search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி அருகே தேவிபட்டணம் பஞ்சாயத்து கூட்டம்
    X

    கூட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.


    சிவகிரி அருகே தேவிபட்டணம் பஞ்சாயத்து கூட்டம்

    • ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ் தலைமை தாங்கினார்.
    • மேற்கு தொடர்ச்சி மலை பழியன்பாறை அருகே உள்ள குறுக்காற்றில் மேல்புறம் பொதுமக்களுக்கான பஞ்சாயத்து குடிநீர் கிணறு அமைந்துள்ளது.

    சிவகிரி:

    சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மாடசாமி, செயலர் பொன் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கூட்டுறவு பால்வண்டி தேவிபட்டணம் பேருந்து நிலையத்தில் வாகனத்தை நிறுத்தி பால் ஏற்றுவதை தவிர்த்தும், பள்ளிக் குழந்தைகள், காளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்தி பால் ஏற்றிக் கொள்ள மன்றத்தின் அனுமதி, தேவிபட்டணம் ஊருக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை பழியன்பாறை அருகே உள்ள குறுக்காற்றில் மேல்புறம் பொதுமக்களுக்கான பஞ்சாயத்து குடிநீர் கிணறு அமைந்துள்ளது.

    மழைக்காலத்தில் குறுக்காற்றில் வெள்ளம் வரும் போது கிணற்றில் உள்ள நீரேற்று மின் மோட்டாரை இயக்க செல்ல முடியாத காரணத்தால் பழியன் பாறையின் மீது மின் மோட்டார் அறை அமைக்க தீர்மானம் உள்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் வார்டு உறுப்பினர்கள் மாடக்கண்ணு, ராமராஜ், ஆர்.தங்கராஜ், அ.தங்கராஜ், கிரேஸ், முத்துலட்சுமி, கந்தம்மாள், குருசாமி, கோபால், பூங்கோதை, கனகஜோதி, முத்துமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×