search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆழ்வார்திருநகரி அருகே மக்கள் தொடர்பு முகாமில் ரூ.54 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் வழங்கினார்
    X

    வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பொதுமொழிகள் கையேட்டினை மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் வெளியிட்ட காட்சி.


    ஆழ்வார்திருநகரி அருகே மக்கள் தொடர்பு முகாமில் ரூ.54 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் வழங்கினார்

    • தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட கேம்ப்லாபாத் ஊராட்சியில் நேற்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
    • மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட அரசு துறைகள் மூலம் ரூ. 54,81,473 மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட கேம்ப்லாபாத் ஊராட்சியில் நேற்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் பல்வேறு துறையினர் சிறப்பு ஸ்டால்கள் மூலம் தங்களது துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர்.

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட அரசு துறைகள் மூலம் ரூ. 54,81,473 மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கி பேசியதாவது:-

    மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் சோதனை செய்துள்ளார்கள். நடமாடும் மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    அது மட்டுமல்லாமல் மக்களை தேடி மருத்துவம் மூலம் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் அதிகமாக வாழை, பாரம்பரிய நெல் வைத்துள்ளார்கள். ஆடு, மாடு போன்றவைகளுக்கு தடுப்புப்பூசி கொடுத்து ள்ளார்கள்.

    கன்று பராமரிப்பு பெட்டகம் வாங்கி பயன்பெறலாம். மேலும் கோழிப்பண்ணை மற்றும் கோழி வளர்ப்பவர்கள் மானிய விலையில் குஞ்சு பொறிப்பான் எந்திரம் வாங்கி பயனடையலாம்.

    பொதுமக்கள் வாகனங் களில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் பயணம் செய்யும்போது படிக்கட்டு களில் தொங்கிக்கொண்டு செல்லக்கூடாது.

    வட்டார போக்குவரத்து அலுவலகம் வாயிலாக சாலை பொதுமொழிகள் என்ற கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இக்கையேடினை ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று வழங்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் முகைதீன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், கேம்லாபாத் பஞ்சாயத்து தலைவர் சபிதா சர்மிளா, துணை தலைவர் ஹாஜா உதுமான், திருச்செந்தூர் கோட்டாட்சியர் புகாரி, ஏரல் தாசில்தார் கண்ணன், வட்ட வழங்கல் அலுவலர் முரளிதரன், ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், கருப்பசாமி, கால்நடை இணை இயக்குநர் ராஜன், துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குநர் செல்வகுமார், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் நாஞ்சியார், டாக்டர் சந்திரா, தென்திருப்பேரை ஆரம்ப சுகாதார நிலையம் டாக்டர் பார்த்தீபன், மருத்துவ அலுவலர் முல்லை பாண்டியன், வட்டார சுகாதார ஆய்வாளர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் இளங்கோவன், ஆழ்வார் திருநகரி வட்டார வேளாண் உதவி இயக்குநர் அல்லிராணி, மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர் பாலசுந்தரம், ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலர் சரஸ்வதி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுருதி, வட்டார மேலாளர் சமூகநலம் வேல்கனி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயா, ராமு, மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



    Next Story
    ×