search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupathi"

    • நடிகர் தனுஷ் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி பகுதியில் நேற்று நடந்தது. இதனால் திருப்பதி மலைக்கு சென்ற பஸ்கள், பக்தர்களின் வாகனங்களை ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சாலை வழியாக போலீசார் திருப்பி விட்டனர். இந்த சாலை குறுகலானதாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.


    அதன் பின் படக்குழுவினர் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் முன் படப்பிடிப்பை நடத்த முற்பட்டனர். இதனால் அங்கு தரிசனத்துக்கு வந்த பக்தர்களை படக்குழுவினருடன் வந்திருந்த பவுன்சர்கள் அவசர அவசரமாக வெளியேற்றினர். தகவலறிந்த ஆந்திர மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பானு பிரகாஷ் ரெட்டி திருப்பதி போலீசில் புகார் கொடுத்தனர்.


    இந்நிலையில் பக்தர்கள் அவதி, போக்குவரத்து இடையூறு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்கு அளித்த அனுமதி ரத்து செய்யப்படுவதாக திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர ரெட்டி அறிவித்தார். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

    • கோவையில் இருந்து திருப்பதிக்கு இன்டர்சிட்டி ெரயில், வாரத்துக்கு 3 நாட்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
    • ெரயில், கோவை- திருப்பதி இன்டர்சிட்டி இயக்கப்படாத நாட்களில் இயக்கப்படுகிறது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஆகும்.

    திருப்பூர்:

    கோவையில் இருந்து திருப்பதிக்கு இன்டர்சிட்டி ெரயில், வாரத்துக்கு 3 நாட்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ெரயில், கொங்கு மண்டலத்திலுள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு பேருதவியாக வுள்ளது.இதனால் எப்போதுமே இந்த ெரயிலில் இடம் கிடைப்பது அரிதாகவே இருக்கும். இந்த ெரயிலின் இயக்கத்தை அதிகப்படுத்த வேண்டுமென்று பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது.

    இந்நிலையில் கோவை வழியாக திருப்பதிக்கு வாரம் இரு முறை ெரயில் புதிதாக இயக்கப்படவுள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இந்த ெரயிலை இயக்குவதற்கு, ெரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

    மொத்தம் 21 பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ள இந்த ரெயில் கொல்லத்தில் மதியம் புறப்பட்டு மாலை 6மணிக்கு கோவை வழியாக கடந்து செல்கிறது.கோவையில் இந்த ெரயிலில் ஏறினால் மறுநாள் அதிகாலை 3:20 மணிக்கு திருப்பதி சென்று விடலாம். மறு மார்க்கத்தில் திருப்பதியிலிருந்து இந்த ெரயில், செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் புறப்பட்டு கோவையை கடந்து கேரளம் செல்லும். திருப்பதியில் மதியம் 2:40 மணிக்கு இந்த ெரயில் புறப்படும். கோவைக்கு இரவு 10 மணிக்கு வந்தடையும்.

    கேரளத்தில் கொல்லத்தில் புறப்படும் இந்த ெரயில், மாவேலிக்கரை, சங்கனாச்சேரி, காயம்குளம், செங்கனூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம், ஆலுவா, திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய ரெயில் நிலையங்களிலும் , தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களிலும் நிறுத்தப்படும். ஆந்திர மாநிலம் சித்தூரில் நிற்கும்.

    இந்த ெரயில், கோவை- திருப்பதி இன்டர்சிட்டி இயக்கப்படாத நாட்களில் இயக்கப்படுகிறது என்பது, பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஆகும்.

    இதில் கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டத்திலுள்ள நகரங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டுமென்பது கொங்கு மண்டலத்தை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • பக்தர்கள் கால்நடையாக செல்ல படிக்கட்டுகளும், பேருந்து மூலமாக செல்ல சாலைகளும் உள்ளன
    • திறந்தவெளியை மூட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

    இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ளது திருப்பதி.

    இந்துக்களுக்கு மிக முக்கிய புனித தலமாக கருதப்படும் திருப்பதியில் உள்ள திருமலை எனும் மலையில் உள்ள உலக புகழ் பெற்ற கோயிலில், இந்துக்கள் வழிபடும் தெய்வமான திருமாலின் சன்னதி உள்ளது.

    இவரை தரிசிக்க நாடு முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி அங்கு வந்து செல்கின்றனர். இக்கோயிலின் நிர்வாகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) எனும் வாரியம் மேற்கொண்டு வருகிறது.

    திருப்பதியில் இருந்து மலை மீது உள்ள திருமலைக்கு பக்தர்கள் கால்நடையாக செல்ல படிக்கட்டுகளும், பேருந்து மற்றும் 2 அல்லது 4 சக்கர வாகனங்கள் மூலமாக செல்வதற்கு சாலைகளும் உள்ளன. படிக்கட்டுகள் வழியாக மேல் திருப்பதிக்கு செல்ல சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் ஆகும்.

    சென்ற வாரம் அங்கு படிக்கட்டு மார்க்கமாக திருமலைக்கு சென்ற ஒரு குடும்பத்தை சேர்ந்த லக்ஷிதா எனும் 6-வயது சிறுமி பெற்றோரிடமிருந்து சற்று விலகி நடந்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த மலைப்பகுதியிலுள்ள காடுகளில் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று அச்சிறுமியை தாக்கியதில், அச்சிறுமி உயிரிழந்தாள்.

    இச்சம்பவத்திற்கு பிறகு திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடந்தே செல்ல விரும்பும் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகளை தேவஸ்தான வாரியம் அறிவுறுத்தியிருக்கிறது.

    வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது:

    "நடந்து செல்ல விரும்பும் பக்தர்கள் உணவு பண்டங்களை வழியில் இரைக்க கூடாது. நடைபயணமாக படிக்கட்டில் ஏறிச்செல்லும் பக்தர்கள் இனி 100 பேர் கொண்ட ஒரு குழுவாக ஒன்றாக இணைந்துதான் செல்ல வேண்டும். தாக்க வரும் விலங்குகளிடமிருந்து தற்காத்து கொள்ள ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு கம்பு கொடுக்கப்படும்," இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    திருமலையிலுள்ள காடு, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டுக்களின் பக்கவாட்டில் உள்ள திறந்தவெளியை மூட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அதற்கான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றும் வாரியம் தெரிவிக்கிறது.

    • உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹஸ்தினாபூர் தொகுதியின் காங்கிரஸ் கட்சி பிரமுகரும் நடிகையுமானவர் அர்ச்சனா கவுதம்.
    • இவர் திருப்பதியில் தன்னை அவமானப்படுத்தியதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த தன்னை டிக்கெட் இல்லை என கூறி அவமானப்படுத்தியதாக காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும் நடிகையுமான அர்ச்சனா கவுதம் செல்ஃபி வீடியோ வெளியிட்டுள்ளார். திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹஸ்தினாபூர் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டவரும் நடிகையுமான அர்ச்சனா கவுதம் கடந்த வாரம் வியாழக்கிழமை திருப்பதி வந்துள்ளார்.


    அர்ச்சனா கவுதம்

    அப்போது செயல் அதிகாரி அலுவலகத்தில் தனது சிபாரிசு கடிதம் மூலம் டிக்கெட் பெற வந்த அவரிடம் அங்கிருந்த ஊழியர்கள் அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கி அதன் பிறகு வி.ஐ.பி. டிக்கெட் ரூ.500 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என அங்கு உள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட அர்ச்சனா கவுதம் அங்கிருந்த ஊழியர்கள் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி அந்த அலுவலகத்தில் இருந்தபடி செல்பி வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். இந்த வீடியோவை நடிகை அர்ச்சனா கவுதம் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


    அர்ச்சனா கவுதம்

    அதில் இந்து மத ஸ்தலங்கள் கொள்ளை அடிக்கும் கூடாரமாக மாறிவிட்டதாகவும். மதத்தின் பெயரால் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் விஐபி தரிசனம் என்ற பெயரில் ரூ.10,500 கேட்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


    • நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9-ஆம் நடைபெற்றதை அடுத்து நேற்று இருவரும் திருப்பதி சென்றனர்.
    • புதிய சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து விக்னேஷ் சிவன் மன்னிப்புக் கோரியுள்ளார்.

    நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவன், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா ஆகியோரின் திருமணம் ஜூன் 9-ந் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

    இவர்களது திருமணத்தில் முன்னணி திரைப் பிரபலங்கள் உள்பட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதற்கிடையே, நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணம் முடிந்ததை அடுத்து திருப்பதியில் நடைபெற்ற கல்யாண உற்சவத்தில் நேற்று கலந்து கொண்டனர்.

     அப்போது, திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்கு பின் புகைப்படம் எடுத்தபோது காலணிகள் அணிந்து வந்ததால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, நயன்தாரா மீது திருப்பதி திருமலை தேவஸ்தானம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முடிவுசெய்துள்ளதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி தெரிவித்தார்.

    இந்த நிலையில், விக்னேஷ் சிவன் திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளர். அதில், "புகைப்படம் எடுக்கும் போது காலணியுடன் இருந்ததை கவனிக்கவில்லை. அறியாமல் செய்த தவறுக்காக மன்னிப்பு கோருகிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் திருப்பதியில் மீண்டும் ஆயிரங்கால் மண்டபம் கட்டப்படும் என்று நடிகை ரோஜா கூறியுள்ளார். #YSRCongress

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் கோவிலுக்கு வெளியே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் நடிகை ரோஜா கூறியதாவது:-

    சந்திரபாபு நாயுடு தோல்வி பயத்தால் வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார். நமது சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது பாக். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் சந்திரபாபு நாயுடு, மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என கூறி வருகிறார். இது உயிரிழந்த ராணுவ வீரர்களை அவமானப்படுத்தும் செயல்.

    கோதாவரி புஷ்கரத்தின் போது சந்திரபாபு நாயுடு தனது விளம்பரத்திற்காக நடத்திய படப்பிடிப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் பலியானார்கள். அப்போது சந்திரபாபு நாயுடு ஏன் ராஜினாமா செய்யவில்லை. அவர் மீது எதற்காக வழக்கு பதிவு செய்யவில்லை.

    கொண்டவீடு பகுதியில் சந்திரபாபு நாயுடு வந்து செல்வதற்காக அதிகாரிகள் ஹெலிபேட் அமைத்தனர். என்னுடைய நிலத்தில் யாரை கேட்டு ஹெலிபேட் அமைத்தீர்கள் என்று கேட்ட விவசாயி கோட்டீஸ்வரராவை போலீசார் அடித்துக் கொலை செய்துள்ளனர்.

    இந்த சம்பவத்தில் சந்திரபாபு நாயுடு மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. அவருக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என பேசி வருகிறார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் எதிரே இருந்த தொன்மை வாய்ந்த ஆயிரங்கால் மண்டபம் இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் கட்டுவதற்காக அமராவதி ஜகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆயிரங்கால் மண்டபத்தில் வெங்கடேஸ்வர சுவாமி பக்தர்களுக்கு ஆசீர்வதிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    அப்படிப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தை சந்திரபாபு நாயுடு தனது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி இடித்து தரைமட்டமாக்கினார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அதே இடத்தில் மீண்டும ஆயிரங்கால் மண்டபம் கட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #YSRCongress

    உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கும்பாபிஷேக திருவிழாவையொட்டி, ஆகஸ்ட் 9 முதல் அடுத்த 9 நாட்களுக்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. #TirupatiTemple
    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற திருப்பதி கோவிலில் கும்பாபிஷேக விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி 12 ஆண்டுகள் கழித்து இந்த வருடம் திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், திருப்பதியில் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதியிலிருந்து திருமலைக்கு வாகனம், மலைப்பாதை வழியாக பக்தர்கள் நடந்து செல்லவும் அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் மற்றும் பயணிகளுக்கு மாற்று பாதைக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும், ஆகஸ்ட் 17-ம் தேதி அதிகாலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TirupatiTemple
    சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 27-ந் தேதியன்று, திருப்பதி கோவில் 12 மணிநேரம் மூடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 27-ந் தேதியன்று, திருப்பதி கோவில் 12 மணிநேரம் மூடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    வரும் 27-ந் தேதி இரவு 11.54 மணி முதல் மறுநாள் அதிகாலை 3.49 மணிவரை முழுசந்திர கிரகணம் நிகழ உள்ளது. வழக்கமாக கிரகண காலங்களில் கிரகணம் தொடங்குவதற்கு 6 மணிநேரத்திற்கு முன் திருப்பதி கோவில் மூடப்படுவது வழக்கம்.

    அதன்படி 27-ந் தேதி மாலை 5 மணிக்கு திருப்பதி கோவில் நடை சாத்தப்பட உள்ளது. 28-ந் தேதி அதிகாலை 4.15 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுத்தி, புண்யாவசனம் செய்த பின் சுப்ரபாத சேவை நடைபெறும்.

    அன்று காலை 7 மணிமுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    இதையொட்டி 27-ந் தேதி கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை உள்ளிட்ட சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. 27-ந் தேதி இரவு பவுர்ணமி கருட சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஜூலை 28-ந் தேதி அதிகாலை சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, கொலு, பஞ்சாஞ்கம் படித்தல் உள்ளிட்டவை ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்பட உள்ளது.
    மத்திய அரசின் உதன் திட்டத்தின் கீழ் 2-வது கட்டமாக திருப்பதியில் இருந்து வேலூருக்கு சென்னை வழியாக விமான போக்கு வரத்து சேவை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #Airportservice

    சென்னை:

    மத்திய விமான போக்குவரத்து துறை உதன் திட்டத்தின் கீழ் பல்வேறு நகரங்களுக்கு இடையே விமான போக்கு வரத்து சேவையை ஏற்படுத்தி வருகிறது.

    அதன்படி சமீபத்தில் சென்னை - சேலம் இடையே விமான சேவை தொடங்கப்பட்டது. தனியார் விமான நிறுவனம் விமானங்களை இயக்கி வருகிறது.

    மேலும் சென்னை- வேலூர், சென்னை-தஞ்சாவூர் இடையே விமான சேவை தொடங்க பணிகள் நடந்து வருகிறது. வேலூரில் உள்ள அப்துல்லாபுரம் என்ற இடத்தில் விமான நிலையம் அமைகிறது.

    இதற்கிடையே உதன் திட்டத்தின் கீழ் 2-வது கட்டமாக திருப்பதியில் இருந்து வேலூருக்கு சென்னை வழியாக விமான போக்கு வரத்து சேவை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதனால் வேலூர் விமான நிலையத்தில் 70 இருக்கைகள் கொண்ட விமானம் தரை இறங்கும் வகையிலான ஓடுபாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் 20 இருக்கைகள் கொண்ட சிறிய விமானங்கள் தரை இறக்கும்படியான ஓடுபாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து விமான போக்குவரத்து துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னைக்கு அருகே உள்ள வேலூரில் விமான நிலையம் அமைவது மிகவும் வசதியானதாகும். அங்கு விமானங்களை பார்க்கிங் செய்து கொள்ளலாம். வேலூர் விமான நிலையத்தில் 70 இருக்கைகள் கொண்ட விமானங்களை கையாளும் வகையில் ஓடுபாதை தரம் உயர்த்த வேண்டும் என்றார்.

    கடந்த 4 ஆண்டுகளில் வேலூரில் கல்வி நிறுவனங்கள், தொழில் வளர்ச்சி காரணமாக சென்னைக்கு போக்குவரத்து சேவை அதிகரித்து இருக்கிறது.

    அதன்படி உதன் திட்டத்தில் வேலூர் - சென்னை இடையே விமான போக்குவரத்து சேவைக்கு ஓப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது திருப்பதி செல்லும் பக்தர்கள் வசதிக்காக திருப்பதி-வேலூர் இடையே விமான சேவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. #Airportservice

    ×