search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nayanwikki"

    • நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9-ஆம் நடைபெற்றதை அடுத்து நேற்று இருவரும் திருப்பதி சென்றனர்.
    • புதிய சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து விக்னேஷ் சிவன் மன்னிப்புக் கோரியுள்ளார்.

    நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவன், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா ஆகியோரின் திருமணம் ஜூன் 9-ந் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

    இவர்களது திருமணத்தில் முன்னணி திரைப் பிரபலங்கள் உள்பட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதற்கிடையே, நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணம் முடிந்ததை அடுத்து திருப்பதியில் நடைபெற்ற கல்யாண உற்சவத்தில் நேற்று கலந்து கொண்டனர்.

     அப்போது, திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்கு பின் புகைப்படம் எடுத்தபோது காலணிகள் அணிந்து வந்ததால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, நயன்தாரா மீது திருப்பதி திருமலை தேவஸ்தானம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முடிவுசெய்துள்ளதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி தெரிவித்தார்.

    இந்த நிலையில், விக்னேஷ் சிவன் திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளர். அதில், "புகைப்படம் எடுக்கும் போது காலணியுடன் இருந்ததை கவனிக்கவில்லை. அறியாமல் செய்த தவறுக்காக மன்னிப்பு கோருகிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

    • நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
    • நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் கடும் கட்டுப்பாட்டுக்குள் நடந்துள்ளது.

    நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வந்த நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். அதன்பின், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

    நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை ஓடிடி தளம் ஒன்று ஒளிபரப்பு செய்ய இருப்பதால் திருமணத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.


    நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம்

    நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம்

    ஹோட்டலை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ரசிகர்கள், செய்தியாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. திருமணத்திற்கு வந்திருந்த பிரபலங்கள் அனைவரும் வாயிலில் இருக்கும் பாதுகாவலர்களிடம் டிஜிட்டல் அழைப்பிதழ் மூலம் தங்கள் மொபைல் போனில் வைத்திருக்கும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். செல்போன்களை ஒப்படைத்து விட்டு தான் செல்ல வேண்டும் என கட்டுப்பாடு இருந்ததால் செல்போன்களை கண்காணிப்பாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு உள்ளே சென்றனர்.

    போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடாது என்பதற்காக விஜபிகளுக்கு முதலைப் பண்ணை வழியாக தனி நுழைவு வாயில் ஏற்படுத்தப்பட்டது. கடற்கரை ஓரமாக உள்ளூர் வாசிகள் நடந்து சென்றதை அனுமதிக்காததால் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×