search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செய்தி"

    • வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் ‘தி கோட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    • படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் தமிழ் புத்தாண்டிற்கு வெளியானது

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் 'தி கோட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷியாவில் நடந்து வருகிறது. படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் தமிழ் புத்தாண்டிற்கு வெளியானது. மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. யூடியூப் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருக்கிறது.

    இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    'தி கோட்' படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு 5, 6 முறை எங்கள் வீட்டுக்கு வந்து விஜய் நடித்து வரும் படத்தில் விஜயகாந்த் தோற்றம் இடம்பெறுவது பற்றி என்னிடம் அனுமதி கேட்டார்.

    ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலமாக விஜயகாந்தை ஒரு காட்சியில் நாங்கள் கொண்டு வர இருக்கிறோம். அதற்கு உங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டார். விஜய்யும் தேர்தலுக்குப் பிறகு என்னை சந்திப்பதாக கூறி இருந்தார்.

    விஜயகாந்த் இல்லாத நேரத்தில் அவருடைய இடத்தில் இருந்து நான் யோசிக்க வேண்டும் அவர் இருந்திருந்தால் அவர் விஜய்க்கு என்ன சொல்லி இருப்பார்? செந்தூரப்பாண்டி படத்தில் விஜய்யை கேப்டன் அறிமுகப்படுத்தியது உலகத்துக்கே தெரியும்.

    எஸ்.ஏ. சந்திரசேகர் மீதும் விஜய் மீதும் அவருக்கு எப்போதும் மிகப் பெரிய பாசம் உண்டு. எனவே ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலம் கேப்டனை படத்தில் கொண்டு வருவது குறித்து அவர்கள் கேட்கும் போது விஜயகாந்த் இருந்திருந்தால் கண்டிப்பாக மறுப்பு தெரிவித்து இருக்க மாட்டார்.

    விஜய் என்னை வந்து சந்திக்கும்போது நல்ல முடிவாக கூறுகிறேன் என்று சொன்னேன். வெங்கட் பிரபுவிடம் உனக்கும் விஜய்க்கும் என்னால் நோ சொல்ல முடியாது என்று அந்த நேர் காணலில் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எபிக், ஆக்‌ஷன் மற்றும் ஃபேண்டசி கதைக்களத்தில் படம் இயக்குவதில் திறம் பெற்றவர் ராஜமௌலி
    • ராஜமௌலி இதில் குழந்தைப் போன்று முக பாவனைக் கொடுத்து மிக அழகாக ஆடியுள்ளார்.

    இந்திய சினிமாவை அடுத்தக்கட்டதிற்கு எடுத்துச் சென்ற பெருமை இயக்குனர் ராஜமௌலிக்கு உண்டு. எபிக், ஆக்ஷன் மற்றும் ஃபேண்டசி கதைக்களத்தில் படம் இயக்குவதில் திறம் பெற்றவர் ராஜமௌலி. 2009 ஆம் ஆண்டு வெளியான 'மாவீரன்' அதைத் தொடர்ந்து 'நான் ஈ' படத்தை இயக்கினார்.

    'பாகுபலி' மற்றும் 'ஆர் ஆர் ஆர்' திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் ராஜமௌலி அவரின் மனைவி ரமாவுடன் நடனமாடும் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

    அதில் தெலுங்கு பாடலான 'அந்தமைன்னா பிரேமரனி' பாட்டிற்கு நடனமாடியுள்ளனர். அவர்களின் குடும்ப திருமண நிகழ்ச்சியில் நடனமாடுவதற்கு பயிற்சி செய்த வீடியோவாகும் இது. ராஜமௌலி இதில் குழந்தைப் போன்று முக பாவனைக் கொடுத்து மிக அழகாக ஆடியுள்ளார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • சேதமடைந்து கிடந்த விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க உத்தரவு
    • தற்காலிக கடைகளும் வைக்கப்பட்டுள்ளதை பார்த்து மேயர் மகேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் வேப்ப மூடு பூங்காவை மாநகராட்சி பராமரித்து வருகிறது. இந்த பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து காணப்படுவதாகவும் குப்பைகள் அதிக அளவு உள்ளதாகவும் மாலைமலரில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக மேயர் மகேஷ் இன்று காலை வேப்பமூடு பூங்காவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    சேதமடைந்து காணப்பட்ட விளையாட்டு உபகரணங்களை பார்வையிட்ட அவர், இதை உடனடியாக மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பூங்கா முழுவதும் சுற்றி ஆய்வு மேற்கொண்டபோது பூங்காவிற்குள் புதர்கள் வளர்ந்து காணப்பட்டது. அதை உடனடியாக அகற்றவும் நடவடிக்கை மேற்கொண்டார். அங்கு உள்ள குப்பை தொட்டிகள் நிரம்பி காணப்பட்டதை பார்த்த அவர், தினமும் அகற்ற அறிவுறுத்தினார்.

    கழிவறைக்கு சென்று பார்வையிட்ட மேயர் மகேஷ், தினமும் சுத்தம் செய்து பராமரிக்க உத்தர விட்டார். கழிவறையின் மேல் வளர்ந்துள்ள மரங்களை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து பூங்காவிற்கு வெளிப்புறம் உள்ள நாஞ்சில் பஜாரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அங்கு கடையின் முன் பகுதியில் கடைக்காரர்கள் ஆக்கிரமித்து செட்டுகள் அமைத்திருந்தனர். மேலும் தற்காலிக கடைகளும் வைக்கப்பட்டுள்ளதை பார்த்து மேயர் மகேஷ் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அதிகாரிகளை அழைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். மேலும் தற்காலிக கடைகள் அமைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார். நாஞ்சில் பஜாரை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வியாபாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வேப்பமூடு பூங்காவிற்கு நாகர்கோவில் நகரின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தோடு வந்து செல்கிறார்கள். இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் குழந்தைகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மோசமாக உள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு சில விளையாட்டு உபகரணங்கள் மட்டுமே சேதம் அடைந்துள்ளது.

    அதை உடனடியாக சீரமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பூங்காவில் உள்ள குப்பைகளை தினமும் அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாஞ்சில் பஜாரில் ஆக்கிரமிப்புகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றை அகற்ற கடைக்காரர்களுக்கு இன்று ஒரு நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றா விட்டால் மாநகராட்சி சார்பில் நாளை ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு சம்பந்தப்பட்ட கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள 53 பூங்காவையும் புணரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது ஆணையாளர் ஆனந்த மோகன், பொறியாளர் பாலசுப்ரமணியன், மாநகர் நல அதிகாரி ராம்குமார், மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×