வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கூந்தன்கு ளத்தை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் முத்துகிருஷ்ணன் (வயது19). கார் டிரைவர்.இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தென்னவநேரியை சேர்ந்த லிங்கபெருமாளிடம் ரூ 5,500 கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு
Published on

களக்காடு:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கூந்தன்கு ளத்தை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் முத்துகிருஷ்ணன் (வயது19). கார் டிரைவர்.

இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தென்னவநேரியை சேர்ந்த லிங்கபெருமாளிடம் ரூ 5,500 கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அதன் பின் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதுசம்பந்தமாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

சம்பவத்தன்று இரவில் முத்துகிருஷ்ணன், கூந்தன்குளம் அருகே சென்ற போது, அங்கு வந்த லிங்கபெருமாள் அவரை தாக்கி, அவரது செல்போனை பறித்து சென்று விட்டார்.

இதுகுறித்து அவர் மூலைக்கரைப்பட்டி போலீ சார் வழக்குப்பதிவு செய்து லிங்க பெருமாளை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com