search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yash"

    • 2014 ஆம் ஆண்டு வெளியான கன்னட படமான உக்ரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார் பிரசாந்த் நீல்.
    • சலார் பாகம் ஒன்றை இயக்கி தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகினார்

    2014 ஆம் ஆண்டு வெளியான கன்னட படமான உக்ரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார் பிரசாந்த் நீல். அதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் படத்தை இயக்கினார்.

    இப்படத்தின் மூலம் உலகத்தையே கன்னட சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார். கே.ஜி.எஃப் பாகம் 1 மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு கே.ஜி.எஃப் பாகம் இரண்டை இயக்கினார்.

    கே.ஜி..எஃப் 2 ஒரு பான் இந்திய படமாக அமைந்தது. கே.ஜி.எஃப் திரைப்படம் கன்னட சினிமாவின் அதீக வசூலித்த படங்கள் பட்டியலில் 4-ஆம் இடத்தை பெற்றுள்ளது. 1500 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

    அடுத்ததாக சலார் பாகம் ஒன்றை இயக்கி தெலுங்கு சினிமாவில்  அறிமுகமாகினார். சலார் வெற்றியைத் தொடர்ந்து சலார் பாகம் இரண்டை நடிகர் பிரபாஸ் வைத்து இயக்கவுள்ளார். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஜூலை மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

    ஜூனியர் என்.டி.ஆரின் 31 படத்தை இயக்கவுள்ளார் அற்கடுத்து கே.ஜி.எஃப் இன் மூன்றாம் பாகத்தை இயக்கவுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • எபிக், ஆக்‌ஷன் மற்றும் ஃபேண்டசி கதைக்களத்தில் படம் இயக்குவதில் திறம் பெற்றவர் ராஜமௌலி
    • ராஜமௌலி இதில் குழந்தைப் போன்று முக பாவனைக் கொடுத்து மிக அழகாக ஆடியுள்ளார்.

    இந்திய சினிமாவை அடுத்தக்கட்டதிற்கு எடுத்துச் சென்ற பெருமை இயக்குனர் ராஜமௌலிக்கு உண்டு. எபிக், ஆக்ஷன் மற்றும் ஃபேண்டசி கதைக்களத்தில் படம் இயக்குவதில் திறம் பெற்றவர் ராஜமௌலி. 2009 ஆம் ஆண்டு வெளியான 'மாவீரன்' அதைத் தொடர்ந்து 'நான் ஈ' படத்தை இயக்கினார்.

    'பாகுபலி' மற்றும் 'ஆர் ஆர் ஆர்' திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் ராஜமௌலி அவரின் மனைவி ரமாவுடன் நடனமாடும் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

    அதில் தெலுங்கு பாடலான 'அந்தமைன்னா பிரேமரனி' பாட்டிற்கு நடனமாடியுள்ளனர். அவர்களின் குடும்ப திருமண நிகழ்ச்சியில் நடனமாடுவதற்கு பயிற்சி செய்த வீடியோவாகும் இது. ராஜமௌலி இதில் குழந்தைப் போன்று முக பாவனைக் கொடுத்து மிக அழகாக ஆடியுள்ளார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • அமீர் கான் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த 'தங்கல்' படத்தை இயக்கினார் இயக்குனர் நிதேஷ் திவாரி.
    • இத்திரைப்படத்தை மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

    அமீர் கான் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த 'தங்கல்' படத்தை இயக்கினார் இயக்குனர் நிதேஷ் திவாரி. இத்திரைப்படம் வசூலில் சாதனை படைத்துக் காட்டியது. இதுவரை 2000 கோடி ரூபாய் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து சுஷாந்த் சிங் நடிப்பில் வெளிவந்த 'சிச்சோரே' திரைப்படத்தை இயக்கினார்.

    தற்பொழுது 'ராமாயணா' திரைப்படத்தை இயக்கவுள்ளார். மிக பிரமாண்டமாக இத்திரைப்படம் உருவாகவுள்ளது. 2022 ஆம் ஆண்டு வெளியான பிரம்மாஸ்திரா படத்தை இயக்கிய நமித் மல்ஹோத்ரா இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இவருடன் இணைந்து பான் இந்தியன் நடிகரான யாஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.

    இத்திரைப்ப்டத்தில் சீதை கதாப்பாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கிறார், ராம் கதாப்பாத்திரத்தில் ரன்பிர் கப்பூர் நடிக்கிறார், அனுமான் கதாப்பாத்திரத்தில் பாபி டியோல் நடிக்கிறார், ராவணன் கதாப்பாத்திரத்தில் யாஷ் நடிக்கவிருக்கிறார்.

    இத்திரைப்படத்தை மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளனர். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய யாஷ், ராமாயணம் திரைப்படம் நேர்மையான மற்றும் விசுவாசமான சித்தரிப்பாக இருக்கும் என கூறியுள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் மற்றும் ஹான்ஸ் சிம்மர் இணைந்து இசையமைக்கவுள்ளனர். இத்திரைப்படம் 2025 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • யாஷ் அடுத்ததாக கீது மோஹன் தாஸ் இயக்கத்தில் டாக்சிக் படத்தில் நடித்து வருகிறார்.
    • யாஷ், சாய் பல்லவி, நவாசுதின் சித்திக், சம்யுக்தா மேனன், ஷைன் டாம் சாக்கோ போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.

    பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்து 2018 ஆம் ஆண்டு கே. ஜி. எஃப் சாப்டர் 1 படம் வெளியானது. பான் இந்தியன் படமாக இப்படம் அமைந்தது . கன்னட சினிமாவை அடுத்த கட்டத்திற்கு இப்படம் நகர்த்தி சென்றது. உலகமே திரும்பி பார்க்கும் வகையில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டது கே.ஜி.எஃப் திரைப்படம். கன்னடா திரைத்துறையில் அதிகம் வசூலித்த படம் இதுவே.

    யாஷ் இப்படத்திற்கு சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதற்கடுத்து கே ஜி எஃப் பகுதி 2 வெளியானது அப்படமும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.

    யாஷ் அடுத்ததாக கீது மோஹன் தாஸ் இயக்கத்தில் டாக்சிக் படத்தில் நடித்து வருகிறார். நிவின் பாலி நடித்து 2019 வெளியான 'மூத்தோன்' படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெங்கட் நாரயணன் மற்றும் யாஷ் இணைந்து கே வி என் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் கீழ் தயாரிக்கவுள்ளனர்.

    யாஷ், சாய் பல்லவி, நவாசுதின் சித்திக், சம்யுக்தா மேனன், ஷைன் டாம் சாக்கோ போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.

    இந்நிலையில் கரீனா கப்பூர் நேற்று நடந்த நேர்காணலில் அவர் ஒரு மிக பெரிய சவுத் இந்தியன் படத்தில் நடிக்கவுள்ளார் அப்படம் பான் இந்தியன் படமாக இருக்கப்போகிறது என கூறியுள்ளார்.  கரீனா கபூர்  டாக்சிக் படத்தில் நடிக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கபடுகிறது. ஏப்ரல் 2025 ஆம் ஆண்டு டாக்சிக் படம் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் யஷ்.
    • இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

    கன்னட திரையுலகில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'கே.ஜி.எப்' படத்தில் நடித்தவர் நடிகர் யஷ். இவருக்கு என்று கர்நாடகாவில் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதையடுத்து நேற்று அவரது 38-வது பிறந்த நாளை யொட்டி கர்நாடக மாநிலம் கடக் பகுதியில் உள்ள சுரங்கி என்ற இடத்தில் கட் அவுட் வைத்தபோது மின்சாரம் தாக்கி அனுமந்த ஹரிஜன் (21), முரளி நடவினமணி (20), நவீன்காஜி (19) ஆகிய 3 ரசிகர்கள் பலியானார்கள். மேலும் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.


    இந்த நிலையில் மின்சாரம் தாக்கி இறந்த ரசிகர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று நடிகர் யஷ் ஆறுதல் தெரிவித்தார். மேலும் ரசிகர்கள் யாரும் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம். உங்களின் அன்பை சமூக வலைதளங்களில் செல்போனில் காண்பித்தால் கூட போதும், மனதில் இருந்தால் போதும். கட் அவுட் வைத்து அதனை வெளிப்படுத்த வேண்டாம். இது போன்று எதிர்காலத்தில் யாரும் செயல்பட வேண்டாம் முற்றிலும் தவிர்த்து விடுங்கள் என்று அறிவுரையும் கூறினார்.


    இதற்கிடையே மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50ஆயிரமும் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்து உள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடகாவில் ராக்கிங் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் யஷ்.
    • இவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

    கர்நாடகாவில் ராக்கிங் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் யஷ்சுக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி கர்நாடக மாநிலம் கடக் மாவட்டம் லக்ஷ்மேஷ்வர் தாலுகா சுரங்கி என்ற கிராமத்தில் அவரது ரசிகர்கள் கட் அவுட் தயார் செய்து இருந்தனர். பின்னர் ரசிகர்கள் ஹனமந்த ஹரிஜன் (21), முரளி நடவினமணி (20), நவீன் காஜி (19) உள்பட 10 ரசிகர்கள் கட் அவுட்டை நிறுத்துவதற்காக தூக்கி சென்றனர்.


    அப்போது எதிர்பாராத விதமாக அந்த கட் அவுட் மின்சார வயரில் பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து 3 ரசிகர்களும் அலறி துடித்தனர். இதில் சம்பவ இடத்திலேயே ஹனமந்த ஹரிஜன், முரளி நடவினமணி, நவீன் காஜி ஆகியோர் பலியானார்கள். மற்றும் சிலர் லேசான காயத்துடன் உயிர் தப்பி கதறி அழுதனர். இதுபற்றி தெரிய வந்ததும் போலீசார் மற்றும் மின்வாரியத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.


    மின்சாரம் தாக்கி பலியானவர்கள்

    உடனடியாக மின்சார இணைப்பை துண்டித்து காயமடைந்த 7 ரசிகர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • நடிகர் யஷ்ஷின் அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
    • யஷ் நடிக்கும் 19-வது படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான 'கே.ஜி.எப்' படத்தின் மிகப்பெரிய வெற்றியின் மூலம் பிரபலமானவர் யஷ். இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்த நடிகர் யஷ்ஷின் அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.


    நடிகர் யஷ்ஷின் 19-வது படத்தை இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இதில், சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மாஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அதன்படி, இப்படத்திற்கு 'டாக்ஸிக்' (TOXIC) என்று படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இப்படம் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    இயக்குனர் கீது மோகன்தாஸ், தமிழில் சத்யராஜ் நடிப்பில் வெளியான 'பொம்முக்குட்டி அம்மாவுக்கு' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். அதுமட்டுமல்லாமல், மாதவன் நடித்த 'நள தமயந்தி' படத்தில் கதாநாயகியாக நடித்தார். மலையாளத்தில் 2019-ஆம் ஆண்டு நிவின் பாலி நடித்த 'மூத்தோன்' என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    • இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'.
    • 'சலார்' திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரித்துள்ளது.


    இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. 'சலார்' திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், இப்படம் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பிரசாந்த் நீல் 'கேஜிஎப் 3' குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், "கேஜிஎப் மூன்றாம் பாகம் உருவாவது உறுதி. அதற்கான கதையும் ரெடியாகிவிட்டது. அதற்கான அறிவிப்பை வெளியிடும் முன் நாங்கள் கதையை தயார் செய்ய முடிவு செய்தோம். யஷ் மிகவும் பொறுப்பான நபர், வெறும் வியாபார நோக்கத்துடன் மட்டுமே எதையும் செய்யமாட்டார். 'கேஜிஎப்' மூன்றாம் பாகத்தை நான் இயக்குவேனா இல்லையா என்று தெரியாது. ஆனால், அதில் கண்டிப்பாக யஷ் இருப்பார்" என்று தெரிவித்தார்.

    • இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இதில் ‘பாகுபலி’ நடிகர் பிரபாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


    கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து 'சலார்' திரைப்படத்தின் டீசர் ஜூலை 6-ம் தேதி காலை 5.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.


    இந்நிலையில், இயக்குனர் பிரசாந்த் நீல் ஒரு புதிய யூனிவர்ஸை உருவாக்குகிறாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அதாவது, கே.ஜி.எப். இரண்டாவது பாகத்தின் கிளைமேக்ஸில் யஷ் சென்ற கப்பல் மீது அதிகாலை 5 மணிக்கு தான் தாக்குதல் நடக்கும் என்று சுட்டிக்காட்டும் ரசிகர்கள் இதன் தொடர்ச்சியாக 'சலார்' இருக்குமோ என்று இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

    முன்னணி ரசிகர்களின் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் சாதனை படைத்த திரைப்படத்தின் டீசர் வெளியானது.
    பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 13-ம் தேதி வெளியான படம் 'கேஜிஎப்-2'. இதில் சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரசிகர்களின் மாபெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் பல முன்னணி ரசிகர்களின் படங்களை பின்னுக்கு தள்ளி வசூல் ரீதியாக சாதனை படைத்தது. மேலும், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பிய நிலையில், அமேசான் பிரைமில் 'கேஜிஎப் 2' படத்தை காண ரூ.199 தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 

    கேஜிஎப்2
    கேஜிஎப்2

    இந்நிலையில், தற்போது ஜூன் 3-ஆம் தேதி அமேசான் பிரைமில் ஐந்து மொழிகளில் 'கேஜிஎப் 2' வெளியாகவுள்ளது. இப்படத்தினை அமேசான் சந்தாதாரர்கள் இலவசமாக காணலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'கேஜிஎப் 2' படத்தின் டீசரை படக்குழு நேற்று வெளியிட்டு ரசிகர்களை கவந்துள்ளது.
    கே.ஜி.எப்.-2 படத்தில் வரும் ராக்கி பாய் வேடத்தில் ஈர்க்கப்பட்டு, சிறுவன் செய்த விபரீத செயலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.
    கே.ஜி.எப். என்ற தங்க வயல் கோட்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் கே.ஜி.எப். இதன் 2ம் பாகம் கே.ஜி.எப். சேப்டர் 2 என்ற பெயரில் புது வருட தினத்தில் வெளியானது. அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த, நடிகர் யஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூலில் பல நூறு கோடிகளை கடந்து சாதனை படைத்தது. வேகமும், விறுவிறுப்பும் கலந்து சண்டை பிரியர்களுக்கு தீனி போட்டது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. படம் வெளிவந்து ஒரு மாதத்திற்கு மேலான நிலையில், அதில் வரும் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. அவர்களது மனதில் இருந்து நீங்காத இடம் பெற்றுள்ளது. 

    கே.ஜி.எப்.-2
    கே.ஜி.எப்.-2

    இந்த படத்தினை தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள 15 வயது சிறுவன் 2 நாட்களில் 3 முறை பார்த்திருக்கிறான். அதில் ராக்கி பாய் வேடத்தில் வரும் நடிகர் யஷின் நடிப்பில் ஈர்க்கப்பட்டு உள்ளான். இதனால், ஒரு முழு சிகரெட் பேக்கையும் ஒரே மூச்சில் புகைத்துள்ளான். இதன் விளைவாக, அந்த சிறுவனுக்கு கடுமையான தொண்டை வலி மற்றும் இருமலும் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவனை ஐதராபாத்தில் உள்ள செஞ்சுரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதன்பின்பு மருத்துவர்கள் போராடி சிகிச்சை அளித்து சிறுவனை மீட்டுள்ளனர். அவனுக்கு கவுன்சிலிங்கும் நடத்தப்பட்டு உள்ளது. 

    கே.ஜி.எப்.-2
    கே.ஜி.எப்.-2

    இது பற்றி நுரையீரல் துறை மருத்துவர் ரோகித் ரெட்டி பாதுரி கூறும்போது, ராக்கி பாய் போன்ற வேடங்களை பார்த்து டீன்-ஏஜ் சிறுவர்கள் எளிதில் ஈர்க்கப்பட்டு விடுகின்றனர். இந்த இளஞ்சிறுவன், ஒரு முழு சிகரெட் பேக்கையும் புகைத்ததில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளான். நமது சமூகத்தில் திரைப்படங்கள் அதிக தாக்கம் ஏற்படுத்த கூடிய ஒன்றாக உள்ளது. சிகரெட் புகைத்தல், புகையிலை போடுதல் அல்லது மதுபானம் குடித்தல் போன்ற செயல்களை, கவர்ந்திழுக்கும் விசயம் ஆக்காமல் பார்த்து கொள்ளும் அறநெறி பொறுப்பு தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு உள்ளது. பெற்றோர்களும், தங்களுடைய குழந்தைகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். தங்களது குழந்தைகளின் செயல்களில் எந்த காரணிகளெல்லாம் தாக்கம் ஏற்படுத்துகிறது என கண்காணிக்க வேண்டும். பின்னர் வருந்துவதற்கு பதில், முன்பே அவர்களுக்கு புகைபிடித்தல், மதுபானம் அருந்துதல் போன்றவற்றின் தீய விளைவுகளை பற்றி எடுத்து கூறி, அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெற்றோர்கள் முக்கிய பங்காற்றுவது மிக அவசியம் என கூறியுள்ளார்.
    கேஜிஎஃப்-2 திரைப்படம் கடந்த மாதம் 14-ம் தேதி வெளியான நிலையில் திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி நடிப்பில் கடந்த மாதம் 14-ம் தேதி கேஜிஎஃப்-2 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் கேஜிஎஃப்-2 திரைப்படம் 1,500 கோடி ரூபாயை தாண்டி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதற்கிடையில், படத்தில் டிரைலரில் புகைப்பிடித்தலை ஊக்குவிக்கும் வகையிலும், புகைப்பிடித்தல் ஆரோக்கியமான சமூக பழக்கம் என்றும், புகைப்பிடித்தல் ஒரு ஸ்டைல் என்பது போலவும், புகைப்பிடித்தலை ஊக்குவிப்பது போலவும் உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டது. 

    கேஜிஎஃப்-2
    கேஜிஎஃப்-2

    இதனால், கேஜிஎஃப் 2 திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று கர்நாடக மாநில ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், கேஜிஎஃப்-2 திரைப்படம் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகிவிட்டதால் திரைப்படத்தை வெளியிட தடைவிதிக்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

    ×