'ராமாயணா'- ராவணன் வேடத்தில் கே.ஜி.எஃப் நாயகன்

அமீர் கான் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த 'தங்கல்' படத்தை இயக்கினார் இயக்குனர் நிதேஷ் திவாரி.இத்திரைப்படத்தை மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
'ராமாயணா'- ராவணன் வேடத்தில் கே.ஜி.எஃப் நாயகன்
Published on

அமீர் கான் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த 'தங்கல்' படத்தை இயக்கினார் இயக்குனர் நிதேஷ் திவாரி. இத்திரைப்படம் வசூலில் சாதனை படைத்துக் காட்டியது. இதுவரை 2000 கோடி ரூபாய் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து சுஷாந்த் சிங் நடிப்பில் வெளிவந்த 'சிச்சோரே' திரைப்படத்தை இயக்கினார்.

தற்பொழுது 'ராமாயணா' திரைப்படத்தை இயக்கவுள்ளார். மிக பிரமாண்டமாக இத்திரைப்படம் உருவாகவுள்ளது. 2022 ஆம் ஆண்டு வெளியான பிரம்மாஸ்திரா படத்தை இயக்கிய நமித் மல்ஹோத்ரா இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இவருடன் இணைந்து பான் இந்தியன் நடிகரான யாஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.

இத்திரைப்ப்டத்தில் சீதை கதாப்பாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கிறார், ராம் கதாப்பாத்திரத்தில் ரன்பிர் கப்பூர் நடிக்கிறார், அனுமான் கதாப்பாத்திரத்தில் பாபி டியோல் நடிக்கிறார், ராவணன் கதாப்பாத்திரத்தில் யாஷ் நடிக்கவிருக்கிறார்.

இத்திரைப்படத்தை மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளனர். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய யாஷ், ராமாயணம் திரைப்படம் நேர்மையான மற்றும் விசுவாசமான சித்தரிப்பாக இருக்கும் என கூறியுள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் மற்றும் ஹான்ஸ் சிம்மர் இணைந்து இசையமைக்கவுள்ளனர். இத்திரைப்படம் 2025 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com