மழையில் சாய்ந்த மின்கம்பங்களை சரிசெய்யும் பணி

மழையில் சாய்ந்த மின்கம்பங்களை மின்வாரிய ஊழியர்கள் சரிசெய்தனர்.துரிதமாக செயல்பட்டதால் அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர் மற்றும் மின்வாரிய ஊழியர்களை பாராட்டினர்.
மழையில் சாய்ந்த மின்கம்பங்களை சரிசெய்யும் பணி
Published on

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் வயல்களில் வளர்ந்துள்ள பயிர்களில் மழைநீர் தேங்கி உள்ளது.இதனால் தொண்டி அருகே செங்கான்வயல் கிராமத்தில் வயல் ஓரங்களில் ஊன்றப்பட்ட மின் கம்பங்கள் வயல்களில் சாய்ந்தது.

இதனால் மின்சாரம் தாக்கும் முன் இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கிங் பீட்டர் சம்பந்தப்பட்ட மின் வாரியத்திற்கு தகவல் கொடுத்தார். அதனைத்தொடர்ந்து உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்து போர்மேன் முனியசாமி, மின்பாதை ஆய்வாளர்கள் கணேசன், ராஜேந்திரன் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் டிராக்டர் உதவியுடன் வயலில் சாய்ந்த மின்கம்பங்களை நிமிர்த்தி ஊன்றினர்.

துரிதமாக செயல்பட்டதால் அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர் மற்றும் மின்வாரிய ஊழியர்களை பாராட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com