`பென்ஸ்' படத்தில் இணையும் ஃபகத் பாசில் மற்றும் எஸ்.ஜே சூர்யா

மாநகரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இப்படத்தை ரெமோ மற்றும் சுல்தான் பட புகழ் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார்.
`பென்ஸ்' படத்தில் இணையும் ஃபகத் பாசில் மற்றும் எஸ்.ஜே சூர்யா
Published on

மாநகரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், `கைதி', `மாஸ்டர்', `விக்ரம்' மற்றும் `லியோ' படங்களை இயக்கி குறுகிய காலத்திலேயே பிரபல இயக்குனரானார்.

தற்போது ரஜினியின் 171 -வது படமான கூலி திரைப்படத்தை இயக்கவுள்ளார். திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. படங்கள் இயக்குவது மட்டுமல்லாமல் ஜி ஸ்குவாட் (G Squad)' தயாரிப்பு என்ற பெயரிலான சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 2023 -ல் 'பைட் கிளப்' மூலம் தயாரிப்பாளரானார்.

அதைத்தொடர்ந்து 'பென்ஸ்' என்ற புதிய படத்தை தயாரிக்கவுள்ளார் லோகேஷ். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தை ரெமோ மற்றும் சுல்தான் பட புகழ் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். இப்படத்தின் கூடுதல் அப்டேட் தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்தில் ஃபகத் பாசில் மற்றும் எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com