search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "archana gautam"

    • உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிக்பாஸ் புகழ் அர்ச்சனா கவுதம் போட்டியிட்டார்.
    • அர்ச்சனாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் மீரட் போலீசார் சந்தீப்சிங் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் மாநாடு கடந்த மாதம் நடந்தது. இதில் நாடு முழுவதிலும் இருந்து காங்கிரஸ் பிரதிநிதிகள் சுமார் 15 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதில் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிக்பாஸ் புகழ் அர்ச்சனா கவுதம் கலந்து கொண்டார். அப்போது பிரியங்கா காந்தியை சந்திக்க அர்ச்சனா கவுதம் அவரது உதவியாளரான சந்தீப் சிங்கிடம் பேசி உள்ளார்.


    பிரியங்கா காந்தியுடன் அர்ச்சனா கவுதம்

    பிரியங்கா காந்தியுடன் அர்ச்சனா கவுதம்

    ஆனால் அர்ச்சனாவை, பிரியங்கா காந்திக்கு அறிமுகப்படுத்த சந்தீப் சிங் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அர்ச்சனாவை, சந்தீப் சிங் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், அநாகரீக வார்த்தைகளால் பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அர்ச்சனா புகார் கூறினார். இது தொடர்பாக அர்ச்சனாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் மீரட் போலீசார் சந்தீப்சிங் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்தி பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஷிவ் தாக்கரேயை அர்ச்சனா கவுதம் முகத்தில் கைகளால் குத்தி கடுமையாக தாக்கி உள்ளார்.
    • இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நடிகர் சல்கான்கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் இந்நிகழ்ச்சி தொடர்ந்து சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறது. 10 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய இயக்குனர் சஜித்கானை பிக்பாசில் போட்டியாளராக சேர்த்ததற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி நடிகை மந்தனா கரிமி சினிமாவை விட்டே விலகுவதாக அறிவித்தார். சஜித்கானை பிக்பாசில் இருந்து நீக்கும்படி டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மலிவால் மத்திய மந்திரி அனுராக் தாக்கூருக்கு கடிதமும் எழுதினார்.

     

    இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் தற்போது அடிதடி சண்டை நடந்துள்ளது. பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள நடிகை அர்ச்சனா கவுதமுக்கும், இன்னொரு போட்டியாளரான ஷிவ் தாக்கரே என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியது. ஷிவ் தாக்கரேயை அர்ச்சனா கவுதம் முகத்தில் கைகளால் குத்தி கடுமையாக தாக்கி உள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு உடல்நிலையும் குன்றியது. இதையடுத்து அர்ச்சனா கவுதமை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினர். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹஸ்தினாபூர் தொகுதியின் காங்கிரஸ் கட்சி பிரமுகரும் நடிகையுமானவர் அர்ச்சனா கவுதம்.
    • இவர் திருப்பதியில் தன்னை அவமானப்படுத்தியதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த தன்னை டிக்கெட் இல்லை என கூறி அவமானப்படுத்தியதாக காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும் நடிகையுமான அர்ச்சனா கவுதம் செல்ஃபி வீடியோ வெளியிட்டுள்ளார். திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹஸ்தினாபூர் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டவரும் நடிகையுமான அர்ச்சனா கவுதம் கடந்த வாரம் வியாழக்கிழமை திருப்பதி வந்துள்ளார்.


    அர்ச்சனா கவுதம்

    அப்போது செயல் அதிகாரி அலுவலகத்தில் தனது சிபாரிசு கடிதம் மூலம் டிக்கெட் பெற வந்த அவரிடம் அங்கிருந்த ஊழியர்கள் அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கி அதன் பிறகு வி.ஐ.பி. டிக்கெட் ரூ.500 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என அங்கு உள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட அர்ச்சனா கவுதம் அங்கிருந்த ஊழியர்கள் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி அந்த அலுவலகத்தில் இருந்தபடி செல்பி வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். இந்த வீடியோவை நடிகை அர்ச்சனா கவுதம் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


    அர்ச்சனா கவுதம்

    அதில் இந்து மத ஸ்தலங்கள் கொள்ளை அடிக்கும் கூடாரமாக மாறிவிட்டதாகவும். மதத்தின் பெயரால் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் விஐபி தரிசனம் என்ற பெயரில் ரூ.10,500 கேட்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


    ×