களக்காடு அருகே வாலிபர் மீது தாக்குதல்

களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அப்துல் வஹாப் மகன் அக்பர் அலி (வயது 19). சம்பவத்தன்று இவர் தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகன் சுரேஷ் (22) அக்பர் அலியை அவதூறாக பேசினார்.
களக்காடு அருகே வாலிபர் மீது தாக்குதல்
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அப்துல் வஹாப் மகன் அக்பர் அலி (வயது 19). சம்பவத்தன்று இவர் தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகன் சுரேஷ் (22) அக்பர் அலியை அவதூறாக பேசினார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சுரேஷ், அக்பர் அலியை கல்லால் தாக்கினார்.

இதனால் காயமடைந்த அவர் களக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேசை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com