search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youngman"

    • களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அப்துல் வஹாப் மகன் அக்பர் அலி (வயது 19). சம்பவத்தன்று இவர் தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார்.
    • அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகன் சுரேஷ் (22) அக்பர் அலியை அவதூறாக பேசினார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அப்துல் வஹாப் மகன் அக்பர் அலி (வயது 19). சம்பவத்தன்று இவர் தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகன் சுரேஷ் (22) அக்பர் அலியை அவதூறாக பேசினார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சுரேஷ், அக்பர் அலியை கல்லால் தாக்கினார்.

    இதனால் காயமடைந்த அவர் களக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேசை தேடி வருகின்றனர்.

    • நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது29).
    • இவருக்கும் அதே ஊரை சேர்ந்த நயினார் (30) குடும்பத்தினருக்கும் கடந்த 1 மாதத்திற்கு முன்பு நடந்த கோவில் கொடை விழாவின் போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது29). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த நயினார் (30) குடும்பத்தினருக்கும் கடந்த 1 மாதத்திற்கு முன்பு நடந்த கோவில் கொடை விழாவின் போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் சம்பவ த்தன்று நயினார், அவரது மகன் கந்தன் ஆகியோர் கார்த்திக் வீட்டுக்கு சென்று, அவரை அவதூறாக பேசினர். இதனை தட்டி கேட்ட கார்த்திக்கின் மனைவி வித்யா, அவரது தம்பி மனைவி அனிதா ஆகியோரையும் அவதூறாக பேசினர். அத்துடன் கார்த்திக்கின் மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்தனர்.

    அரிவாளால் வீட்டின் கதவையும், குடிநீர் குழாயை யும், பாத்திரங்களையும் வெட்டி சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டனர்.

    இதனைதொடர்ந்து ஆத்திரம் அடைந்த கார்த்திக், நயினாரை அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த நயினார் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுபற்றி 2 பேரும் மூன்றடைப்பு போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த நயினார், அவரது மகன் கந்தன், கார்த்திக் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • களக்காடு அருகே உள்ள மேலவடகரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சிவசாமிக்கும், சுரேஷ் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
    • சுரேஷ், இசக்கி, தாயம்மாள் ஆகியோர் சிவசாமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மேலவடகரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி சிவசாமி (வயது 20). இவருக்கும், அதே தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.

    சம்பவத்தன்று சிவசாமி தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுரேஷ், இசக்கி, தாயம்மாள் ஆகியோர் சிவசாமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேஷ் உள்பட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று மதியம் வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டியவர் மறுநாள் இரவு வரை வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
    • சம்பவம் குறித்து அழகர்சாமியின் அண்ணன் முத்துப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    உடுமலை:

    திண்டுக்கல் மாவட்டம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் அழகர்சாமி (வயது 29). இவர் கடந்த 5 ஆண்டுகளாக உடுமலை சாஸ்தா நகரில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்துள்ளார். இவர் அவ்வப்போது கிடைக்கும் வேலைகளுக்கு சென்று வந்துள்ளார்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று மதியம் வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டியவர் மறுநாள் இரவு வரை வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் கதவைத் தட்டிப்பார்த்தும் திறக்காததால் உடுமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அழகர்சாமி கட்டிலில் எறும்புகள் மொய்த்த நிலையில் பேச்சு மூச்சில்லாமல் கிடந்தார்.உடனடியாக அவரை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    சம்பவம் குறித்து அழகர்சாமியின் அண்ணன் முத்துப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாகக் கூறப்படும் நிலையில் குடிபோதையில் இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? உடல் நலக்குறைவால் இறந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பாளை மனக்காவலம் பிள்ளை நகர் நேரு மெயின்ரோட்டை சேர்ந்தவர் தாமஸ். இவரது மகன் ராபர்ட்(வயது 27). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
    • சமீபத்தில் ராபர்ட்டுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நெல்லை:

    பாளை மனக்காவலம் பிள்ளை நகர் நேரு மெயின்ரோட்டை சேர்ந்தவர் தாமஸ். இவரது மகன் ராபர்ட்(வயது 27). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

    ராபர்ட் தனது காரை வீட்டு முன்பு நிறுத்திவிட்டு தூங்க செல்வது வழக்கம். அதன்படி நேற்றிரவு காரை நிறுத்திவிட்டு தூங்க சென்றுவிட்டார். இன்று அதிகாலை தேவாலயம் செல்வதற்காக ராபர்ட் காரை எடுக்க சென்றார்.

    அப்போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் பாளை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமீபத்தில் ராபர்ட்டு க்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கூந்தன்கு ளத்தை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் முத்துகிருஷ்ணன் (வயது19). கார் டிரைவர்.
    • இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தென்னவநேரியை சேர்ந்த லிங்கபெருமாளிடம் ரூ 5,500 கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

    களக்காடு:

    மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கூந்தன்கு ளத்தை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் முத்துகிருஷ்ணன் (வயது19). கார் டிரைவர்.

    இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தென்னவநேரியை சேர்ந்த லிங்கபெருமாளிடம் ரூ 5,500 கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அதன் பின் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதுசம்பந்தமாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று இரவில் முத்துகிருஷ்ணன், கூந்தன்குளம் அருகே சென்ற போது, அங்கு வந்த லிங்கபெருமாள் அவரை தாக்கி, அவரது செல்போனை பறித்து சென்று விட்டார்.

    இதுகுறித்து அவர் மூலைக்கரைப்பட்டி போலீ சார் வழக்குப்பதிவு செய்து லிங்க பெருமாளை தேடி வருகின்றனர்.

    • மேலப்பாளையம் மில்லத் நடுத்தெருவை சேர்ந்தவர் நஜிமுனிஷா (வயது52).
    • மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்னுல் ரபிக்கை கைது செய்தனர்.

    நெல்லை:

    மேலப்பாளையம் மில்லத் நடுத்தெருவை சேர்ந்தவர் நஜிமுனிஷா (வயது52). இவரது மகன் ஜெய்னுல் ரபிக் (27). இவர் தினமும் குடித்துவிட்டு குடிபோதையில் வந்து வீட்டில் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல ஜெய்னுல் ரபிக் மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். அதனை அவரது சகோதரர் அன்சர் அலி பாதுஷா (29) என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜெய்னுல் ரபிக், அன்சர் அலி பாதுஷாவை அங்கிருந்த கிரைண்டர் கல்லால் தாக்கினார். இதில் அவர் பலத்த காய மடைந்தார். உடனடியாக அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மேலப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் எபினேசர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்னுல் ரபிக்கை கைது செய்தனர்.

    • கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
    • சந்தனகுமார் தனது படுக்கை அறைக்குள் சென்றவர் வெகு நேரமாகியும் கதவை திறக்கவில்லை.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சூரிய முத்து. இவரதுமகன் சந்தனகுமார் (வயது 22).டைல்ஸ் ஒட்டும் தொழில்செய்து வந்தார். கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனை அவரது தந்தை சூரிய முத்து கண்டித்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று மாலை சந்தனகுமார் தனது படுக்கை அறைக்குள் சென்றவர் வெகு நேரமாகியும் கதவை திறக்கவில்லை.இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சந்தனகுமார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அவரை மீட்டு காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சந்தனகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து சந்தன குமாரின் அண்ணனான ஜெய கண்ணன் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்குப் பதிவு செய்தார்.இன்ஸ்பெக்டர் செந்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

    தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெர்மல் நகரை சேரந்தவர் நாகராஜ் ( வயது 27), கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கரன்கோவிலில் பெற்றோர் திட்டியதால் வாலிபர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    சங்கரன்கோவில் அருகே உள்ள நகரம் உரக்கடை தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் பிரமுத்து(வயது 21). இவர் 9-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, கட்டிட வேலைக்கு சென்றுவந்தார். கடந்த 23-ந்தேதி அவர் திடீரென விஷம் குடித்தார். நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் நேற்று இறந்தார்.

    இதுதொடர்பாக சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், கடந்த சில நாட்களாக பிரமுத்து வேலைக்கு சென்றுவிட்டு இரவில் மிகவும் தாமதமாக வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அவரது தாயார் மாரியம்மாள் கண்டித்ததாக கூறப்படுகிறது.

     இதனால் பிரமுத்து யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் ஒருவர் பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    ஆலங்குளம் அருகே உள்ள கீழகலங்கல் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் பாரத்(வயது 30). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 19-ந்தேதி தனது உறவினரான பிரசாந்த் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சேர்ந்தமரம் அருகே உள்ள சுப்பையாபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார். சுப்பையாபுரம் விலக்கு அருகே சென்றபோது சாலையில் இருந்த வேகத்தடையை கவனிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் மோட்டார் சைக்கிள் வேகமாக அதில் ஏறி இறங்கியது. அப்போது பாரத் சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பிரசாந்துக்கு லேசான காயம் ஏற்பட்டது. 

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பாரத்தை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுதொடர்பாக சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாவூர்சத்திரம் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் உடல் நசுங்கி பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வீ.கே.புதூர்:

    தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறையை சேர்ந்தவர் செல்வ விநாயகம். இவரது மகன் விக்னேஷ் பாண்டியன் (வயது 28). கூலி தொழிலாளி. இவரும் தென்காசி  திரவியம் நகரை சேர்ந்த மெக்கானிக்கான விக்னேஷ் என்பவரும் நண்பர்கள்.

    விக்னேஷ் பாண்டியன் நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்தார். நேற்று இவர்கள் 2 பேரும் அந்த நாய்க்குட்டியை பாவூர்சத்திரத்தில் தனது நண்பர் வீட்டுக்கு கொண்டு சென்று விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். விக்னேஷ்  மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்.

    பாவூர்சத்திரம்  ராமச்சந்திரபட்டினம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து நாய்க்குட்டி துள்ளி சாலையில் குதித்துள்ளது. உடனே விக்னேஷ் மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார். பின்னால் அமர்ந்திருந்த விக்னேஷ் பாண்டியன் சாலையை கடந்து நாய்க்குட்டியை தூக்குவதற்கு சென்றுள்ளார்.

    அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சின் பின்புற சக்கரத்தில் சிக்கிய விக்னேஷ் பாண்டியன் மீது பஸ் ஏறி இறங்கியது. இதில் விக்னேஷ் பாண்டியன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.

    தகவலறிந்த பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×