search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திசையன்விளையில் அகில இந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி இன்று இரவு தொடக்கம்
    X

    விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கேலரியை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் பார்வையிட்டபோது எடுத்த படம்.

    திசையன்விளையில் அகில இந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி இன்று இரவு தொடக்கம்

    • அகில இந்திய அளவிலான ஆண், பெண் மின்னொளி கபடி போட்டி இன்று தொடங்கி 14-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.
    • போட்டியை அமர்ந்து பார்க்க வசதியாக கேலரி அமைக்கப்பட்டுள்ளது.

    திசையன்விளை:

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு திசையன்விளையை அடுத்து உள்ள அப்புவிளை வி.எஸ்.ஆர்.விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய அளவிலான ஆண், பெண் மின்னொளி கபடி போட்டி இன்று தொடங்கி 14-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.ஆர். செய்துள்ளார்.

    போட்டியில் மராட்டியம், உத்தரபிரதேசம், அரியானா, குஜராத், டெல்லி, மும்பை, ஆந்திரா, கேரளா, கர்நாடகா தமிழ்நாடு உள்பட 80 அணிகள் கலந்துகொண்டு விளையாடுகிறது.

    போட்டியை அமர்ந்து பார்க்க வசதியாக கேலரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் பார்வையிட்டார்.

    ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, அப்புவிளை பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். சுரேஷ், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர்.ரமேஷ், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ராம் கிஷோர், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், தகவல் தொழில்நுட்ப அணி முருகேஷ், புளியடி குமார், எழில் ஜோசப், ஸ்டாலின், முத்தையா மற்றும் பலர் உடனிருந்தனர்.

    இன்று இரவு நடைபெறும் முதல்நாள் போட்டியை சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி தொடங்கிவைக்கிறார்.

    Next Story
    ×