சங்கீதா, திவான் மைதீன் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்ட ஒருங்கிணைப்பாளர் சேகுமைதீன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணித்தள பொறுப்பாளர் தெய்வத்தாய், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் வல்லம் ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    • பணிகள் நிறைவடைந்தது.
    • 4-ந் தேதி முதல் பஸ், லாரிகளுக்கு அனுமதி

    வேலூர்:

    காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் பழுது சீரமைக்கும் பணிகள் கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கியது.

    இதைத் தொடர்ந்து மேம்பாலத்தில் 3 இணைப்புகளில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் வகையில் ரப்பர் பேடு இரும்புச் சட்டம் கம்பிகள் பொருத்தப்பட்டன. அதோடு பாலத்தின் இணைப்பை உறுதி செய்யும் வகையில் அந்த பகுதியில் கெமிக்கல் மற்றும் சிமெண்ட் கலவை கொண்டு பேக்கிங் செய்ய ப்பட்டது.

    இந்த பணிகள் அனைத்தும் கடந்த 18-ந் தேதியுடன் நிறைவடை ந்தது. இணைப்பு பகுதியில் செய்யப்பட்ட பணிகள் செட் ஆவதற்கு 10 நாட்கள் கால அவகாசம் எடுத்துக் கொள்ள ப்பட்டது.

    நேற்று ரெயில்வே பாலத்தின் மீது கனரக வாகனங்களை இயக்கி சோதனை செய்தனர்.

    இதற்காக தலா 30 டன் எடையில் மொத்தம் 120 டன் எடை கொண்ட நான்கு லாரி மேம்பாலத்தின் மீது ஒரே நேரத்தில் இயக்கியும் நிறுத்தியும் பாலத்தின் அதிர்வு தன்மை பளுதாங்கும் தன்மை குறித்து பிரிட்ஜ் டெஸ்டிங் எந்திரம் மூலமாக ெரயில்வே என்ஜினீயர்கள் சோதனை செய்தனர்.

    அப்போது இதற்கு முன்னர் பாலத்தின் மீது கனரக வாகனங்கள் சென்ற போது ஏற்பட்ட அதிர்வுகள் சீரமைக்கும் பணி முடிந்த பிறகு ஏற்படவில்லை. அதோடு போக்குவரத்துக்கும் பாலம் தயார் நிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

    அதே நேரம் பாலத்தின் மீது தண்ணீர் தேங்காத வகையில் குழாய் புதைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.

    இருசக்கர வாகனங்கள்

    இந்த நிலையில் இன்று காலை முதல் ரெயில்வே பாலத்தில் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதாக கதிர் ஆனந்த் எம்.பி. தெரிவித்தார்.அதன்படி பாலத்தில் ரெயில்வே மேம்பாலத்தில் இன்று காலை இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இதனால் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அத்து மீறி சில ஆட்டோக்களும் பாலத்தின் மீது இயக்கப்பட்டன. அந்தப் பகுதியில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டு இரு சக்கர வாகனங்களை மட்டும் அனுமதித்து வருகின்றனர். கனகரக வாகனங்கள் வழக்கம்போல் மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. வருகிற 4-ந்தேதி முதல் பஸ் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

    ×