search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆழ்வார்திருநகரி வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு தொழிற்நுட்ப பயிற்சி
    X

    பயிற்சி நடைபெற்றபோது எடுத்தபடம்.

    ஆழ்வார்திருநகரி வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு தொழிற்நுட்ப பயிற்சி

    • தொழிற்நுட்ப பயிற்சியினை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லிராணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
    • பூச்சியியல் துறை தொழில்நுட்ப வல்லுநர் முத்துக்குமார், பாதுகாப்பான முறையில் பூச்சி மற்றும் நோய்களுக்கான மருந்துகள் தெளிப்தற்கான தொழிற்நுட்பங்களை எடுத்துரைத்தார்.

    சாத்தான்குளம்:

    ஆழ்வார்திருநகரி வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கும், பயிர் மருந்து தெளிப்பவர்களுக்கும் பாதுகாப்பான முறையில் பூச்சி மற்றும் நோய்களுக்கான மருந்துகளை தெளிப்பதற்கான தொழிற்நுட்ப மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி உடையார்குளம் கிராமத்தில் வைத்து திங்கட்கிழமை நடைபெற்றது.

    பயிற்சியினை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லிராணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.உடையார்குளம் கிராமத் தலைவர் தேவராஜ் முன்னிலை வகித்தார்.

    வாகைகுளம் வேளாண் அறிவியல் மையம் பூச்சியியல் துறை தொழில்நுட்ப வல்லுநர் முத்துக்குமார், பாதுகாப்பான முறையில் பூச்சி மற்றும் நோய்களுக்கான மருந்துகள் தெளிப்தற்கான தொழிற்நுட்பங்களை எடுத்துரைத்தார். உழவியல்துறை வல்லுநர் முருகன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார். இப்பயிற்சியில் தென்னங்கன்றுகள் நடவு முறை குறித்து செயல்விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது. இதில் 40 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜேசுதாசன், உதவி தொழில் நுட்ப மேலாளர் நளினி, சூசைமாணிக்கம் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×