நாங்குநேரி அருகே கொடைவிழா தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது29). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த நயினார் (30) குடும்பத்தினருக்கும் கடந்த 1 மாதத்திற்கு முன்பு நடந்த கோவில் கொடை விழாவின் போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
நாங்குநேரி அருகே கொடைவிழா தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
Published on

களக்காடு:

நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது29). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த நயினார் (30) குடும்பத்தினருக்கும் கடந்த 1 மாதத்திற்கு முன்பு நடந்த கோவில் கொடை விழாவின் போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில் சம்பவ த்தன்று நயினார், அவரது மகன் கந்தன் ஆகியோர் கார்த்திக் வீட்டுக்கு சென்று, அவரை அவதூறாக பேசினர். இதனை தட்டி கேட்ட கார்த்திக்கின் மனைவி வித்யா, அவரது தம்பி மனைவி அனிதா ஆகியோரையும் அவதூறாக பேசினர். அத்துடன் கார்த்திக்கின் மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்தனர்.

அரிவாளால் வீட்டின் கதவையும், குடிநீர் குழாயை யும், பாத்திரங்களையும் வெட்டி சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டனர்.

இதனைதொடர்ந்து ஆத்திரம் அடைந்த கார்த்திக், நயினாரை அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த நயினார் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுபற்றி 2 பேரும் மூன்றடைப்பு போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த நயினார், அவரது மகன் கந்தன், கார்த்திக் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com