search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devipatnam"

    • 51 சக்தி பீடங்களில், 18 சக்தி பீடங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன.
    • தேவிபட்டினம். பராசக்தியின் அக்குள் பகுதி விழுந்த இடம்.

    இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள 51 சக்தி பீடங்களில், 18 சக்தி பீடங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்றாக திகழ்கிறது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம். பராசக்தியின் அக்குள் பகுதி விழுந்த இடமாகத் திகழும் இந்த சக்தி பீடம், `வீரசக்தி பீடம்' என்று போற்றப்படுகிறது.

    மகிஷாசுரமர்த்தினி கோபம் தணிந்து அமைதியான வடிவில் இங்கு கோவில் கொண்டிருப்பதாக எடுத்துரைக்கிறது, தேவிபுர மகாத்மியம். அதோடு அட்சர வகைகளில் சாகர எழுத்துக்களும் இத்தலத்து சக்திபீட நாயகியாக விளங்கும் அன்னை உலகநாயகியிடமே தோன்றியதாகவும் தெரிவிக்கிறது தேவிபுர புராணம்.

    மற்ற சக்தி பீடங்களில் உள்ள கரும்பாறை அமைப்பே இங்கும் இருப்பது இந்த வீரசக்தி பீடத்திற்கு ஆதாரமாக உள்ளது. இந்த தேவிகோட்ட பீடத்தில் உள்ள தேவியின் பெயர் `அகிலேஸ்வரி' என பிரஹத்நீலதந்திர நூல் குறிப்பிடுகிறது. இப்பெயரே `உலகநாயகி' என்று தமிழில் வழங்கப்படுகிறது. ராமாயண காவியம் போற்றும் முக்கிய ஷேத்திரம் இது. ராமபிரானது வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத இடமாகத் திகழ்கிறது, இந்த தேவிபட்டினம்.

    முதலாம் ராஜராஜ சோழனின் பட்டத்து அரிசியான லோகமாதேவியின் பெயரில் `உலகமாதேவிபட்டினம்' என்பதே மருவி தேவிபட்டினம் ஆனது என்று சரித்திரம் விவரிக்கிறது.

    மகிஷாசுர வதம்

    பிரம்மனிடம் வரம் பெற்ற மகிஷாசுரன், தேவர்களையும், ரிஷிகளையும் பலவாறு துன்புறுத்தினான். மகிஷாசுரன் தன்னுடைய அழிவு ஓர் பெண்ணால்தான் ஏற்பட வேண்டும் என்று வரம் பெற்றிருந்தான். எனவே அன்னை பராசக்திக்கு, சிவபெருமான் சூலத்தையும், திருமால் சக்கரத்தையும், பிரம்மா கமண்டலத்தையும் அளித்தனர்.

    அதேபோல் இந்திரன் வஜ்ராயுத்தையும், அக்னிபகவான் சக்தி என்னும் ஆயுதத்தையும், எமன் தண்டத்தையும், நிருதி கத்தியையும், வருணன் பாசத்தையும், வாயு பகவான் வில்லையும், குபேரன் பாண பாத்திரத்தையும் வழங்கினர்.

    மேலும் சமுத்திரராஜன் தாமரை மலரை வழங்கினான். சூரியன் ஒளிக்கதிர்களை கொடுத்தார். ஆதிசேஷன், நாக ஆபரணங்களை அளித்தார். சர்வ சக்திகளையும் பெற்ற பராசக்தி, 18 கரங்களில் 18 விதமான ஆயுதங்களை தாங்கி மகிஷாசுரனை வதம் செய்தாள். வதம் புரிந்த உடன் இங்கு வந்து தேவி சாந்தமடைந்து, படுத்தவண்ணம் சுயம்புவாக எழுந்தருளினாள்.

     ராமர் பெற்ற ஆசி

    ராவணனை வெல்லும் நோக்கத்தோடு இலங்கை செல்ல இருந்த ராமர் மற்றும் லட்சுமணர், அனுமன் உள்ளிட்ட வானரப் படையினர் அனைவரும், உப்பூரில் வீற்றருளும் வெயிலுகந்த விநாயகரை வழிபட்டனர். பின்னர் கடற்கரை ஓரமாகவே பயணித்த ராமரும், அவரது படைகளும் தேவிபூர் என்னும் இந்த தேவிபட்டினத்தில் முதலில் திலகேஸ்வரப் பெருமானை வணங்கி, பின் வீரசக்தி பீடத்தில் வீற்றருளும் மகிஷாசுரமர்த்தினியின் மறு உருவமான அன்னை உலகநாயகிக்கு, தீர்த்தம் உண்டாக்கி அபிஷேகித்து ஆன்ம சுத்தி அடைந்தனர். உலகநாயகி அம்மனை வணங்கி அவரது ஆசி பெற்ற பின்னர், கடல் பகுதியில் நவக்கிரகங்களை கல்லால் நிறுவி வழிபட்டனர்.

    அப்போது கடலில் அலைகள் முன்னெழும்பி வரவே, இங்கு அருள்புரியும் ஆதி ஜகந்நாதரை, ராமர் உள்ளிட்ட அனைவரும் ஆராதித்தனர். ஜெகந்நாத பெருமாளின் ஆணைக்கு அடங்கிய அலைகள் பின்னே செல்ல, நவக்கிரக நாயகர்களை நலமுடன் பூஜித்த பிறகு, வானரப் படையுடன் இலங்கை சென்றடைந்தார், ராமபிரான்.

    ஆலய அமைப்பு

    கடற்கரைக்கு சற்று உட்புறமாக அமைதியான சூழலில் அமைந்துள்ளது, உலகநாயகி அம்மன் ஆலயம். கிழக்கு முகமாக ஏழு கலசங்களைக் கொண்ட ஐந்து நிலை ராஜகோபுரம் அற்புதமாக காட்சியளிக்கின்றது. நான்கு தூண்களைக் கொண்ட முகமண்டபம் அழகுற காணப்படுகிறது. உள்ளே பலிபீடம், கொடிமரம் மற்றும் சிம்ம வாகனம் உள்ளது. நீண்ட முன் மண்டபம், பதினாறு தூண்களைக் கொண்டு பதினாறுகால் கருங்கல் மண்டபமாக பற்பல சிற்பங்களை தாங்கி நிற்கின்றது. பின் இடை மண்டபம். அடுத்ததாக கருவறை.

    கருவறை உள்ளே சுயம்பு வடிவாய் எழுந்தருளி, பேரருள் பரப்புகின்றாள் உலகத்தையே காத்தருளும் அன்னை உலகநாயகி. சுதையாக முழு உருவச் சிலையும் இங்கு காணப்படுகின்றன. ஆலயத்தைச் சுற்றி வருகையில் அம்பாளின் கருவறை மேலே அமைக்கப்பட்டுள்ள ஏகதள விமானத்தை வழிபடுவது சிறப்பு.

    பிராகாரத்தில் கந்தன், கணபதி மற்றும் நாகராஜர் சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறிய ஆலயம் எனினும் சீருடன் திகழ்கிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெறுகின்றன. நவராத்திரி மற்றும் சித்ரா பவுர்ணமி ஆகிய வருடாந்திர விசேஷங்களும் இங்கு சிறப்புற கொண்டாடப்படுகின்றன.

    இந்த உலகநாயகி அம்மனை வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். மன தைரியம் கூடும். எதிரிகளால் ஏற்படும் இடையூறுகள் நீங்கும். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இடைவிடாமல் ஆலயம் திறந்திருக்கும். சக்தி பீட நாயகியாக மட்டுமில்லாமல் கிராம தேவதையாகவும், பலரது குலதெய்வமாகவும் திகழும் உலகநாயகியை வழிபட்டு வாழ்வில் உயர்வு பெறுவோம்.

    அமைவிடம்

    ராமநாதபுரத்தில் இருந்து தொண்டி கடற்கரை சாலையில் ராமநாதபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தேவிபட்டினம்.

    • யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன். முத்தையா பாண்டியன் தொடங்கி வைத்தார்.
    • மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை டி.என்.ஆர்.ஆர். ஐ.எஸ்.திட்டம் 2021 - 22 மூலமாக ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

    சிவகிரி:

    சிவகிரி குமாரபுரம், தேவிபட்டணம் பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, தேவிபட்டணத்தில் இருந்து குமாரபுரம் வழியாக சிவகிரி செல்லும் தார்சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை டி.என்.ஆர்.ஆர். ஐ.எஸ்.திட்டம் 2021 - 22 மூலமாக ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினை தேவிபட்டணம் பேருந்து நிறுத்தம் தென்புறம் உள்ள பிள்ளையார் கோவில் அருகே யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன். முத்தையா பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தேவிபட்ட ணம் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மனோகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், தென்மலை முனியராஜ், கிளை செயலாளர் முருகன், பஞ்சாயத்து துணைத் தலைவர் மாடக் கண்ணு, அனைத்து வார்டு கவுன்சிலர்கள், ஜெய பிரகாஷ், துரைராஜ், காளி ராஜ், மணிகண்டன், விக்கி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ் தலைமை தாங்கினார்.
    • மேற்கு தொடர்ச்சி மலை பழியன்பாறை அருகே உள்ள குறுக்காற்றில் மேல்புறம் பொதுமக்களுக்கான பஞ்சாயத்து குடிநீர் கிணறு அமைந்துள்ளது.

    சிவகிரி:

    சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மாடசாமி, செயலர் பொன் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கூட்டுறவு பால்வண்டி தேவிபட்டணம் பேருந்து நிலையத்தில் வாகனத்தை நிறுத்தி பால் ஏற்றுவதை தவிர்த்தும், பள்ளிக் குழந்தைகள், காளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்தி பால் ஏற்றிக் கொள்ள மன்றத்தின் அனுமதி, தேவிபட்டணம் ஊருக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை பழியன்பாறை அருகே உள்ள குறுக்காற்றில் மேல்புறம் பொதுமக்களுக்கான பஞ்சாயத்து குடிநீர் கிணறு அமைந்துள்ளது.

    மழைக்காலத்தில் குறுக்காற்றில் வெள்ளம் வரும் போது கிணற்றில் உள்ள நீரேற்று மின் மோட்டாரை இயக்க செல்ல முடியாத காரணத்தால் பழியன் பாறையின் மீது மின் மோட்டார் அறை அமைக்க தீர்மானம் உள்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் வார்டு உறுப்பினர்கள் மாடக்கண்ணு, ராமராஜ், ஆர்.தங்கராஜ், அ.தங்கராஜ், கிரேஸ், முத்துலட்சுமி, கந்தம்மாள், குருசாமி, கோபால், பூங்கோதை, கனகஜோதி, முத்துமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×